கூகுள் அதிர்ச்சி முடிவு - பாரத் மேட்ரிமோனி, kuku fm உள்ளிட்ட பல இந்திய ஆப்களை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்!
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பரபரப்பான முடிவுகளை எடுத்துள்ளது. பல இந்திய மேட்ரிமோனியல் மற்றும் வேலை சம்பந்தமான ஆப்களை Play Store இலிருந்து நீக்கியுள்ளது.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பரபரப்பான முடிவுகளை எடுத்துள்ளது. பல இந்திய மேட்ரிமோனியல் மற்றும் வேலை சம்பந்தமான ஆப்களை Play Store இலிருந்து நீக்கியுள்ளது.
சேவை கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, இந்தியாவில் உள்ள ப்ளே ஸ்டோரில் இருந்து சில ஆப்களை கூகுள் நீக்கத் தொடங்கியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக லாபம் ஈட்டிய போதிலும், சுமார் 10 முக்கிய நிறுவனங்கள் அதற்கான கட்டணங்களைச் செலுத்தவில்லை எனக்கூறி நீக்கம் செய்துள்ளது.
நீக்கப்பட்ட இந்திய ஆப்கள்:
ஜாப் ஆப் ஆன நௌக்ரி, பாலாஜி டெலிஃபில்ம்ஸ் ஆல்ட்-ன் ஆல்ட் பாலாஜி, ஆடியோ பிளாட்ஃபார்மான குக்கூ எஃப்எம், டேட்டிங் ஆப் ஆன குவாக்வாக், ட்ரூலி மேட்லி மற்றும் இந்திய மேட்ரிமோனி ஆப்களான ஷாதி, மேட்ரிமோனி, பாரத் மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, முஸ்லீம் மேட்ரிமோனி மற்றும் ஜோடி ஆகியவையும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) 15-30 சதவீத கட்டண முறையை நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,
கூகுள் தற்போது 11 முதல் 26 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கிறது. இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், சில அமைப்புகள் கட்டணம் செலுத்தவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அன் அகாடமி, ஆஹா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இன்ஃபோ எட்ஜ், ட்ரூலி மேட்லி, குட்டம், டெஸ்ட்புக், ஸ்டேஜ் போன்றவை உச்ச நீதிமன்றத்தில் கூகுள் ப்ளே ஸ்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ள முக்கிய நிறுவனங்கள் ஆகும்.
“கூகுள் பிளே ஸ்டோருக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமையை இதுவரை எந்த நீதிமன்றமும் அல்லது ஒழுங்குமுறை அமைப்பும் மறுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது,” என கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஆப்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, இந்திய இணையத்தின் இருண்டு நாள் என்று வர்ணித்துள்ளார். கூகுள் தனது ஏகபோகத்தை காட்டுவதாக குக்கூ எஃப்எம் இணை நிறுவனர் வினோத் குமார் மீனா தெரிவித்துள்ளார். குவாக்வாக் நிறுவனர் ரவி மிட்டல், விதிகளைப் பின்பற்றி மீண்டும் பிளே ஸ்டோருக்குத் திரும்பப் போவதாகத் தெரிவித்துள்ளார்.