ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி: வெராண்டா லெர்னிங்கின் Pathfinder திட்டம் அறிமுகம்!
தனிநபர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை என்று வெராண்டா லேர்னிங் கருதுகிறது. இலவசக் கல்வியை வழங்குவதன் மூலம், நிதிரீதியாக நலிவுற்ற தனி நபர்களுக்கு தரமான கற்றல் அனுபவங்களுக்கான கதவுகளைத் திறக்க வெராண்டா பாத்ஃபைண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் விதத்தில் 'வெராண்டா லெர்னிங்' என்ற கல்வி நிறுவனம் ஏழை மாணவர்களின் கல்விக்கென்றே Pathfinder என்ற தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் கல்வியை வளர்த்தெடுப்பதே இதன் நோக்கம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத் தொடர்பாக வெராண்டா லர்னிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தனிநபர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை என்று வெராண்டா லேர்னிங் கருதுகிறது. இலவசக் கல்வியை வழங்குவதன் மூலம், நிதிரீதியாக நலிவுற்ற தனி நபர்களுக்கு தரமான கற்றல் அனுபவங்களுக்கான கதவுகளைத் திறக்க வெராண்டா பாத்ஃபைண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெராண்டா பாத்ஃபைண்டர் நிறுவனத்தின் தலைவர் ஸ்மிதா குமரன் கூறும்போது,
“மாணவர்களின் நோக்கம் மற்றும் பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். மாணவர்களுக்கான தேர்வு நடைமுறைகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருந்தது. எங்கள் மாணவர்கள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதைவிட முக்கியமாக, வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். சுருக்கமாக, ஒரு மாணவரின் நோக்கம் ஒரு முக்கிய அளவுகோலாக இருந்தது,” என்றார்.
வெராண்டா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சுரேஷ் கல்பாத்தி கூறும்போது,
“நாம் சமூகத்திற்கு ஏதாவது திருப்பி அளிக்க வேண்டும் என்பதைப் பற்றியதுதான் பாத்ஃபைண்டர். பணப்பற்றாக்குறையினால் ஏழை மாணவர்களு தரமான கல்வி கிடைப்பதில்லை. பாத்ஃபைண்டரின் ஒரு பகுதியாக அங்கம் வகிக்கும் மாணவர்களுக்கு தகுதி மற்றும் வழிமுறை அடிப்படையிலான மதிப்பீட்டின் அடிப்படையில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது," என்றார்.
Veranda Pathfinder மூலம், பொருளாதார அழுத்தங்கள் என்ற அளவுகோல்களைக் கடந்த பரந்துபட்ட இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம், கல்வி ரீதியாக எந்த மாணவரும் பின் தங்கி விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.
இந்த முன்முயற்சி எங்கள் அனைத்து வணிக முயற்சிகளுடன் ஒருங்கிணைந்ததாகும், மேலும் கல்வி மற்றும் அதிகாரம் பெற்ற சமூகத்திற்கு பங்களிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.
2024-ம் நிதியாண்டில் இருமடங்கிற்கும் அதிக லாபம் ஈட்டிய சென்னை 'வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ்'