Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘முழு ஊரடங்கு’ - எதற்கெல்லாம் அனுமதி? அனுமதி இல்லை?

சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் எவையெல்லாம் இயங்கும், இயங்காது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

‘முழு ஊரடங்கு’ - எதற்கெல்லாம் அனுமதி? அனுமதி இல்லை?

Saturday April 25, 2020 , 2 min Read

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை தொடங்கி ‘முழு ஊரடங்கு’ செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து நேற்றைய தினம் அறிவித்தது.


நகர்ப்புறங்களில் ஊரடங்கு மேலும் கடுமையாக்கினால் மட்டுமே இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால், தற்போதுள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் தமிழக அரசு இந்த முடிவுகளை எடுத்தது.

chennai lockdown

முழு ஊரடங்கு எங்கே? எப்போது?


  • சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில் முழுமையான ஊரடங்கு 26-4-2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29-4-2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.


  • சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் முழுமையான ஊரடங்கு 26ஆம் தேதி காலை 6 மணி முதல் 28ஆம் தேதி செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.


சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் போன்ற பெரு நகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

முழு ஊரடங்குக் காலத்தில் எதற்கெல்லாம் அனுமதி? அனுமதி இல்லை?

1. மருத்துவமனைகள் மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் மருந்தகங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறைச் சார்ந்த பணிகள்.


2. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை காவல் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மின்சாரத் துறை ஆவின் உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.


3. இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்கு தேவைப்படும் 33% பயனாளர்கள் மட்டும் அனுமதி.


4. பெட்ரோல் மற்றும் டீசல் பன்குகள் (காலை 8 மணி முதல் மதியம் 12வரை), கேஸ் ஏஜன்சி அலுவலகம், ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகம் மற்றும் கிடங்குகள்.


5. அம்மா உணவகங்கள் தானியங்கி பணம் வழங்கும் ஏடிஎம் சென்டர்கள் வழக்கம்போல் செயல்படும்.


6. உணவு ஹோட்டல்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.


7. முதியோர் மாற்றுத்திறனாளி ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.


8. ஆதரவற்றோருக்கு மாவட்ட நிர்வாகங்கள் சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community kitchens) தொடர்ந்து செயல்படும்.


9. ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.


10. கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். காய்கறி, பழங்கள் விற்கும் தள்ளுவண்டிகளுக்கு மட்டுமே அனுமதி. மற்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி இல்லை.


11. அச்சு மற்றும் ஊடக நிறுவனங்கள் அனுமதி.


மேலே குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்டவைகள் தவிற மற்ற அனைத்தும் இயங்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இந்த ‘முழு ஊரடங்கு’ சமயத்தில் மிக மிக அத்தியாவசிய அல்லது அவசர விஷயங்களுக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர அனுமதி என தமிழக அரசு தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இந்த 5 மாநகரப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால் அவர்கள் வாகனம் பறிமுதல் செய்வதுடன் தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும் தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்தொற்று என்பதால் இதைக் கட்டுப்படுத்த தம்ழக அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தர முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.