Gold Rate Chennai: சவரன் ரூ.60,000-ஐ கடந்த தங்கம் விலை - தங்கம் வாங்குவோருக்கு ‘ஷாக்’
ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.60,000-ஐ கடந்துள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.60,000-ஐ கடந்துள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலையில் புதிய உச்சங்களை எட்ட, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்புகளே முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,450 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.59,600 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,123 ஆகவும், சவரன் விலை ரூ.64,984 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. தற்போது தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (22.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.7,525 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.600 ரூ.60,200 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1கிராம் விலை ரூ.86 உயர்ந்து ரூ.8,209 ஆகவும், சவரன் விலை ரூ.688 உயர்ந்து ரூ.65,672 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (22.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,04,000 ஆகவும் மாற்றம் இன்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவதும் ஆபரணத் தங்கத்தின் விலை குறையாததற்கு காரணம். குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பொருளாதார கொள்கைகள் சார்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதனால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியதும் முக்கியக் காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,525 (ரூ.75 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,200 (ரூ.600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,209 (ரூ.86 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,672 (ரூ.688 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,525 (ரூ.75 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,200 (ரூ.600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,209 (ரூ.86 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,672 (ரூ.688 உயர்வு)
Edited by Induja Raghunathan