Gold Rate Chennai: இறங்குமுகத்தில் தங்கம் விலை; வாடிக்கையாளர்களுக்கு நல்ல சான்ஸ்!
அதேபோல் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.120 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (26.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை மேலும் ரூ.15 குறைந்தது. அதேபோல், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.120 குறைந்துள்ளது. பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரிக் குறைப்பினால் விலைகள் கடுமையாகக் குறைந்து வருகின்றன.
தங்கம் விலை நிலவரம், வெள்ளிக்கிழமை (26.07.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.15 குறைந்து 6,415 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17குறைந்து 6998 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.150 குறைந்து ரூ.64,150 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.170 குறைந்து ரூ.69,980-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.136 குறைந்து ரூ.55,984-ற்கும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை:
சென்னையில் வெள்ளிக்கிழமை (26-07-24)1 கிராம் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படாமல் ரூ.89 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
2024-25 பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகக் குறைததாலும் ஆடிமாத காலம் என்பதால் தேவை குறைவினாலும் தங்கம் விலை அதிரடியாக சரிந்து வருகிறது.
![gold rate](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/231-1721971858229.jpg?fm=png&auto=format&w=800)
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,415(மாற்றம்ரூ.15குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,320(மாற்றம்ரூ.120குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,998(மாற்றம்ரூ.17குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.55,984(மாற்றம்ரூ.136குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,400மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,200(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,982(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.55,856(மாற்றம் இல்லை)