வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளிய கெளதம் அதானி: உலகின் 5வது பணக்காரராக மாறினார்!
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, 91 வயதான முதலீட்டாளர் வாரன் பஃபெட்டை பின்னுக்குத்தள்ளிவிட்டு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான கெளதம் அதானி உலகிலேயே 5வது பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, 91 வயதான முதலீட்டாளர் வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான கெளதம் அதானி உலகிலேயே 5வது பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர், துறைமுகங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, சமீபத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார்.
இம்மாத தொடக்கத்தில் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, 97.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் கெளதம் அதானி 11வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டார்.
மேலும், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், Q4FY22 இல், கௌதம் அதானியின் நிகர மதிப்பு வாரன் பஃபெட்டின் நிகர மதிப்பான 18.7 பில்லியன் டாலரை விட வேகமாக வளர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில்
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இன்று வாரன் பஃபெட்-யைப் பின்னுக்குத்தள்ளி 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வாரன் பஃபெட்டின் நிகர சொத்து மதிப்பு 121.7 பில்லியன் டாலராக இருக்கும் அதே நேரத்தில், அதானியின் நிகர மதிப்பு 123.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி,
அதானியின் மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக அவரை மாற்றியுள்ளது. கெளதம் அதானின் நிகர மதிப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியை விட 19 பில்லியன் டாலர்கள் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 104.2 பில்லியன் டாலர் உடன் 8வது இடத்தில் உள்ளார்.
உலகில் அதானியை விட நான்கு பேர் மட்டுமே பணக்காரர்களாக உள்ளனர். இதில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 130.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்திலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும், உலகின் முன்னணி ஃபேஷன் பிராண்டான லூயி விட்டன் நிறுவனத்தின் சிஇஓவுமான பெர்னார்ட் அர்னால்ட் $167.9 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் $170.2 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
எப்போதும் போல் முதலிடத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், 269.7 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.