Pfizer, BioNTech இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை 90% வெற்றி!
Pfizer மற்றும் BioNTech இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் வைரஸ் பாதிப்பில் இருந்து 90 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாக இந்நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
Pfizer மற்றும் BioNTech இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் வைரஸ் பாதிப்பில் இருந்து 90 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாக இந்நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
2020-ம் ஆண்டில் உலகளவில் 50 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிக்க உள்ளதாகவும் 2021ம் ஆண்டில் 1.3 பில்லியன் டோஸ் விநியோக்க இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
“தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் எங்கள் தடுப்பூசி கோவிட்-19 பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது என ஆரம்பகட்ட முடிவுகள் நிரூபித்துள்ளன,” என்று Pfizer தலைவர் மற்றும் சிஇஓ ஆல்பர்ட் போர்லாலா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்த பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவேண்டும் என்கிற எங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உலகமே ஆவலுடன் தடுப்பூசியை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில் இந்த முக்கிய மைல்கல்லை நாங்கள் எட்டியுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாத இறுதியில் தொடங்கப்பட்டது. இதற்காக மொத்தம் 43,538 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் சிறப்பாக இருப்பதால் 90 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
இறுதிகட்ட பரிசோதனைகள் முடிந்த பின்னர் அவசர கால பயன்பாட்டிற்குத் தகுதி பெற இரண்டு மாதங்கள் பாதுகாப்பு தொடர்பான தரவுகளை சேகரித்து வருவதாக Pfizer நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் இதற்கான தகுதி பெறும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
Pfizer மற்றும் BioNTech இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியின் பரிசோதனைகளை நிபுணர்கள் இன்னமும் மதிப்பீடு செய்யவில்லை. இந்நிறுவனங்கள் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் தொடர்பான முழுமையான தரவுகளை மதிப்பீட்டிற்காக வெளியிட திட்டமிட்டுள்ளன.