Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

அழிந்து வரும் பறவைகளின் உயிரைக் காக்கும் கருவி - ஐஐடி உருவாக்கிய ‘Bird Diverter’

உயர் அழுத்த மின் கம்பங்களில் சிக்கி உயிரிழக்கும் பறவைகளின் இனத்தை பாதுகாக்கும் விதத்தில் முன்கூட்டியே அவற்றிற்கு ஆபத்தை எச்சரிக்கும் ஃபிளாப்பர் அடிப்படையிலான ‘பறவை திசைமாற்றி’யை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அழிந்து வரும் பறவைகளின் உயிரைக் காக்கும் கருவி - ஐஐடி உருவாக்கிய ‘Bird Diverter’

Monday August 29, 2022 , 3 min Read

ராஜஸ்தான் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் ‘Great Indian Bustar’ பறவை இனமானது மின்கம்பிகளில் சிக்கி உயிரிழப்பதால் அந்த இனம் அழியும் நிலையில் இருப்பது குறித்து இந்திய வனஆய்வு நிறுவனம் கவலை கொண்டது.

இந்தப் பறவைகளின் இறப்பு விகிதத்தை தொழில்நுட்பம் கொண்டு குறைந்த விலை உபகரணங்கள் மூலம், அதாவது பறவை திசைமாற்றி கொண்டு பாதுகாக்க முடியுமா என்று வன ஆய்வு நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களை நாடியது.

iitm

கிரேட் இந்தியன் பஸ்டர்ட் பறவைகள்

’கிரேட் இந்தியன் பஸ்டர்ட்’ (Great Indian Bustard) பறவைகளானது அதிக எடை கொண்ட பறக்கும் பறவை இனங்களில் ஒன்றாகும். இதன் எடை 15 கிலோ வரை இருக்கும். மேலும், 1 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதாகும்.

International union for conservation of nature ஜூலை 2011ல் இந்த இனத்தை ஆபத்தின் விளிம்பில் இருக்கும் இனமாக (Critically Endangered) அறிவித்தது. நிலப்பரப்பை வளமாக்கும் பறவை இனங்களில் ஒன்றாக GIB இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டில் இந்த இனமானது அழிந்துவிடும் என்று பாதுகாவலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிறுத்தைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அழியப்போகும் மிகப்பெரிய இனமாக இது இருக்கும் என்றும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 1980-களில் 2 ஆயிரம் கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் 11 மாநிலங்களில் சுற்றித் திரிந்தது. வேட்டையாடுதல் விவசாய நிலபரப்பு சுருங்குதல் போன்ற காரணங்கள் ஏற்கனவே அவை அழிந்து கொண்டு இருக்கின்றன.

Great Indian Bustard

எதனால் உயிரிழப்பு?

கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் அழிந்து வரக்கூடிய இனம் என்ற அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. வனப் பகுதிகளில் தற்போது 150 பறவைகள் மட்டுமே உயிருடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானின் தார் பகுதியில் உயர் மின் அழுத்த பகிர்மானத்திற்காக ஏராளமான வயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக அந்த வகை பறவைகள் மிக அதிக அளவாக 15% இறப்பை சந்திக்கின்றன.

எதற்காக புதிய பறவை திசைமாற்றி? (Bird Diverter)

ஐஐடி எதற்காக புதிய பறாவை திசைமாற்றிக் கருவியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது, எனக் கேட்கும் போது, ஏற்கனவே பல bird diverter-கள் இருக்கும் போது புதிதாக ஒரு கருவியை உருவாக்குவதன் நோக்கம் என்னவெனில்,

சந்தையில் கிடைக்கும் பறவை திசை மாற்றி ஒன்றின் விலையே தோராயமாக ரூ.5 ஆயிரம் என்று வைத்தாலும் வனப்பகுதியில் ஆயிரக்கணக்கில் திசைமாற்றிகளைப் பொருத்த வேண்டுமெனில் அதிக நிதி தேவைப்படும். இதனால் எளிதில் வாங்கக்கூடிய கையடக்க விலையில் ஒரு கருவியை உருவாக்கித் தர வனஆய்வு நிறுவனம் கோரி இருந்தது. அதற்கான தீர்வைத் தான் ஐஐடி பி.டெக் மெக்கானிக்கல் என்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

புதிய கருவியின் சிறப்புகள்

இந்தத் திட்டத்தை வடிவமைத்த மாணவர்களில் ஒருவரான ஸ்ரீஹரி பறவை திசைமாற்றியின் சிறப்புகள் குறித்து யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

“எங்களின் இந்தக் கருவியானது நவீன வசதிகளை உள்ளடக்கியதாக உருவாக்கினோம். இவை ஃபிளாப்பர் போன்று உயர் மின் அழுத்த கம்பிகளில் தொங்க விடப்பட்டிருக்கும். காற்று பட்டவுடன் பறவை திசைமாற்றி செல்லச் சூழலத் தொடங்கும், அதன் வெளிப்புறங்களில் அமைந்திருக்கும் மூன்று fin-கள் அகன்ற பரப்பில் புறஊதாக்கதிர் ஒளியை ஏற்படுத்தும் , மற்றும் இரவிலும் பறவைகள் ஒளியை நன்கு அறிய வேண்டும் என்பதற்காக எல்இடி ஒளியும் பொருத்தப்பட்டிருக்கிறது.

மேலும், finகளில் பல வண்ணங்கள் பூசப்பட்டிருப்பதால் வெவ்வேறு நிறங்களில் ஒளியானது வெளிப்படும் போது, வித்தியாசமான நிறங்களில் வெளிச்சத்தைக் காணும் பறவைகள் அந்த இடத்தில் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து பறவைகள் அதன் பாதையை மாற்றிக் கொள்ளும் என்பதே இந்தக் கருவியின் அடிப்படையாகும். மேலும் சூரிய சக்தி கொண்டு இதனை சார்ஜ் செய்து கொள்வதற்கும் முயற்சிகளை செய்து வருகின்றனர்.
gib diverter

கையடக்க விலை

மின் கம்பிகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் 4 அல்லது 5 கருவிகள் பொருத்தப்படும் போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் போதே பறவைகள் அந்த இடத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து மாற்றுப்பாதையை தேர்ந்தெடுப்பதால் உயிரிழப்பானது தவிர்க்கப்படும். கையடக்க விலைக் கருவியாக இருக்க வேண்டும் என்பதால் ரூ.2 ஆயிரம் விலையில் கிடைக்கும் வகையில் இந்த பறவை திசைமாற்றியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தக் கருவியை அதிக அளவில் உற்பத்தி செய்து பொருத்துவது குறித்த பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் எங்களின் புதிய பறவை திசைமாற்றியானது பொருத்தப்பட்டு விடும் என்று கூறுகிறார் ஸ்ரீஹரி.

கிரேட் இந்தியன் பஸ்டர்ட் பறவைகளின் பெரும்பாலான உயிரிழப்புக்குக் காரணமாக இருப்பது அவை உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கிக் கொள்வதாலேயே நிகழ்கிறது. ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பானது அவை எதிர்கொள்ளப் போகும் அபாயத்தை எச்சரித்து திசை மாற்றுவதன் மூலம் GIB இறப்பு விகிதமானது குறைய வாய்ப்பிருக்கிறது. GIB மட்டுமல்ல மற்ற பறவைகளுக்கும் இந்த திசைமாற்றி ஆபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.