Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஒரு மாத பென்ஷன் தொகையை நிவாரண நிதிக்கு வழங்கிய 95 வயது மூதாட்டி!

இந்தக் கொடிய வைரஸ் பரவலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு தன்னால் இயன்ற வகையில் உதவவேண்டும் என்று விரும்பினார்.

ஒரு மாத பென்ஷன் தொகையை நிவாரண நிதிக்கு வழங்கிய 95 வயது மூதாட்டி!

Friday April 10, 2020 , 1 min Read

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக செல்வந்தர்கள் பலர் லட்சங்களிலும் கோடிகளிலும் நன்கொடை வழங்குவதை தலைப்புச் செய்திகளாக பார்த்திருப்போம். அதைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த 95 வயது மூதாட்டியின் பங்களிப்பு.


மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் 95 வயதான ந்காக்லியானி இந்தியாவில் கொரோனா நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்தவர்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்ட இவர் மனம் வருந்தினார். இந்தக் கொடிய வைரஸ் பரவலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு தன்னால் இயன்ற வகையில் உதவவேண்டும் என்று விரும்பினார்.

1

இது குறித்து அவரது மருமகள் பிடிஐ உடனான உரையாடலில் குறிப்பிடும்போது,

“அவர் தனது ஒரு மாத பென்ஷன் தொகையான 14,500 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கத் தீர்மானித்தார்,” என்றார்.

அதுமட்டுமின்றி இந்த வயதிலும் இவர் தையல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் திறனைக் கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில் தானே முகக்கவசம் தயாரித்து வழங்கியுள்ளார்.


இவரது மருமகள் இதுகுறித்து கூறும்போது, “பணத்தை வழங்கியது மட்டுமல்லாது Aizawl பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு 30-க்கும் அதிகமான முகக்கவசங்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்துவதற்காக வழங்கியுள்ளார்,” என்றார்.


மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா இந்த மூதாட்டியின் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.

”95 வயது மூதாட்டியான ந்காக்லியானி தனது ஒரு மாத பென்ஷன் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியதுடன் தேவைப்படுவோருக்கு வழங்குமாறு கூறி முகக்கவசங்களையும் கொடுத்துள்ளார். அவரது பங்களிப்பிற்கு தலைவணங்குகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் அனைவரும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு தங்களால் இயன்ற வகையில் உதவ முன்வரவேண்டும் என்பதற்கு இவரைப் போன்றோர் உந்துதலளிக்கின்றனர்.