Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் குறைந்தது!
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.920 சரிவு கண்ட பிறகு நேற்று மீண்டும் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.800 சரிவு கண்டதைத் தொடர்ந்து இன்றும் ஆபரணத் தங்கம் விலை ரூ.120 குறைந்தது.
தங்கம் விலை இன்று (சனிக்கிழமை, 04-05-2024) காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் சுத்தத் தங்கதின் விலை குறைந்தன. ஒரே நாளில் தங்கம் விலை ரூ.920 சரிவு கண்ட பிறகு நேற்று மீண்டும் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.800 சரிவு கண்டதைத் தொடர்ந்து இன்றும் ஆபரணத் தங்கம் விலை ரூ.120 குறைந்தது.
தங்கம் விலை நிலவரம் (04.05.2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் 15 ரூபாய் குறைந்து 6,600 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 16 ரூபாய் குறைந்து ரூ.7,200-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.52,800 ஆக விற்பனை ஆகிறது.
சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத்தங்கம் 10 கிராம் விலை ரூ.150 குறைந்து ரூ.66,000 என்றும் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.160 குறைந்து ரூ.72,000-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.128 குறைந்து 57,600-ற்கும் விற்பனையாகின்றன.
அதே போல், வெள்ளி விலையிலும் சனிக்கிழமையான இன்று ஒரு கிராம் வெள்ளி விலை சற்றே குறைந்து ரூ.86.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.86,500 ஆகவும் உள்ளன.
தங்கம் விலை சரிவுக்கான காரணம்:
உடனடி விற்பனைச் சந்தையில் தேவைப்பாடு குறைவு காரணமாக விலை குறைந்துள்ளது. பரந்துபட்ட பொருளாதார காரணியாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணிந்த சூழ்நிலை காரணமாக தங்கம் முதலீட்டிலிருந்து சற்றே விலகி மாற்று முதலீடுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருவதாலும் ஆபரணத்தங்கத்திற்கான கிராக்கி குறைவினாலும் விலைகள் குறைந்துள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,600(மாற்றம் ரூ.15குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.52,800(மாற்றம் ரூ.120குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,200(மாற்றம் ரூ.16குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,600(மாற்றம் ரூ.128குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,585(மாற்றம் ரூ.10அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.52,680(மாற்றம் ரூ.80அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,183(மாற்றம் ரூ.10அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,464(மாற்றம் ரூ.80அதிகம்)