இரவில் உணவு டெலிவரி; பகலில் ஓவியம்!
இருவேறு அவதாரம் எடுத்துள்ள விஷாலை பாராட்டாதவர்களே இல்லை.
ஒருவருக்கு பல்வேறு விஷயங்களில் ஆர்வம் இருப்பினும் முழுநேரமாக ஒரு பணியில் ஈடுபட்டவாறே தனக்கு ஆர்வமுள்ள இசை, நடனம் போன்ற இதர பகுதிகளில் ஈடுபட நேர மேலாண்மை முக்கியமானது. முப்பத்தொன்பது வயதான விஷால் சாம்ஜி உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றவாறே அவருக்கு ஆர்வம் அதிகமுள்ள ஓவியம் வரைவதில் ஈடுபட்டுள்ளார். இவர் இரவில் உணவு டெலிவர் செய்கிறார். பகல் பொழுதில் ஓவியம் தீட்டுகிறார்.
மும்பையில் வசிக்கும் இவர் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக ஓவியம் தீட்டிவருகிறார். இவர் தனக்கு விருப்பமான பணியில் முழுநேரமாக ஈடுபடுவது குறித்து எப்போதும் சிந்தித்ததில்லை.
“நான் பகல் நேரத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக பணியாற்றுகிறேன். இரவு வேளையில் ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவர் ஊழியராக பணியாற்றுகிறேன். ஸ்விக்கி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. ஓவியத்திற்கான ஆர்டர் மூலம் என்னால் வெறும் 10,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. ஐந்து பேர் கொண்ட என்னுடைய குடும்பச் செலவுகளை நிர்வகிக்க இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதால் இருவேறு பணிகளில் ஈடுபட்டுள்ளேன்,” என்று தெரிவித்ததாக ’தி பெட்டர் இந்தியா’ குறிப்பிடுகிறது.
பலர் இவ்வாறு வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளபோதும் விஷால் குறித்து நிகில் ஜார்ஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டபோது விஷால் பிரபலமானார். நிக்கில் டிவிட்டரில், “இவர் பெயர் விஷால். இவர் இன்று எனக்கு ஸ்விக்கி ஆர்டரை டெலிவர் செய்தார். இவர் ஒரு ஓவியர். உங்களுக்கு ஓவியம் வரையவேண்டிய தேவை இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும். இவரைத் தொடர்புகொள்ள உதவுகிறேன். இந்தத் தகவலை அதிகம் பகிர்ந்துகொண்டு இவருக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த டிவிட்டர் பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 5,800-க்கும் அதிகமான முறை மறுட்வீட் செய்யப்பட்டது. ஸ்விக்கி நிறுவனமே இந்தப் பதிவை மறுட்வீட் செய்து அவரது திறமையைப் பாராட்டி தேவையான ஆதரவும் அளித்துள்ளது.
ஓவியங்களின் விலை குறித்தும் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றுவது குறித்து விஷால் கூறும்போது,
“உருவப்படங்கள், இயற்கைக்காட்சிகள், சுவரோவியங்கள் போன்றவற்றை வரைய எனக்கு ஆர்டர்கள் கிடைக்கின்றன. எனினும் இதைக் கொண்டு செலவுகள் அனைத்தையும் நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. நான் ஆர்டர்கள பெற்றுக்கொள்ளத் தொடங்கியபோது 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தேன். தற்போது வரை இந்தக் கட்டணத்தில் அதிக மாற்றமில்லை. எனவே வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறேன்,” என கூரியுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA