டெபிட் கார்டு இல்லாமல் எஸ்பிஐ வங்கியில் பணம் எடுப்பது எப்படி? முழு வழிமுறைகள்!
அதிகபட்சமாக ரூ.10,000 வரை எடுக்கலாம்!
வங்கி சேவைகளில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. யுபிஐ முதல் பல்வேறு சேவைகள் பயனர்களின் தேவையை எளிதாக்கி வருகின்றன. இதேபோல், டெபிட் கார்டு இல்லாமல், ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் வசதியும் தற்போது அதிகரித்து வருகின்றன.
இந்த வசதி பல வங்கிகளில் இருந்து வரும் நிலையில், தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆம், எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-களிலும் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும்.
இது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். இந்த வசதியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் 'YONO' ஆப் பயன்படுத்துவது அவசியம்.
இதன் வழிமுறைகள்:
* யோனோ ஆப்பினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
* அந்த ஆப்'பில் லாகின் செய்து கொண்டு 'Yono Cash' என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
* பின்னர் 'Yono Cash' ஆப்சனின் கீழ் உள்ள ஏடிஎம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
*அதில் எவ்வளவு தொகை எடுக்க வேண்டும் என்பதையும் பதிவு செய்த பின்னர் 6 இலக்க பின் நம்பரை உருவாக்க வேண்டும்.
* இந்த 6 இலக்க பின் நம்பர் மிக முக்கியமான ஒன்று. மேலும், இந்த நம்பரை ஒருமுறை உருவாக்கினால் அது ஆறு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
* 6 இலக்க பின் நம்பரை உருவாக்கிய பின்னர் ஏடிஎம் சென்று 'Yono Cash' ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அதில், உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த 6 இலக்க நம்பரை பதிவு செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதி மூலம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.10000 வரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதியை பெற 'Yono' ஆப் அவசியம் என்பது போல் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் அவ்வளவு அவசியம். அது இருந்தால் மட்டுமே இத்தனையும் செய்ய முடியும்.