Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே உயர்வு - சவரன் விலை ரூ.54 ஆயிரத்தைத் தாண்டுமா?
சென்னையில் இன்று, செவ்வாய்க் கிழமை (18.06.2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கத்தின் விலைகள் சற்றே கூடியுள்ளன. இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது.
சென்னையில் இன்று, செவ்வாய்க் கிழமை (18.06.2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கத்தின் விலைகள் சற்றே கூடியுள்ளன. இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது.
தங்கம் விலை நிலவரம், செவ்வாய்க்கிழமை (18.06.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 கூடி 6,695 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.6 அதிகரித்து 7,304 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.53,560 ஆகவும் உள்ளது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.50 அதிகரித்து ரூ.66,950 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.60 கூடி ரூ.73,040-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.48 உயர்ந்து ரூ.58,432-ற்கும் விற்பனையாகின்றன.
சென்னையில் வெள்ளி விலையும் செவ்வாய்க்கிழமை (18-06-24) சற்றே கூடியுள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.96 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.400 அதிகரித்து ரூ.96,000ஆகவும் உள்ளது.
காரணம்:
தங்கம் பெரும்பாலும் இறக்குமதியையே நம்பியிருப்பதால் உலக சந்தையின் தாக்கம் இந்தியச் சந்தையிலும் இருக்கும். இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கெடுபிடிகளை விதித்திருப்பதால் விலைகள் தொடர்ந்து குறைந்து வந்தாலும் அவ்வப்போது சிறிய அளவில் விலைகள் உயர்ந்தும் வருவது சகஜம். உதாரணமாக இன்று சென்னையில் விலைகள் சற்றே உயர்ந்தாலும் மும்பையில் சரிவு நிலையே நீடிக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,690(மாற்றம்ரூ.5அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,560(மாற்றம்ரூ.40அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,304(மாற்றம்ரூ.6அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,432(மாற்றம்ரூ.48அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,620(மாற்றம்ரூ.10குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.52,960(மாற்றம்ரூ.80குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,222(மாற்றம்ரூ.11குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,776(மாற்றம்ரூ.88குறைவு)