‘சுய உருவப்படக் கலைஞர்’ - இன்ஸ்டாவில் தனித்துவ தடம் பதித்துள்ள 16 வயது ஸ்ரீராம்!
பெங்களூரைச் சேர்ந்த 16 வயதான ஸ்ரீராம், சுய உருவப் படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறார். இந்த சுயஉருவப் படக்கலையை ஆராய்ந்து, அவர் தனக்கென ஓர் தனித்துவமான காட்சி இலக்கணத்தை உருவாக்கியுள்ளார். இதனால் அவர் தன்னைத் தானே நேசிக்கவும் கற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த 16 வயதான ஸ்ரீராம், சுய உருவப் படங்களை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு கலக்கி வருகிறார். இந்த சுயஉருவப் படக்கலையை ஆராய்ந்து, அவர் தனக்கென ஓர் தனித்துவமான காட்சி இலக்கணத்தை உருவாக்கியுள்ளார். இதனால் அவர் தன்னைத் தானே நேசிக்கவும் கற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
படைப்பாற்றலுக்கு வயது ஒரு தடையல்ல என ஸ்ரீராம் நிரூபித்துள்ளார். அவருடைய செல்போன் மற்றும் விளக்குகளின் வண்ணஜால மாயத்தில் அவர் பிரமிக்க வைக்கும் சுய உருவப் படங்களை எடுத்து வருகிறார். கொரோனா லாக்டவுனில் வெறும் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கியதுதான் இந்த Self portraits புகைப்படக் கலை என்கிறார்.
பொதுவாக படைப்பாளிகள் தங்களின் டிரென்டிற்காக பலவிதமான தோற்றங்களை உருவாக்குவதைப் பார்த்துதான் ஸ்ரீராம் இந்த கலையில் இறங்கியுள்ளார். மேலும், கிராமத்தில் வசித்து வரும் அவரது தந்தை புகைப்படங்களே எடுக்காத விரக்தியையும் சேர்ந்து முழுமூச்சாக இக்கலையில் ஆர்வம் கொண்டார்.
”ஒரு ஊடகமாக சுய உருவப்படம் எனது கலை, படைப்பாற்றல், வண்ணங்களைப் பற்றிய எனது அறிவை வெளிக்கொணர உதவியது. மேலும், இக்கலை எனது தன்னம்பிக்கையை நான் உணர உதவியது,” என்கிறார் ஸ்ரீராம்.
ஸ்ரீராமின் பள்ளி பருவ வாழ்க்கையில் அவர் கருப்பாக இருந்ததற்காக புறக்கணிக்கப்பட்டார். இதனால் அவருக்கு பள்ளிப் பருவத்தில் நிறைய நண்பர்கள் கிடையாது. இந்த சுய உருவப்படங்கள் அவரது படைப்பாற்றலையும் சுய வெளிப்பாட்டையும் வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவருக்கு ஓர் ஆறுதலையும், சுதந்திர உணர்வை அளித்ததோடு, அவர் தனது காலில் நிற்பதற்கான ஒரு தளத்தையும் வழங்கியுள்ளது.
"நான் இயற்கையாகவே தன்னம்பிக்கை மிகுந்த நபர் கிடையாது. மற்றவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள், நம்மை எப்படி பார்ப்பார்கள் என எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பேன். ஆனால் சுய உருவப்படம் என்ற எனது கலை, எனது படைப்பாற்றல், வண்ணங்களைப் பற்றிய எனது அறிவை வெளிக்கொணர உதவியதோடு மட்டுமன்றி எனது தன்னம்பிக்கையை வளர்க்க உதவியுள்ளது. இப்போதெல்லாம் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக உணர்கிறேன். சுருக்கமாக கூறின் எனது ஆளுமைத் திறன் சிறப்பாக வளர்ந்துள்ளது என்றே கூறவேண்டும்,” என்கிறார்.
"சுய உருவப்படங்கள் உங்களை பல வழிகளில் வெளிப்படுத்துகின்றன. பொதுவாக ஆண்களுக்கென ஓர் எல்லைகளையும், வரையரைகளையும் இந்த சமுதாயம் வகுத்துள்ளது. நான் அதனை மாற்றினேன். பெரும்பாலான ஆண்கள் நகைகளை அணிவதில்லை என்ற கருத்தை நான் மாற்றினேன். நான் நகைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்தேன். இந்த மரபுகளை மீற எனது தன்னம்பிக்கை எனக்கு உதவியது.
தொடக்கத்தில் நிறைய எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் பின்னடைவுகளை சந்தித்தேன். வெறுப்புக் கருத்துக்களை தெரிவிப்பர்கள் மீது கடும் கோபம் கொள்வேன். ஆனால், நாளடைவில் நான் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்னேறத் தொடங்கிவிட்டேன், என்கிறார்.
ஸ்ரீராமின் சுய உருவப் படங்களின் தொடரை ஆராய்ந்தால், அவரின் பின்புலத்தில் ஓர் குளிர்சாதனப் பெட்டி மற்றும் சில தாவரங்களைக் காணலாம். இந்தப் பின்னணி குறித்த யோசனையை அவர் மான்சி உகலே என்ற படைப்பாளியை பின்பற்றி புகைப்படங்களை எடுத்ததை அறியலாம். இயற்கையான ஓர் பின்னணியில் புகைப்படங்களை எடுப்பதை ஸ்ரீராம் விரும்புகிறார். பசுமையான தாவரங்கள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் விளக்குகளின் வண்ணமயமான ஜாலத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன என்கிறார்.
நோ பார்டர்ஸுக்காக அவர் தனது போட்டா ஸூட் எடுக்கையில் ஸ்ரீராம் முற்றிலும் தனது வழக்கமான ஸ்டைலிஸ்டிக் அடையாளத்திலிருந்து மாறிவிட்டார். இது தன்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய விஷயம் என்கிறார். மேலும், பேஷனில் தெற்காசிய அடையாளத்தை ஊக்குவிக்கும் பிராண்டுக்காக எடுக்கப்பட்ட சுய உருவப் படங்கள் என்கிறார்.
ஊரடங்கு காரணமாக வெளியில் எங்கும் சென்று புகைப்படங்கள் எடுக்க முடியாததால், அவர்கள் அனுப்பிய ஆடைகளை அணிந்து கொண்டு முழுக்க முழுக்க வீட்டில் இருந்தே வித்தியாசமான அழகியல் சிந்தனையோடு போட்டோஷூட்டை நிறைவு செய்தேன் என்கிறார்.
ஓர் மனசாட்சியுள்ள Gen-Z படைப்பாளராக இருப்பவருக்கு, சமூக மற்றும் காலநிலை ஆகிய இரண்டிலும் நிலைத்தன்மை மற்றும் பிராண்டின் தாக்கம் ஆகியவற்றை அறிந்து இருப்பது முக்கியம். எனக்குத் தெரிந்தவரை கலைக்கு எல்லைகள் இல்லை.
தெற்காசிய ஃபேஷனை (இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற தெற்காசிய நாடுகளிலும், அது இலங்கை அல்லது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி) நிலைநிறுத்தி, அனைத்தையும் மேம்படுத்த விரும்புவதை நான் கண்டேன். இது நல்ல முயற்சியாகத் தோன்றியது.
தனது நம்பிக்கையான எதிர்காலத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் ஸ்ரீராம், சில விஷயங்களை எக்காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாராம். குறிப்பாக அவரது கருமையான தோலை மாற்றுவது போன்றவற்றைக் கூறலாம். இதனால் தன்னை போன்ற மற்றவர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்கிறார்.
மற்றவர்கள் எனது வளர்ச்சியை பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களும் என்னைப் போல தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள் என்பதால், எனது படைப்பாற்றலை விளம்பரப்படுத்த விரும்பினேன் என்கிறார். மேலும், பழைய மரபுகள் மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆய்வு செய்து அனைத்து அழகியல் பாணிகளையும் ஆராய்ந்து வருகிறார் என்பது குறிப்படத்தக்கதாகும்.
"எனது பாணி நிறைய வளர்ச்சியடைந்து வருவதை நான் கண்கூடாக காண்கிறேன். நான் எது சுயஉருவப் படங்களின் மூலம் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்." என்கிறார் ஸ்ரீராம்.
தகவல் உதவி: homegrown.co.in | தமிழில் பரணீதரன்.