12 நாடுகளில் வாடிக்கையாளர்கள்; 40,000 சதுர அடி அலுவலகம்: சென்னை சாஸ் ஸ்டார்ட்-அப் Facilio வளர்ச்சிக்கதை!
கடந்த 5 ஆண்டுகளாக பிராபர்டி மேனேஜ்மெண்ட் துறை பராமரிப்பில் டெக்னாலஜி புகுத்தி செயல்பட்டுவரும் Facilio ஸ்டார்ட்-அப் நிறுவனம் தற்போது அடுத்தகட்டத்துக்கு வளர்ந்திருக்கிறது. அண்மையில் 40,000 சதுர அடியில் புதிய அலுவலகத்தை திறந்தது.
சாஸ் நிறுவனங்களின் தலைநகரம் சென்னை என்று சொல்லும் அளவுக்கு பல சாஸ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இங்கு தொடங்கப்பட்டுவருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக பிராபர்டி மேனேஜ்மெண்ட் துறை பராமரிப்பில் டெக்னாலஜி புகுத்தி செயல்பட்டுவரும் 'ஃபெசிலியோ' (
) ஸ்டார்ட்-அப் நிறுவனம் தற்போது அடுத்தகட்டத்துக்கு வளர்ந்திருக்கிறது. அண்மையில் 40,000 சதுர அடியில் புதிய அலுவலகத்தை திறந்தது.Facilio நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பிரபு ராமசந்திரன். அவருடன் இணைந்து ராஜவேல் சுப்பிரமணியம், யோகேந்திரபாபு வெங்கடபதி, மற்றும் கிருஷ்ணமூர்த்தி ரங்கசுவாமி இந்த ஸ்டார்-அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
தங்களது ஸ்டார்ட்-அப் பயணம் பற்றி யுவர்ஸ்டோரி தமிழிடம் விரிவாக உரையாடினார் பிரபு ராமசந்திரன். அதில், நிறுவனத்தின் தொடக்கம், தற்போதைய நிலைமை, நிதி நிலைமை என பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
Facilio தொடங்கிய பயணம்
ஜோஹோ நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினோம். அங்கு பெரிய நிறுவனங்களின் கணக்குகளை நாங்கள் கையாண்டு வந்ததால், அது சம்பந்தமான நிறுவனம் தொடங்க வேண்டும் எனத் திட்டமிட்டோம்.
ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரை மூன்று கட்டிங்கள் உள்ளன. கட்டுமானம், விற்பனை மற்றும் பராமரிப்பு. கட்டுமானத்தை பொறுத்தவரை தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவருகிறது.
அதேபோல, விற்பனை மற்றும் பயன்பாட்டில் பல டெக்னாலஜி நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றன. ஆனால், ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரை, பராமரிப்பு பிரிவில் இன்னும் டெக்னாலஜி பெரிய அளவில் வளரவில்லை. இன்னும் பரமாரிப்பு வேலை மனிதர்கள் உதவியுடன் நடைபெற்றுவருகிறது.
நம்முடைய நேரத்தை பெரும்பாலும் எதேனும் ஒரு ரியல் எஸ்டேட் உடன்தான் இணைந்திருக்கிறோம். வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, மால், விமான நிலையம், ஓட்டல், ரிசார்ட் என எங்கு சென்றாலும் ரியல் எஸ்டேட்தான். ஆனால், அங்கு பராமரிப்பில் மேலும் கவனம் செலுத்தலாம் என்பதுதான் நிலைமை.
ரியல் எஸ்டேட் பராமரிப்பில் எனர்ஜி, நீர் நுகர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. பருவநிலை குறித்து சர்வதேச அளவில் விவாதம் எழுந்திருக்கும் சூழலில் ஒவ்வொரு நிறுவனங்களும் எரிசக்தி சேமிப்பில் கவனம் செலுத்துகின்றன. இதில் டெக்னாலஜி உதவியின்றி சேமிப்பு என்பது சாத்தியமில்லை.
உதாரணத்துக்கு ஒரு மாலில் அந்த சமயத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிகைக்கு ஏற்ப ஏசி அளவை நிர்ணயம் செய்யலாம். லிப்ட், மின்விளக்குகள் பயன்பாட்டினை சீர் செய்யலாம். மேலும், எங்களுடைய தொழில்நுட்பம் மூலம் ஒரு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த தகவல்களை துல்லியமாக அறியலாம்.
உதாரணத்துக்கு ஒரு லிப்ட் 10 வினாடிகளில் அடுத்த தளத்துக்கு செல்வதுதான் சரியான நேரம் என வைத்துக்கொள்வோம். ஒருவேளை ஒரு வினாடி கூடுதலாக செலவானாலும் இயந்திரத்தில் எதோ கோளாறு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். இதன் மூலம் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வதன் மூலம் ஒரு மெஷினின் பயன்பாட்டு காலத்தை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
மேலும், எரி சக்தி மீதமாவதால் பெரிய கட்டுமானங்களை எங்களுடைய டெக்னாலஜி மூலம் நிர்வகிக்க முடியும் என பிரபு தெரிவித்தார். இதன் மூலம் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சேமிக்க முடியும்.
ஒரு கட்டுமானத்தில் உள்ள அனைத்து சாதனங்களையும் மனிதர்களின் துணையின்றி 24 மணி நேரமும் கண்காணித்து ரியல் டைமில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய முடியும்.
நிதி நிலைமை
2017ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் நியூயார்க்கை தலைமையாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. துபாய், சிட்னி, சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. சுமார் 12 நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் 35 மில்லியன் டாலர் முதலீட்டை இந்த நிறுவனம் திரட்டி இருக்கிறது. டைகர் குளோபல், ஆக்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இதில் முதலீடு செய்திருக்கின்றன.
இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளள், ஐரோப்பா உள்ளிட்ட பல பகுதிகளில் பெசிலியோவுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக வருமானம் வருகிறது.
வழக்கமாக சாஸ் நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருந்துதான் அதிக வருமானம் இருக்கும். ஆனால், உங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகிறதே? என்னும் கேள்விக்கு,
“மத்திய கிழக்கு பகுதிதான் ரியல் எஸ்டேட்டுகான மையம் என்பதால் அந்த பகுதியில் கவனம் செலுத்தினோம். இந்த சந்தையை பிடித்துவிட்டால் மற்ற சந்தைகளில் எளிதாக கவனம் செலுத்த முடியும்,” என பிரபு கூறினார்.
கோவிட்க்கு முன்பே நிறுவனம் செயல்படத் தொடங்கியது. கோவிட் காலத்தில் ரியல் எஸ்டேட்தான் அதிகம் பாதித்தது. எப்படி சமாளித்தீர்கள் என்னும் கேள்விக்கு, 2020-ம் ஆண்டு எதுவும் நடக்கவில்லை. ஆனால், நாங்கள் புராடக்டை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்தோம். அதன் பிறகு, ஹெல்த்துக்கு முக்கியதுவம் கொடுக்கத் தொடங்கவிட்டார்கள்.
“அதனால் எங்களுடைய புராடக்ட்க்கு தேவை உருவானது. கடந்த ஆண்டு இரு மடங்கு வளர்ச்சி அடைந்தோம். நடப்பு ஆண்டிலும் இரு மடங்கு வளர்ச்சி அடைவோம். விரைவில் மில்லியன் டாலர் வருமானம் என்னும் இலக்கை அடைவோம்,” என பிரபு தெரிவித்தார்.
பொருளாதார மந்த நிலை வரும் என்னும் பேச்சு இருக்கிறதே என்னும் கேள்விக்கு அது குறித்து எதுவும் சொல்ல முடியாது, என்றார்.
மந்த நிலை வந்தால் அனைவரும் பாதிப்படைவோம். ஆனால், எரிசக்திக்கான முக்கியத்துவம் அதிகரித்துவருவதால் ஒவ்வொரு நிறுவனங்களும் எரிசக்தியை சேமிப்பதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. அதனால் எங்களால் வளர்ச்சி அடைய முடியும் என நினைக்கிறேன்.
மேலும், மந்த நிலை வரும்போதுதான் டெக்னாலஜியின் பங்கு அதிகரிக்கும் என்று கணிக்கிறேன். அதோடு, சில இடங்களுக்கான தேவை இருந்துகொண்டுதான் இருக்கும். அலுவலக தேவையில் குறைவு இருக்கலாம். ஆனால் மால், விமான நிலையம், கோல்ட் ஸ்டோரேஜ் போன்றவை எப்படியும் நடத்திதான் ஆக வேண்டும் என்பதால் எங்களால் வளர முடியும் என நினைக்கிறோம்.
அதனால்தான் பெரிய அலுவலகத்துக்கு மாறி இருக்கிறோம். 2022ம் ஆண்டில் 100 ஊழியர்களை வேலைக்கு எடுத்தோம். 23-ம் ஆண்டு 100 பேர்கள் வரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறோம் என பிரபு தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் சாப்ட்வேர் சந்தை என்பது 30 பில்லியன் டாலராக வாய்ப்புள்ள துறை. இதில் வளர்ச்சியடையும் நிறுவனமாக ஃபெசிலியோ திகழ்கிறது.
சிறு நிறுவனங்கள் கல்லா பெட்டியை நிரப்ப உதவிடும் சென்னை ஸ்டார்ட்-அப் ‘Gallabox'