‘ஐஏஎஸ் அதிகாரியான மளிகைக் கடைக்காரர் மகள்’ - ஸ்வேதா அகர்வால் யுபிஎஸ்சி தேர்வில் வென்றது எப்படி?
மளிகை கடைக்காரர் மகளான ஸ்வேதா அகர்வால் யுபிஎஸ்சி தேர்வில் 19வது ரேங்க் உடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். விடாமுயற்சியுடன் போராடிய ஸ்வேதா அகர்வால் விஸ்வரூப வெற்றி அடைந்த உத்வேக கதையை அறிந்து கொள்ளலாம்...
மளிகைக் கடைக்காரர் மகளான ஸ்வேதா அகர்வால் யுபிஎஸ்சி தேர்வில் 19வது ரேங்க் உடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். விடாமுயற்சியுடன் போராடிய ஸ்வேதா அகர்வால் விஸ்வரூப வெற்றி அடைந்த உத்வேக கதையை அறிந்து கொள்ளலாம்...
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவாகும். ஆனால், மதிப்புமிக்க யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற சில நூறு பேர் மட்டுமே ஐஏஎஸ் அதிகாரி ஆக முடிகிறது. இது பலரால் கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதனால் தான் ஐஏஎஸ் அதிகாரிகளின் வெற்றிக் கதைகள் படிக்கும் மாணவர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அதேபோல் தான், ஐஏஎஸ் அதிகாரி ஸ்வேதா அகர்வால் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயணம் அசாதாரணமானது.
மளிகைக் கடைக்காரர் மகளான ஸ்வேதா அகர்வால் எப்படி கடுமையாக முயற்சி செய்து யுபிஎஸ்சி தேர்வில் 19வது ரேங்க் எடுத்தார் என்று பார்க்கலாம்...
மளிகைக் கடைக்காரர் மகள் டு ஐஏஎஸ் அதிகாரி:
ஸ்வேதா அகர்வால் செயின்ட் ஜோசப் கான்வென்ட் பந்தல் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார். அதன் பின்னர், கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தார். அவளுடைய தந்தை மளிகைக் கடை வைத்திருந்தார்.
3 முறை UPSC தேர்வில் வெற்றி:
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்வேதா அகர்வால் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். முதல் முயற்சியிலேயே 497வது ரேங்க் எடுத்த ஸ்வேதா அகர்வால் ஐஆர்எஸ் சேவையில் சேர்ந்தார். இருப்பினும், அவருக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆக வரவேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் இருந்தது.
எனவே, 2015ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதிய ஸ்வேதா அகர்வால் இந்த முறை 141 ரேங்க் பெற்றார். ஆனால், இந்த முறையும் அவருக்கு ஐஏஎஸ் ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, 2016ம் ஆண்டு மூன்றாவது முறையாக தேர்வெழுதிய ஸ்வேதா அகர்வால், அகில இந்திய அளவில் 19வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார்.
மீண்டும், மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி நேரத்தையும், வயதையும் வீணடிப்பதாக ஸ்வேதா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அவரைச் சுற்றியிருப்பவர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு ஸ்வேதாவின் பதில்,
”யுபிஎஸ்சி ஐஏஎஸ் தேர்வை ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே என்னால் எழுத முடியும், ஆனால், எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளமுடியும்,” என்று ஸ்வேதா கூறியுள்ளார்.
ஸ்வேதா அகர்வால் பிறந்த போது பெரிதாக மகிழ்ச்சி அடையாத அவரது குடும்பம், ஐஏஎஸ் அதிகாரியான செய்தியைக் கேட்டு உற்சாகமடைந்தது. ஏனெனில், ஸ்வேதா அகர்வால் குடும்பத்தினர் முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என நினைத்துள்ளனர். ஆனால் பிறந்தது பெண் குழந்தை என்பதால் முதலில் மனம் வருந்திய பெற்றோர் பின்னர் அந்த குழந்தைக்கு நல்ல கல்வியை கொடுத்து துணிச்சலான பெண்ணாக வளர்க்க முடிவெடுத்துள்ளனர்.
பெற்றோரின் இந்த முடிவு தான் ஸ்வேதா அகர்வாலுக்கு சிறந்த கல்வியோடு, ஐஏஎஸ் அதிகாரியாகும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.
பஞ்சர் கடை நடத்தியவர் இன்று ஐஏஎஸ்: விடாமுயற்சிக்கு முன்னுதாரணமான வருண் பரண்வால்!