Gold Rate Chennai: தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
ஒரே நாளில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 சரிவு கண்ட பிறகு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விலை உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளன.
இன்று (வியாழக்கிழமை, 02-05-2024) காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் சுத்தத் தங்கதின் விலை அதிகரித்துள்ளன. ஒரே நாளில் தங்கம் விலை ரூ.920 சரிவு கண்ட பிறகு, இன்று மீண்டும் விலை உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளன.
தங்கம் விலை நிலவரம் (02.05.2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் 80 ரூபாய் அதிகரித்து 6,715 ரூபாய்க்கும், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 87 ரூபாய் அதிகரித்து ரூ.7,325-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.53,720-க்கும் விற்பனை ஆகிறது.
சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் 10 கிராம் விலை ரூ.800 அதிகரித்து ரூ.67,150 என்றும், சுத்தத் தங்கம் விலை 10 கிராம் ரூ.870 அதிகரித்து ரூ.73,250-க்கும், 24 காரட் சுத்தத் தங்கம் 8 கிராம் விலை ரூ.696 அதிகரித்து 58,600-க்கும் விற்பனையாகின்றன.
அதே போல் வெள்ளி விலையிலும் வியாழக்கிழமையான இன்று ஏற்றம் இருந்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ.87,000 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம்:
மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் நல்ல வர்த்தகம் நடைபெற்று வருவதாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைப் பாதுகாப்பாகக் கருதுவதாலும் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது..
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,715 (மாற்றம்: ரூ.80அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,720 (மாற்றம்: ரூ.640 அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,325 (மாற்றம்: ரூ.87 அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,600 (மாற்றம்: ரூ.696 அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,625(மாற்றம்: ரூ.70அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,000 (மாற்றம்: ரூ.560 அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,227 (மாற்றம்: ரூ.76 அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,080 (மாற்றம்: ரூ.608அதிகம்)