ஏஐ துணையுடன் இனி உங்கள் ஆடைகளை நீங்களே வடிவமைக்க உதவும் சென்னை ஸ்டார்ட் அப் Ordrobe
சென்னையைச் சேர்ந்த ஆன்லைன் பேஷன் ஸ்டார்ட் அப் நிறுவனம் Ordrobe, செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு தனித்தன்மை மிக்க, உயர் தரத்திலான பேஷன் ஆடைகளை அளிக்கும் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஆன்லைன் பேஷன் ஸ்டார்ட் அப் நிறுவனம் Ordrobe, செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு தனித்தன்மை மிக்க, உயர் தரத்திலான பேஷன் ஆடைகளை அளிக்கும் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் தனித்தன்மையைக் கொண்டாடும் வகையில் அவர்களின் தனித்தன்மைக்கு ஏற்ப பேஷன் வடிவமைப்பை தேர்வு செய்ய வழி செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பேஷன் நிறுவனங்களிடம் இருந்து தனித்து விளங்கும் அம்சங்களுடன் தங்கள் பிராண்ட் செயல்படுவதாக Ordrobe தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிறுவன இணையதளம் வாயிலாக வாடிக்கையாளர்கள் அதி நவீன செயற்கை நுண்ணறிவுத்திறனை கொண்டு தங்கள் கோரிக்கைக்கு ஏற்ற ஆடைகளைக் கூட்டாக வடிவமைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் சமர்பிக்கும் கோரிக்கைகளுக்கு ஏற்ப, அவர்கள் கண் முன் ஆடைகளின் தோற்றம் உருவாகும். இந்த தனிப்பட்ட தன்மை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், கலைஞர்களுடன் இணைந்து அவர்களின் படைப்புகளை வெளிப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கலைஞர்களுடன் இணைந்து செயல்படுவதோடு, அவர்கள் ஆக்கங்களை வாடிக்கையாளர்கள் அணியும் வாய்ப்பையும் அளிக்கிறது. நிறுவன இணையதளத்தின் "OR-Tist" பகுதியில் இந்த கூட்டு முயற்சி மற்றும் ஆக்கங்களை காணலாம். நண்பன் ஒருவர் வந்த பிறகு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மெர்ச் பாட்னராக செயல்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“Ordrobe நிறுவன பயணம், பேஷன் பட்ஜெட் அல்லது ஒரே மாதிரி தன்மையின் கட்டுப்பாடுகளுடன் இருக்கக் கூடாது எனும் நம்பிக்கையுடன் துவங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு புதுமையாக்கம் மற்றும் கலைஞர்களின் கூட்டு முயற்சி ஆகியவை மூலம் சுய வெளிப்பாடுகளின் புதிய எல்லைகளை தொடுகிறோம். ஏஐ சார்ந்த வடிவமைப்பு மற்றும் கலைஞர்கள் கூட்டு முயற்சியால் உருவாகும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையை சொல்லும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்த உதவும்,” என இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. முகமது அக்ரம் தெரிவித்துள்ளார்.
“பேஷன் என்பது ஆடைகள் மட்டும் அல்ல என நம்புகிறோம். ஏஐ சார்ந்த வடிவமைப்பு மூலம் எல்லோரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கிறோம்,” என இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான அவினாஷ் குமார் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan