மாவட்டத்தையே சீர்திருத்திய ஐபிஎஸ் அதிகாரி - மக்களின் அன்பை பெற்று சாதித்தது எப்படி?
'இங்குள்ள மாணவர்கள் அனைவரும் திறமையானவர்கள். பொருளாதார கஷ்டம் காரணமாக அவர்களால் சாதிக்க முடியவில்லை. இங்குள்ள மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம்..."
நாகாலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தொலைதூரப் பகுதியான நோக்லக், மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நோக்லாக் தலைமையகம் 7,674 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது, அவர்களில் 48 சதவீதம் பெண்கள். அங்கிருக்கும் மக்களின் கல்வியறிவு விகிதம் 83 சதவீதம்.
இத்தகைய ஊக்கமளிக்கும் புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், போதைப்பொருள் மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு இப்பகுதி அதிக அளவில் நடந்துகொண்டிருக்கின்றன. உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் 2016 பேட்ச்-ஐ சேர்ந்த காவல்துறை அதிகாரியான பிரித்பால் கவுருக்கு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடிவு செய்தார். அவர் அந்த உள்ளூர் மக்களின் வாழ்க்கையை சிறப்பான முறையில் மாற்ற எண்ணினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு அளித்த பேட்டியில்,
“நோக்லாக் மியான்மருடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது அநேகமாக நாட்டின் தொலைதூர மாவட்டமாகும். இதற்கு உள்கட்டமைப்பு இல்லை. நான் காலை வேளைகளில், வாழ்க்கையில் புதிய சில திசைகளை காட்ட அம்மாக்களுக்கு வகுப்புகள் நடத்தலாம் என நினைத்தேன்,” என்றார்.
கவுர், டுயென்சாங் மாவட்டத்தில் பணியாற்றும் போது சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களைப் பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். பின்னர், சமூகவலைதளங்ள் மூலம் தகவல் அறிந்து நோக்லக் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். இப்பகுதியில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதனால் மாணவர்கள் மற்றும் கற்றுக்கொடுப்பவர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதற்கு முன் இதனை நடத்தி முடிக்க முடியும். கவுர் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை மாணவர்களுக்கு கொடுக்கும் புத்தகங்களுக்காக செலவிடுகிறார். மேலும் மாணவர்களுக்கான ஆய்வுப் பொருட்களையும் அவரே வாங்கி கொடுக்கிறார்.
கோச்சில் சென்டரில் மாணவர்கள், சிவில் சர்வீசஸ் தேர்வையும், பணியாளர்கள் தேர்வு ஆணையம், மத்திய ஆயுத போலீஸ் படைகள், வங்கி மற்றும் மாநில அளவிலான துறை தேர்வுகளையும் எதிர்கொள்ள பயிற்சி பெறுகின்றனர்.முதல் நாளில், 28 ஆர்வலர்கள் வகுப்பில் சேர்ந்தனர், இரண்டாவது நாளில் அந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது.
”இங்குள்ள மாணவர்கள் அனைவரும் திறமையானவர்கள். பொருளாதாரக் கஷ்டம் காரணமாக அவர்களால் சாதிக்க முடியவில்லை. இங்குள்ள மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். இதனால் அவர்கள் வாழ்க்கையிலும், எதிர்காலத்திலும் சிறந்து விளங்க முடியும். மாணவர்கள் தான் சக்திவாய்ந்த சமூகத்தையே உருவாக்குகிறார்கள்,” என்கிறார் கவுர்.
இதேபோன்ற பயிற்சி மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் துன்சாங்கில் வழங்கப்பட்டது, இதன் மூலம் ஏழு மாணவர்கள் இந்த ஆண்டு நாகாலாந்து பொதுச் சேவை ஆணையத்தின் ஆரம்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. கவுர் ஐபிஎஸ் அதிகாரியாக ஆவதற்கு முன்னர். ஒரு பல் மருத்துவராக ஹைதராபாத்தில் பணிபுரிந்தார். பல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்தார்.
மியான்மருடனான நுண்ணிய சர்வதேச எல்லைக்கு அருகாமையில் இருப்பது போதைப் பழக்கம் உடையவர்களாக இப்பகுதி மக்களை மாற்றுகிறது. கவுர் ஒரு போதைப்பொருள் தடுப்புக் குழுவை உருவாக்கி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இப்பகுதியில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுபடுத்தியுள்ளார். அன்பு, கவனிப்பு மற்றும் பச்சாத்தாபம் ஆகியவை போதை பழக்கத்தை வெல்ல உதவும் என்று அவர் கூறுகிறார்.
சிகிச்சையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட போதைக்கு அடிமையானவர்களை அவர் சமீபத்தில் சந்தித்தார். மேலும் புதியா வாழ்வாதாரத்தை உருவாக்கும் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அவர்கள் எவ்வாறு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்பது குறித்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
கட்டுரை: Think change India | தொகுப்பு: மலையரசு