சுரங்கத்துறையில் சென்னை 'கருடா ஏரோஸ்பேஸ்' - இந்தியா முழுவதும் விரைவில் செயல்பாடு!
இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு மற்றும் ட்ரோன் சேவை நிறுவனம் கருடா ஏரோஸ்பேஸ், சுரங்கத்துறையில் முக்கிய ஒப்பந்தங்களை பெற்று, இந்தியா முழுதும் சுரங்கங்களில் ட்ரோன் சேவையை செயல்படுத்த உள்ளது.
இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு மற்றும் ட்ரோன் சேவை நிறுவனம் சென்னையைச் சேர்ந்த 'கருடா ஏரோஸ்பேஸ்,' சுரங்கத்துறையில் முக்கிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.
அண்மையில் இந்நிறுவனம் குஜராத் தாதுப்பொருள் மேம்பாட்டு ஆணையம், மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கழகம், ஒடிஷா சுரங்க கழகம் மற்றும் தனியார் சுரங்க நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு ஒப்பந்தங்கள் பெற்றுள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேம்பட்ட தரவுகள் ஆய்வு மூலம் சுரங்க செயல்பாடு செயல்திறம் மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன்கள், சுரங்கத்துறையில் கொள்ளலவு ஆய்வு, 2டி மற்றும் 3டி வரைபடமாக்கல் சேவை, திட்ட கண்காணிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் உதவி வருகிறது. எடுக்கப்பட்ட தாதுப்பொருட்களை துல்லியமாக அளவிட இந்த தொழில்நுட்பம் உதவுவதோடு சுரங்கங்களில் பாதுகாப்பிற்கும் வழி செய்கிறது. ட்ரோன் வழி செயல்பாடுகள் வழக்கமான செயல்முறையைவிட பல்வேறு சாதகங்களை கொண்டுள்ளன.
இந்திய பொருளாதாரத்தில் சுரங்க செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதன் செயல்முறை மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது முக்கியமாகிறது. இந்நிலையில், சுரங்கங்கள் நிறுவனங்கள் செயல்பாடு மேம்பாட்டிற்கு தேவையான ட்ரோன் சேவைகளை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் வழங்குகிறது. இதன் தரவுகள் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டில் உதவுகிறது. பாதுகாப்பு சோதனைகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ட்ரோன்கள் உதவுகின்றன.
"சுரங்கத்துறையில் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது முக்கிய மைல்கல்," என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் சி.இ.ஓ. அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளார். ஐபிஓவுக்கு தயாராக உள்ளோம். சுரங்கத்துறை செயல்பாடுகள் எங்கள் நிலையை வலுவாக்கிக் கொள்ள உதவும்,” என்றும், அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமாக கருடா ஏரோஸ்பேஸ் விளங்குகிறது.
Edited by Induja Raghunathan