Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அணு ஆயுதங்களின் பாதிப்பை, தூசி துகள்கள் குறைக்கும்: இந்திய பெண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு!

அணு ஆயுதங்களின் பாதிப்பை, தூசி துகள்கள் குறைக்கும்: இந்திய பெண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு!

Tuesday October 13, 2020 , 1 min Read

அணு ஆயுதங்களின் பாதிப்பை, தூசி துகள்கள் குறைக்கும் என்பதை இந்தியாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டாக்டர் மீரா சதா நிருபித்துள்ளார்.


பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தங்களின் குடும்பச் சூழல்களால் ஆராய்ச்சி படிப்புகளை பாதியில் நிறுத்தி விட்டு, பின்பு மீண்டும் தொடர்ந்தாலும், அதற்கான வாய்ப்புகளை அறிவியல் மற்றும் தொழில் நுட்புதுறை வழங்குகிறது.


நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த டாக்டர் மீராத சதா, ஓராண்டு இடைவெளிக்குப் பின் தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.

அணு ஆயுதங்களின் பாதிப்பை, தூசி துகள்கள் மூலம் குறைக்க முடியும் என்பதை இவர் தனது ஆய்வின் மூலம் நிருபித்துள்ளார்.

லண்டனின் சமீபத்தில் வெளியிடப்பட்ட இவரது ஆய்வு கட்டுரையில், அணு குண்டு வெடிப்பு நிகழும் போது, அதன் சுற்றளவில் ஏற்படும் பாதிப்புகளை, தூசி துகள்கள் செலுத்தி குறைக்க முடியும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.


இது குறித்து டாக்டர் சதா கூறுகையில், எனது பி.எச்.டி ஆய்வின் போது, அணு குண்டுவின் அதிர்வலைகளையும், அவற்றின் பாதிப்பை, தூசி துகள்கள் குறைப்பது பற்றியும் ஆராய்ந்தேன்.

”ஆன்மீகத்தை நோக்கிய அறிவியல்’என்ற புத்தகத்தில், அணு குண்டுவின் கதிரியக்க பாதிப்பை, செயல் இழக்கச் செய்யும் வகையில், மற்றொரு குளிர்ச்சியான குண்டை அறிவியலால் உருவாக்க முடியுமா? என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், கேட்டிருந்தார். இந்த கேள்விதான், என்னை இந்த ஆராய்ச்சி குறித்த சிந்திக்க வைத்தது,’’ என்று டாக்டர் மீரா சதா கூறினார்.

இந்த ஆய்வுக் கட்டுரையை கீழ்கண்ட இந்த இணைப்பில் பார்க்கலாம்.

[Publications link: https://royalsocietypublishing.org/doi/10.1098/rspa.2020.0105


மேலும் தகவல்களுக்கு, டாக்டர் மீரா சதாவை, meerachadha01@gmail.com என்ற இ-மெயில் தொடர்பு கொள்ள முடியும்.


தகவல்: பிஐபி