Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

1947-2020: 3 தலைமுறை வளர்ச்சி கொண்ட ரூ.1,411 கோடி மதிப்பு மேட் இன் இந்தியா காலணி ப்ராண்ட்!

1947 தொடங்கப்பட்ட ‘மெட்ரோ ஸ்டோர்ஸ்’ இன்று இந்தியாவின் 128 நகரங்களில் 550 விற்பனை நிலையங்கள் மேல் கொண்டதாக வளர்ந்திருக்கிறது.

1947-2020: 3 தலைமுறை வளர்ச்சி கொண்ட ரூ.1,411 கோடி மதிப்பு மேட் இன் இந்தியா காலணி ப்ராண்ட்!

Wednesday August 26, 2020 , 3 min Read

மாலிக் தேஜானி, சுதந்திரப் போராட்ட கால இந்தியாவில், மும்பை கொலாபாவில் உள்ள கடையில் ஷூ விற்பனையாளராக இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், பிரிவினை பிரச்சனை காரணமாக கடையின் உரிமையாளர் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலை உண்டானது.


அந்த கட்டத்தில் கடையை எடுத்து நடத்தும் வாய்ப்பு மாலிக்கிற்கு கிடைத்தது. ஈடுபாடு மிக்க விற்பனையாளரான மாலிக் உறவினரிடம் கடன் வாங்கி, அந்த கடையை வாங்கி நடத்தத் துவங்கினார். மும்பையின் பிரபலமான மெட்ரோ சினிமாஸ் தாக்கத்தால் கடைக்கு மெட்ரோ ஸ்டோர்ஸ் என பெயரிட்டார்.


இன்று, மெட்ரோ பிராண்ட் லிமிடெட் இந்தியாவின் நன்கறியப்பட்ட காலணி பிராண்டாக இருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்குமான காலணிகளை விற்பனை செய்கிறது.

இந்தியாவின் 128 நகரங்களில் 550 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள நிறுவனம், ரூ.1411 கோடி விற்றுமுதல் பெற்றுள்ளது.
Metro shoes

1947 முதல் துவங்கிய பயணம்

மாலிக்கிறகு பிறகு அவரது மகன் ரபீக் மாலிக் 16 வயதில் நிறுவன பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இன்று, மாலிக்கின் பேத்தி பரா மாலிக் குடும்ப வர்த்தகத்தின் சி.இ.ஓவாக பொறுப்பேற்றிருக்கிறார்.


ஷூ விற்பனையை ஒரு கலையாகவும், கேளிக்கையாகவும் பார்த்த ஈடுபாடு மிக்க விற்பனையாளராக தனது தாத்தாவை பரா நினைவு கூறுகிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த வாடிக்கையாளர்கள் தன்னை உடனே அடையாளம் கண்டுகொள்வதாக அவர் உற்சாகமாக கூறுகிறார்.

“என் தாத்தா ஒரு முழுமையான மனிதர். அவரால் மற்றவர்களை 40 மொழிகளில் வரவேற்க முடியும். அவர் எங்களின் சிறந்த விற்பனையாளர். அவரது விற்பனை பாணி மெட்ரோவுக்கு தூணாக இருக்கிறது,” என்கிறார் பரா. தாத்தா கடைசி நாள் வரை விற்பனை நிலையத்தில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும், ஒரு போதும் அலுவலக அமைப்பில் ஈடுபாடு காட்டவில்லை என்றும் கூறுகிறார்.

தந்தை ரபீக் நிறுவனத்தை பல சங்கிலி மாதிரியில் கொண்டு செல்லும் தொலைநோக்கு கொண்டிருந்ததாகவும், நிறுவனத்தை மேலும் தொழில்முறையாக்கியதாகவும் பரா கூறுகிறார். தாத்தா காலத்தில் விற்பனை உரிமையாளரின் வசீகரத்தைச் சார்ந்திருந்தது. ஆனால் தந்தையின் காலத்தில் மேலாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் விற்பனை வெற்றியில் கவனம் செலுத்தினர்.

ரஃபிஃ

ரபீக் மாலிக், தலைவர் மெட்ரோ ப்ராண்ட்ஸ்

“மகன் இல்லாத காரணத்தாலும் சிறு வயது முதலே வர்த்தகத்தை தந்தை தொழில்முறை தன்மை பெற வைத்ததாக பரா மேலும் கூறுகிறார். எப்போதுமே வீட்டில் உணவு நேர பேச்சு வர்த்தகத்தை ஒரு அம்சமாகக் கொண்டிருக்கும் என்றும் நினைவு கூறுகிறார்.


துவக்கத்தில் அவருக்கு வர்த்தகத்தில் இணையும் எண்ணம் இல்லை என்றாலும், 2000-ல் ஆண்டில் ஆறு மாதம் முயன்று பார்க்கலாம் என்றுத்தோன்றியது. இந்த காலம் திருப்பு முனையாக மாறி, குடும்பத் தொழில் வாழ்நாள் லட்சியமாக மாறும் என உணர்த்தியது. வர்த்தகத்தை டிஜிட்டல்மயமாக்கியதாகவும் பெருமை கொள்கிறார்.

“நான் வர்த்தகத்தில் நுழைந்த போது பார்கோடிங் கருத்தாக்கம் இல்லை. ஷூ பெட்டி மீது விலை எழுதப்பட்டிருந்தது,” என்கிறார்.

அவர் மெல்ல டேட்டா நிர்வாகத்தை அறிமுகம் செய்து, ஆன்லைன் போர்ட்லையும் அமைத்தார். செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை புகுத்தினார்.


மாலிக் வர்த்தகத்தை உணர்வுப்பூர்வமாக மேற்கொண்டாலும், அடுத்த வந்த தலைமுறை தொழில்முறை தன்மையை புகுத்தியது. எனினும், காலணி விற்பனை என்பது ரத்தத்தில் கலந்திருப்பதால் ஈடுபாடு தொடர்கிறது என்கிறார்.

1947 க்கு பிறகு ஏற்பட்ட மாற்றம்

“நாங்கள் செழிப்பான காலத்தில் வாழ்ந்தோம்,” என கூறும் பரா, ஆரம்ப காலத்தில் நல்ல காலணிகள் இருப்பு குறைவாக இருந்ததால் சப்ளையர்கள் கை ஓங்கியிருந்தது என்கிறார்.


அதன் பிறகு பொருளாதாரம் முதிர்ச்சி அடைந்து, அகல திறந்திருக்கிறது. 1991 பொருளாதார சீர்திருத்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழையவும் வழி வகுத்தன.

இன்று இந்திய காலணி துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் கலந்து இருப்பதோடு, சிறிய வர்த்தகங்களும் இருக்கின்றன.

“எங்கள் முதல் கடை அமைந்திருந்த அதே தெருவில் 10 காலணி கடைகள் இருந்தன. வாடிக்கையாளர் உறவு மாறியிருப்பது குறித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.

முன்பெல்லாம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் அணிந்திருக்கும் சேலைக்கு ஏற்ப வரவேற்கபப்டுவார்கள். ஷிப்பான் சேலை அணிந்தவர் என்றால் வசதியானவர் என்று பொருள். பருத்தி சேலை அணிந்தவர் என்றால் அதற்கேற்ப சேவை அளிப்பார்கள்.

மெட்ரோ ஷூஸ்

இத்தகைய நடைமுறை இன்று காலாவதியாகி விட்டது. தனிப்பட்ட தன்மையும் வந்திருக்கிறது. இன்று இருப்பது போல வாடிக்கையாளர் முதன்மையாகக் கருதப்பட்டு நான் பார்த்ததில்லை. உங்கள் பிராண்டை தேர்வு செய்யும் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வது முக்கியம்.

இந்திய தயாரிப்பு

சந்தை ஆய்வு நிறுவனமான ஸ்டேஸ்டா இண்ட்ஜிய காலணி துறை 2024 ல் 1,818 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருக்கும் என கணித்துள்ளது. மெட்ரோ நிறுவனம், பாட்டா, லிபர்டி, வுட்லாண்ட், பூமா, நைக், அடிடாஸ் போன்ற பன்னாட்டு பிரண்ட்களுடன் போட்டியிடுகிறது. இருந்தும் இந்நிறுவனம் சந்தையில் முன்னணி நிலையை பெற்றுள்ளது.


இவர்கள் கோலாபுரி காலணிகளையும், ஸ்னீக்கர்களையும் விற்பனை செய்கிறது. குறிப்பிட்ட தேவைக்கேற்பவும் காலணிகளை அளிக்கிறது.

 “பஞ்சாபில் உள்ளவர்களுக்கு காலணியில் நான்கு இன்ச் குதிகால் கொண்டிருந்தால், சென்னையில் காலணிகள் 2 இன்ச் குதிகால் கொண்டிருக்கும்,” என்கிறார் பரா.

அதே போல அனிமல் பிரிண்ட் மும்பையில் நன்றாக விற்றாலும், சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் விற்கப்படுவதில்லை என்கிறார்.

மெடோர் ரூ.990 முதல் ரூ.14,900 மதிப்பிலான காலணிகளை கொண்டிருக்கிறது. உற்பத்தி வசதிகளை மும்பை, ஆம்பூர், சீனா மற்றும் பிரேசிலில் இருந்து தருவிக்கிறது.
மெட்ரோ

கொரோனா கால பாதிப்பு

இடைப்பட்ட காலங்களில் அரசாங்க மாற்றம், பொருளாதார சீர்திருத்தம் ஆகியவை வர்த்தகத்தை பாதிப்பதாக இருந்தாலும்,, ரொக்கத்தின் மீது கட்டுப்பாடு கொண்டிருப்பது நிலைத்து நிற்க உதவியிருக்கிறது.


 “நிறுவனங்கள் ஆரோக்கியமான லாப நிலை கொண்டிருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தேனும் வளர்ச்சி எனும் அணுகுமுறையை பின்பற்றுவதில்லை என்கிறார் பரா.

நிறுவனம் எதிர்கொண்ட சவால்களிலேயே கொரோனா தாக்கம் தான் மிகவும் தீவிரமானது என்கிறார்.

முதல் சில மாதங்கள் எல்லோரையும் கவனித்துக்கொள்ள முடியும் என நம்பினோம். ஆனால் இந்த நிலைமை தொடர்ந்த போது சிக்கலாகி, கடினமாக முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது, என்கிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுஷல் தமிழில்: சைபர்சிம்மன்