இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி; 26 வயதான அபிலாஷா பராக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
ஹரியானாவைச் சேர்ந்த 26 வயதான அபிலாஷா பராக் இந்திய இராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த 26 வயதான அபிலாஷா பராக் இந்திய இராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அபிலாஷா பராக், இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக பொறுப்பேற்றார். யார் இவர் என விரிவாக பார்க்கலாம்...
யார் இந்த அபிலாஷா பராக்?
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷா பராக். இவரது தந்தை ஓம் சிங், இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தையைப் போலவே ராணுவத்தில் ஆர்வம் கொண்ட அபிலாஷா, இந்திய விமானப் படையில் கடந்த 2018-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்ந்தார்.
கேப்டன் பராக் சனாவரில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவி ஆவார். 2016 ஆம் ஆண்டு டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி டெக் பட்டப்படிப்பை முடித்தார்.
2018 ஆம் ஆண்டில், அவர் சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் இருந்து இந்திய இராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார். கார்ப்ஸ் ஆஃப் ஆர்மி ஏர் டிஃபென்ஸ் உடனான அவரது இணைப்பின் போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் ராணுவ விமானப் பாதுகாப்புக்கு வண்ணங்களை வழங்குவதற்கான கன்டிஜென்ட் கமாண்டர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராணுவ ஏர் டிஃபென்ஸ் யங் ஆபீசர்ஸ் படிப்பில் ‘ஏ’ கிரேடிங்கையும், ஏர் டிராஃபிக் மேனேஜ்மென்ட் மற்றும் ஏர் லாஸ் படிப்பில் 75.70 சதவீதமும் பெற்று, தனது முதல் முயற்சியிலேயே பதவி உயர்வு தேர்வான பார்ட் பியில் தேர்ச்சி பெற்றார்.
“2018 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சியை முடித்த பிறகு, ராணுவ விமானப் படையைத் தேர்வு செய்தேன். நான் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, நான் தரைப் பணிக்கு மட்டுமே தகுதியானவள் என்று எனக்குத் தெரியும், ஆனால், நான் பைலட் ஆப்டிட்யூட் பேட்டரி தேர்வு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட பைலட் தேர்வு முறைக்கு தகுதி பெற்றுள்ளேன் என்று குறிப்பிட்டேன். என் இதயத்தில் எங்கோ, இந்திய ராணுவம் பெண்களை போர் விமானிகளாக சேர்க்கத் தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நான் எப்போதும் அறிவேன்,” என்கிறார்.
இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி:
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள காம்பாட் ஆர்மி ஏவியேஷன் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றார். இதில் பயிற்சி பெற்ற 36 போர் விமானிகளுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி மே 26ம் தேதி அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணுவ ஏவியேஷன் டிஜி ஏ கே சூரி கலந்து கொண்டு பதக்கங்களை வழக்கினார். இந்த விழாவில் பதக்கம் வென்ற முதல் பெண் அதிகாரி அபிலாஷா பாரக்கும் அடங்குவார்.
இதுகுறித்து கேப்டன் அபிலாஷா தனது அனுபவத்தை பகிர்கையில்,
"இராணுவ கன்டோன்மென்ட்களில் வளர்ந்தவள், சீருடையில் உள்ளவர்களால் சூழப்பட்டபோது, இது எப்போதும் ஒரு சாதாரண விவகாரமாகத் தோன்றியது. 2011ல் என் அப்பா ஓய்வு பெற்ற பிறகு, எங்கள் குடும்பம் ராணுவ வாழ்க்கையை விட்டு வெளியேறும் வரை அது வித்தியாசமானது என்பதை) நான் உணர்ந்ததே இல்லை. 2013ல் இந்தியன் மிலிட்டரி அகாடமியில் என் மூத்த சகோதரனின் பாசிங் அவுட் அணிவகுப்பைப் பார்த்த பிறகுதான் அந்த உணர்வு வலுப்பெற்றது. என் வாழ்நாள் முழுவதும் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும்,” என்கிறார்.
1987ம் ஆண்டு ஆபரேஷன் மேக்தூத்தின் போது, அபிலாஷாவின் தந்தை அமர் போஸ்ட்டில் இருந்து பானா டாப் போஸ்ட் வரை ரோந்துக் குழுவை வழிநடத்தி சென்றுள்ளார். அப்போது வானிலை மோசமானதால், அவருடைய பெருமூளை ஒடிமாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது இந்திய ராணுவ விமானப்படையின் விமானம் தான் அவரை சரியான நேரத்திற்கு மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. இதனால் இந்திய ராணுவப்படைக்கு கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்த அபிலாஷா, இன்று கடும் போராட்டங்களை கடந்து தனது நன்றிக்கடனை செலுத்த தயாராகியுள்ளார்.
தொகுப்பு - கனிமொழி