தலைமைத்துவம் என்றால் என்ன? நச்சுனு 4 வார்த்தையில் விளக்கம் கொடுத்த சுந்தர் பிச்சை!
சமீபத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற சுந்தர்பிச்சை, தலைமைத்துவம் என்றால் என்பதற்கு நான்கே வார்த்தைகளில் கொடுத்த விளக்கம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற சுந்தர்பிச்சை, தலைமைத்துவம் என்றால் என்பதற்கு நான்கே வார்த்தைகளில் கொடுத்த விளக்கம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உலகிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை, நமது தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறிந்த செய்தி. புதுமையான முயற்சிகளை தனது தலைமையின் கீழ் செயல்படுத்துவதில் வல்லவர், அந்த தலைமைப் பண்பும், அறிவும் தான் அவரை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சிம்மாசனத்தில் அமரவைத்துள்ளது.
கூகுளின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் ஆல்பாபெட்டின் தலைமை பதவியையும் கவனித்து வரும் சுந்தர் பிச்சை, உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடுவது, பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது ஆகியவற்றில் ஈடுபட்டுடன் பங்கேற்று வருகிறார். அவர் படித்த கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி மாணவர்களுடன் ஸ்கைப் மூலமாக கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
சர்வதேச அளவில் தலைமைத்துவ பண்புக்காக வழங்கப்படும் விருதும் 2019ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை கொடுத்த தலைமைத்துவ ஆலோசனைகள்
சுந்தர் பிச்சை சமீபத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மாணவர்களுடன் சில தலைமைத்துவ ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார். அவற்றில், ஒன்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, தலைமைத்துவம் குறித்து பேசிய சுந்தர் பிச்சை,
"முயற்சிகளுக்கான வெகுமதி, முடிவு அல்ல” - என நான்கு வார்த்தைகளில் சுருக்கமாகவும், ஆழமாக பொருள்படும் படியும் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தின் அளவீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கூகுளின் செயல்திறனைப் பற்றி பேசியுள்ளார். “ஒரு நிறுவனம் வளர, வளர அது பழமைவாதமாக மாறுவது தான் எதிர் வினைகளிலேயே மோசமானது,” என சுட்டிக்காட்டியுள்ளார்.
"நிறைய பணம் இருந்தாலும், நிறைய வளங்கள் இருந்தாலும் நிறுவனங்கள் எப்போதும் பழமைவாதமான முடிவுகளையே எடுக்க முயல்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறுவனத்தை ரிஸ்க்கான மற்றும் புதுமையான முடிவுகளை எடுக்க ஊக்குவிப்பதோடு, தோல்வி மற்றும் வெகுமதி எதுவந்தாலும் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
“மக்கள் விளைவுகளுக்கு வெகுமதி அளிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், நிறுவனங்கள் எப்போதும் பாதுகாப்பான ரேஸில் பங்கேற்க மட்டுமே தயாராக இருக்கிறது. நிறுவனம் பெரிதாகும்போது முடிவுகளை எடுப்பது கடினமாகிறது. எனவே,
”ஆரம்ப நாட்களில் நீங்கள் வைத்திருந்த நல்ல விஷயங்களை நீங்கள் பாதுகாப்பதை உறுதி செய்ய அவ்வப்போது உங்களை அளவீட்டு பார்க்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
"நீங்கள் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை கூகுள் நிறுவனத்தின் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை புதுமையான தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குதல், பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ந்தல் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்,” எனக்கூறியுள்ளார்.
கடந்த வாரம் 1,70,000 க்கும் மேற்பட்ட முழுநேர கூகுள் ஊழியர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்ற தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, நிறுவனத்தில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, ஆனால், செயல்திறன் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார். இது கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்குவதற்கான மறைமுக எச்சரிக்கையாக இருக்கலாம் என கருதப்பட்டது.