6 மாதங்களில் 1 லட்ச ரூபாயை 12 லட்ச ரூபாயாக மாற்றிய பங்கு எது தெரியுமா?
Deep Diamond India Ltd நிறுவனம் 10 ரூபாய் என்றிருந்த அதன் பங்குகளின் அடிப்படை மதிப்பினைப் பிரித்து 1 ரூபாயாக மாற்றியுள்ளது.
சமீபகாலமாக பங்கு சந்தை வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையிலும் Deep Diamond India Ltd பங்குகளில் இந்த நிலவரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது. இதனால் இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்துள்ளன.
இந்நிறுவனம் அதன் பங்குகளை 10 பங்குகளாக பிரித்துள்ளது. இதன் விளைவாக இந்நிறுவனத்தின் பங்குகள் 800 சதவீதம் அதிகரித்துள்ளன.
இந்நிறுவனம் எடுத்த முடிவின்படி, பங்குகள் வழங்கப்பட்டு, அக்டோபர் மாதம் 3-ம் தேதி நிலவரப்படி இந்தப் பங்கின் விலை 136.95 ரூபாயை எட்டியுள்ளது.
இந்நிறுவனம் 10 ரூபாய் என்றிருந்த அதன் பங்குகளின் அடிப்படை மதிப்பினை (ஃபேஸ் வேல்யூ) பிரித்து 1 ரூபாயாக மாற்றியுள்ளது. அதாவது, இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 ரூபாயிலிருந்து 1 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கேற்ப பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
6 மாதங்களில் 830 சதவீத லாபம்
கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் 1190 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது. அதேநேரம் கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு 800 சதவீத லாபத்தை வழங்கியுள்ளது.
2022-ம் ஆண்டில் மட்டும் பார்த்தோமானால், இந்த பங்குகள் 800 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் கிட்டத்தட்ட 830 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது. அதாவது, கடந்த 6 மாதங்களில் முதலீட்டாளர்களின் பணம் 12 மடங்கு அதிகரித்திருக்கிறது.
Deep Diamond India Limited 1993-ம் ஆண்டு சிறியளவில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம். இதன் சந்தை மூலதனம் (மார்க்கெட் கேப்) 42 கோடி ரூபாய். கடந்த 52 வாரங்களில் இந்நிறுவனத்தின் பங்குகளின் அதிகபட்ச மதிப்பு 142.20 ரூபாய், குறைந்தபட்ச மதிப்பு 11 ரூபாய்.
பங்கு பிரித்தல்
ஒரு பங்கினை பல பங்குகளாக பிரிப்பதுதான் பங்கு பிரித்தல். இதுபோல் பிரிப்பதன் மூலம் முன்பைக் காட்டிலும் பலர் இந்தப் பங்குகளை எளிதாக வாங்க முடிகிறது. உதாரணத்திற்கு 100 ரூபாய் மதிப்புடைய ஒரு பங்கு 1:10 என்கிற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது என வைத்துக்கொள்ளலாம். அப்போது ஒரு பங்கின் மதிப்பு 10 ரூபாயாக மாறும். அதேசமயம், அதற்கேற்ப பங்குகளின் எண்ணிக்கை உயரும். இதனால் மேலும் பலர் இதில் முதலீடு செய்வார்கள். அதன் விளைவாக பணப்புழக்கம் அதிகரிக்கும்.
எத்தனையோ நிறுவனங்கள் பங்கு பிரித்தல் முறையைப் பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு தேதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. ஒன்று பதிவு தேதி (ரெக்கார்ட் டேட்). மற்றொன்று முன்னாள் ஈவுத்தொகை தேதி (ex-date).
டிவிடெண்ட் விநியோகத்திற்கு தகுதியான பங்குதாரர்களை ஒரு நிறுவனம் இறுதி செய்யும் நாள் பதிவு தேதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளிலோ அல்லது அதற்கு முன்னரோ நீங்கள் பங்குகளை வாங்கியிருந்தால் மட்டுமே உங்களால் அதுதொடர்பான பலனைப் பெறமுடியும்.
முன்னாள் ஈவுத்தொகை தேதி என்பது பதிவு தேதிக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்னால் வரும். எனவே இந்த நாட்களில் நீங்கள் பங்குகளை வாங்கினால், அந்த பங்குகள் பதிவு தேதி வரை உங்களது டிமேட் அக்கவுண்டில் வந்துவிடும்.
தொகுப்பு: ஸ்ரீவித்யா
30,000 ரூபாய் முதலீடு செய்து இன்று கோடீஸ்வரர் ஆக்கிய பங்கு எது தெரியுமா?