Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

1 பெட்ரூம் வீடு; ரூ.6 லட்சம்: தொழிலாளர்கள் சொந்த வீட்டில் வாழ உதவும் கோவை நிறுவனம்!

திருப்பூரைச் சேர்ந்த தீபக், யுகேந்திரன் தொடங்கியுள்ள ‘HomeStory' ஏழைத் தொழிலாளர்கள் மற்று புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த வீட்டில் மரியாதையுடன் வாழ கடன் வசதியுடன் வீடுகள் கட்டித் தருகின்றது.

1 பெட்ரூம் வீடு; ரூ.6 லட்சம்: தொழிலாளர்கள் சொந்த வீட்டில் வாழ உதவும் கோவை நிறுவனம்!

Tuesday October 20, 2020 , 3 min Read

தொழிலாளர் நலத்துறை அமைசகத்தின் தகவல் படி, 1.06 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரையான மாதங்களில் நகரங்களில் இருந்து வெளியேறினர். பெரும்பாலானோர் நடந்தே சென்றனர்.


இது மாநில அரசுகளுக்கு, கூடுதல் நெருக்கடியை உண்டாக்கியது. ஏற்கனவே 2011 மக்கள்தொகை கணக்குபடி இருக்கும் 1.77 மில்லியன் வீடில்லாத மக்கள் தவிர, வீடுதிரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இருப்பிடம் வழங்க வேண்டியிருந்தது. இண்டோ குளோபல் சோசியல் சர்வீஸ் சொசைட்டி போன்ற அமைப்புகள் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகம் என்கிறது.


நகர்புற வீடில்லாதவர்களை பொருத்தவரை, நகரங்களில் போதிய குறைந்த விலை வீடுகள் இல்லை என்பது மற்றும் அதிக வாடகை ஆகியவை இந்த நெருக்கடியை மேலும் அதிகமாக்கியது.

“உத்திர பிரதேசம், பிகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு தரமான வாழ்விடம் இல்லை. அவர்கள் கழிவறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தரங்கம் கிடையாது மற்றும் சுகாதார நிலையும் மோசம்,” என்று சோசியல் ஸ்டோரியுடன் பேசும் போது ஹோம்ஸ்டோரி சோசியல் ஹவுசிங் இணை நிறுவனர் தீபக் கே.விஸ்வநாதன் கூறுகிறார்.

மேலும் பெரும்பாலான தொழிலாளர்கள் நியாயமான வட்டியில் கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

“கடன் பெறுவது சாத்தியமாகி இருந்தாலும், ரூ.8-9 லட்சம் வரையான கடன் பெறுவது என்பது, கடினமாக இருக்கிறது. கடன் ஆதரவு இல்லாமல், 2-3 சதவீதத்தில் கடன் வழங்கும் தனியார் கடன் வழங்குனர்களிடம் இருந்து கடன் பெறுவது இவர்களுக்கு சிக்கலாக அமைகிறது.”

இதன் காரணமாக, அவர் குறைந்த விலையிலான வீடுகளை தீர்வாக அளிக்கும் தேடலில் ஈடுபட்டார்.

வீடு

குறைந்த விலை வீடுகள்

2012ல் பொறியியல் பட்டம் முடித்த பிறகு, தீபக் கோவையில், Merestone Properties Pvt Ltd நிறுவனத்தைத் துவக்கினார். நிறுவனம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பில் குடியிருப்புகளை உருவாக்கியுள்ளது.


நகரில் புதிதாக வரும் குடியிருப்புகள், பகிர்வு இடங்கள் அல்லது கட்டண தங்குமிடங்களாக இருப்பதை அவரும், யுகேந்திரனும் உணர்ந்தனர். இவை எல்லாமே அதிகம் சம்பாதிக்கும் பிரிவினருக்கானது.

“பிற நகரங்களில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வரும் ஓலா/ உபெர் டிரைவர்கள் வாடகை செலுத்த மிகவும் கஷ்டப்படுகின்றனர்,” என்கிறார் தீபக்.  

பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருப்பவர்கள் கண்ணியமான சூழலில் வாழ வழி செய்யும் வகையில் குறைந்த விலை வீடுகளை கட்டித்தரும் வகையில் 'ஹோம்ஸ்டோரி' ‘HomeStory' திட்டத்தைத் துவக்கினார்.


ஐஐஎம் பெங்களூரில் உள்ள NSRCEL வழிகாட்டியாக இருக்கும் மற்றும் Acumen fund பங்குதாரர் நாக பிரகாசத்தை அவர்கள் சந்தித்தனர். அவர், ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடுகளை கட்டுமாறு ஆலோசனை கூறினார். இது நிறுவனர்களை ஆய்வில் கவனம் செலுத்த வைத்தது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரூ.5 லட்சம் மதிப்பில் வீடுகளை வழங்கக் கூடிய வகையில், குறைந்த விலை வீடுகளுக்கான வடிவமப்பு மற்றும் செயல்முறை அம்சங்களில் இக்குழு கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்பம் மூலம் இதை சாத்தியமாக்கி வருகின்றனர். மாநில அரசுகள் மற்றும் தொடர்புடையவர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.  

“நகரங்களில் அரசிடம் பயன்படுத்தாத நிலம் நிறைய இருக்கிறது. இந்த பயன்படுத்தா நிலத்தை கொண்டு, கண்டைனர் வீடுகளை கட்டுவது எங்கள் திட்டமாகும். இது புலம் பெயர்ந்தோருக்கான வாடகை வீடுகளாக அமையும்,” என்கிறார் தீபக்.

ஹோம்ஸ்டோரி நிறுவனம் குறைந்த விலை வீடுகளுக்கான B2B  சந்தையாக செயல்படுகிறது என்கிறார் அவர்.


நில உரிமையாளர்கள், 300-400 ஊழியர்கள் கொண்ட நிறுவனங்கள், கடன் நிறுவனங்கள் ஆகிய தரப்பினரை ஒரே மேடையில் நிறுவனம் இணைக்கிறது.

“இப்போது எங்களால் ஒரு படுக்கையறை வில்லாவை ரூ.6 லட்சத்தில் வழங்க முடிகிறது. வீடுகளுக்கு உடனடி கடன் வழங்க ஒப்புக்கொண்டுள்ள எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பெரிய அளவில் செய்தால் இவற்றை நிறைவேற்றலாம்.”

குறைந்த விலை வீடுகளை உருவாக்குவது மட்டும் ஹோம்ஸ்டோரி’யின் நோக்கம் அல்ல. இருப்பிடம் முதல், போக்குவரத்து வரை கொண்ட, சமூதாய வாழ்விடச் சூழலை ஏற்படுத்தி தரும் வகையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

வீடு

கோவை மற்றும் திருப்பூரில் வாடகை வீடுகளை வழங்க, தமிழக அரசுடன் இணைந்து தனியார்-அரசு கூட்டு முறையில் செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம். தொழில்நுட்பம் மூலம் செலவை குறைப்பது மற்றும் பெரிய அளவில் மேற்கொள்வதன் வாயிலாக ஒரு லட்சம் குறைந்த விலை வீடுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். திருப்பூரில் 750 குறைந்த விலை வீடுகளை கட்டித்தர உள்ளார்கள்.

“எங்கள் வாடகை முறை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மனதில் கொண்டுள்ளது. கொரோனா தொற்றை தொடர்ந்து இவர்கள் ஒன்றாக வாழ்வார்கள், அவர்களை உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது முக்கியம் என்கிறார் தீபக்.

சவால்கள்

பெரிய அளவில் வீடுகளை உருவாக்குதில் பல்வேறு சவால்கள் உள்ளன. நிலம் கையகப்படுத்தல் மற்றும் அரசு அனுமதி பெறுவதில் அதிக தடைகள் இருப்பதாக தீபக் கூறுகிறார்.

வீடு
“நாங்கள் மிகவும் குறைந்த லாப விகிதத்தில் செயல்படுவதால் இது சவாலாக இருக்கிறது. நிலத்தின் விலை மற்றும் கட்டிடச் செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சதுர அடிக்கு ரூ.100- ரூ200 அதிகரித்தால் கூட, சந்தை அதை ஏற்காது அல்லது வாங்குபவர்களுக்கு போதிய நிதி உதவி கிடைக்காது. எனவே தான் வடிவமைப்பு, செயல்முறையில் நிறைய ஆய்வு செய்திருக்கிறோம்,” என்கிறார் அவர்.

ஏஞ்சல் நிதி மூலம் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் குருகிராமில் உள்ள GSF Accelerator’s bootcamp திட்டத்தில் நிறுவனம் பங்கேற்றுள்ளது. எல்.ஐ.சி நிறுவனத்துடனான கூட்டு மூலம் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் வீடு வாங்குபவர்களுக்கு ரூ.1,000 கோடி கடனை சாத்தியமாக்கியுள்ளது.


2021ல் ரூ.150 கோடி வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ள நிறுவனம் 2022ல் இதை இரு மடங்காக்க விரும்புகிறது. தாய் நிறுவனம் மூலம் சுயமாக நிதி பெற்று வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு திருப்பூரில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. 2024ல் ஒரு லட்சம் குறைந்த விலை வீடுகள் இலக்கை அடைய திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.


ஆங்கில கட்டுரையாளர்: கனிஷ்க் சிங் | தமிழில்-சைபர்சிம்மன்