Gold Rate Chennai: ஆபரணத் தங்கம் வாங்க நல்வாய்ப்பு - இன்றும் தங்கம் விலை மேலும் குறைந்தது!
சென்னையில் இன்றும் (26-06-2024) தங்கம் விலை மேலும் குறைந்தது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
சென்னையில் இன்று புதன்கிழமை (26.06.2024) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சற்றே சரிவும், ஏற்றமுமாக இருந்த விலை இன்று புதன் கிழமை 1 கிராம் ஆபரணத்தங்கம் விலை ரூ.20 குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம், புதன்கிழமை (26.06.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து 6,660 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,266 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280ஆக உள்ளது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.200 குறைந்து ரூ.66,600 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.220குறைந்து ரூ.72,660-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.176 குறைந்து ரூ.58,128-ற்கும் விற்பனையாகின்றன.
சென்னையில் வெள்ளி விலையும் புதன்கிழமை (26-06-24) குறைந்தது. 1 கிராம் வெள்ளி விலை ரூ1. குறைந்து ரூ.94.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000குறைந்து ரூ.94,500-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்க நகைகள் மீதான முதலீடு குறைந்து பிற லாபம் தரும் முதலீட்டுச் சந்தைகளை முதலீட்டாளர்கள் நாடி வருவதால் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,660 (மாற்றம்ரூ.20குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,280 (மாற்றம்ரூ.160குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,266 (மாற்றம்ரூ.22குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,128 (மாற்றம்ரூ.176குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,600 (மாற்றம்ரூ.25குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.52,800 (மாற்றம்ரூ.200குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,200 (மாற்றம்ரூ.23குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,600 (மாற்றம்ரூ.184குறைவு)