Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மேற்கு வங்கத் தேர்தலில் சாதனை வெற்றி: ‘திதி’ மம்தா சாதித்தது எப்படி?

போராட்டத்திற்கு அஞ்சாதவராக கருதப்படும் மம்தா பானர்ஜி, தன் அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய போராட்டத்தில் வெற்றி பெற்று தேசத்தை வியக்க வைத்திருக்கிறார்.

மேற்கு வங்கத் தேர்தலில் சாதனை வெற்றி: ‘திதி’ மம்தா சாதித்தது எப்படி?

Sunday May 02, 2021 , 3 min Read

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தது மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை தான்.


மேற்கு வங்கத்தை ‘திதி மம்தா’ தக்க வைத்துக்கொள்வாரா? அல்லது மோடி- அமித் ஷா செல்வாக்கு பாஜக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வழி வகுக்குமா? போன்ற கேள்விகள் தேர்தல் களத்தில் முக்கியமாக அமைந்தன.


ஆனால், தேர்தல் முடிவுகள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளன. அக்கட்சி 200க்கும் அதிகமான இடங்களை வெல்லும் நிலை உள்ளது.


ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில், மம்தா தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்து பாஜகவின் வளர்ச்சிக்கு செக் வைத்திருக்கிறார். எப்படியாவது மேற்கு வங்கத்தில் காலூன்றி வலுப்பெற்றுவிட வேண்டும் எனும் மோடி- அமித் ஷா வகுத்த வியூகங்களை தவிடுபொடியாக்கி மம்தா தனது செல்வாக்கை நிருபித்திருக்கிறார். இதன் காரணமாக அரசியல் களத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Mamta

அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும், 200 இடங்களுக்கும் அதிகம் பெற்று ஆட்சி அமைக்க உள்ள சூழலில், அவரது வெற்றி மாநிலத்தைக் கடந்து முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. (நந்திகிராம் நிலவரம் தொடர்பாக மாறி மாறி தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மம்தா இது குறித்து நீதிமன்றம் செல்லவிருப்பதாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார்).

குவியும் வாழ்துகள்

"உங்களின் இந்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சம்ஜவாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ”விழ்ப்புணர்வு உள்ள மக்கள் மற்றும் போராட்ட குணமிக்க மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துகள்...” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,

“இந்த மாபெரும் வெற்றிக்காக வாழ்த்துகள் என வாழ்த்து தெரிவித்து, என்ன ஒரு போட்டி...! எனத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மம்தா வெற்றிக்கு மேலும் வாழ்த்துகள் குவிகின்றன. அதோடு, மம்தா எப்படி இத்தனை பெரிய வெற்றியை சாதித்தார் எனும் வியப்பும் உண்டாகிறது.


66 வயதாகும் மம்தாவுக்கு அரசியலிலும், வாழ்க்கையிலும் போராட்டம் புதித்தல்ல. உண்மையில் அவர் எப்போதும் களத்தில் இறங்கி போராடத்தயங்காத தலைவராகவே இருந்திருக்கிறார். அவர் தோல்வியால் துவண்டதும் இல்லை, சவால்களை கண்டு அஞ்சியதும் இல்லை.

அரசியல் பயணம்

பதின்ம வயதிலேயே பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர், மேற்கு வங்கத்தின் முக்கியத் தலைவராக உருவெடுத்த நிலையில், 1998ல் வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் எனும் தனிக்கட்சியை துவக்கினார்.


மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்தவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சரானார். மத்திய அமைச்சராக இருந்தவர், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகி மாநில அரசியலில் கவனம் செலுத்தினார்.

young mamta

இளம் வயதில் மம்தா பானர்ஜி

2011ல், மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர், 34 ஆண்டுகால் கம்யூனிஸ்ட் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வந்தார். அவர் மீது பலவித விமர்சனங்கள் எழுந்தாலும், 2016 தேர்தலில் மீண்டும் அதிக செல்வாக்குடன் ஆட்சியைப் பிடித்தார்.

புதிய சவால்

இந்நிலையில் தான் 2021 சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். முந்தைய தேர்தல்களை எல்லாம் விட இந்த தேர்தல் அவருக்குக் கடினமான போட்டியாக இருந்தது. அதற்குக் காரணம், மத்தியில் ஆளும் பாஜக, மேற்கு வங்கத்தை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டது தான். 


2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் பாஜக எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் வாங்கியதை அடுத்து, இந்த முறை புதிய நம்பிக்கையுடம் கட்சி தேர்தலை சந்தித்தது.


மாநிலத்தில் காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் பழைய செல்வாக்குடன் இல்லாத நிலையில், மம்தாவை வீழ்த்த முடிந்தால் மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் எனும் தீர்மானத்துடன் பாஜக களமிறங்கியது.

மோடி- ஷா வியூகம்

இந்த பொறுப்பை உள்ளூர் தலைவர்களிடம் விட்டுவிடாமல், அமித் ஷாவே நேரடியாக மாநில பிரச்சார வியூகம் வகுப்பதில் கவனம் செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.


தலைவர்களின் நேரடிப் பார்வையால் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்ததோடு, சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் இருந்தது. மம்தா கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுக்கும் செயலிலும் பாஜக ஈடுபட்டாது.

didi mamta

இதன் பயனாக, செல்வாக்கு மிக்க இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவரான சுவண்டு அதிகாரி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இவரது சவாலை எதிர்கொள்ளும் வகையில் மம்தா கொல்கத்தாவில் தனது பாதுகாப்பான தொகுதியை விட்டுவிட்டு நந்திகிராம் தொகுதியில் அவரைச் சந்தித்தார். ஆக, நந்திகிராம் தொகுதியும் உற்று கவனிக்கப்பட்டது.

வெற்றி வீராங்கனை

மாநிலத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படாமல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டதும், மம்தாவுக்கு பாதகமான அம்சமாக பார்க்கப்பட்டது. மேலும் பாஜக முன்னின்று செயல்பட்டதும், திதி என்ன செய்வார் எனும் கேள்வியையும் எழும்பியது.

ஆனால், மம்தா தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த வெற்றி வங்காளத்தின் வெற்றி என வர்ணித்துள்ள மம்தா பானர்ஜி, கொரோனாவை எதிர்கொள்வதே தனது முதல் வேலை என்று கூறியிருக்கிறார்.