Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

வடபழனி Fortis மருத்துவமனையை வாங்கி சென்னையின் 2வது பெரிய மருத்துவமனை ஆனது காவேரி மருத்துவமனை!

வடபழனி Fortis மருத்துவமனையை வாங்கி சென்னையின் 2வது பெரிய மருத்துவமனை ஆனது காவேரி மருத்துவமனை!

Thursday June 22, 2023 , 2 min Read

சென்னையின் மிகப்பெரிய சங்கிலித் தொடர் மருத்துவமனைகளைக் கொண்டுள்ள ஸ்ரீ காவேரி மெடிக்கல் கேர் இந்தியா லிமிடெட் (காவேரி மருத்துவமனை) வடபழனியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையினை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான 'காவேரி மருத்துவமனை' டாக்டர் எஸ். சந்திரகுமார் மற்றும் டாக்டர். எஸ். மணிவண்ணன் அவர்களால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள மருத்துவச் சந்தையை நோக்கமாக வைத்து தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு தலைமுறைகளாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை, உறுதியான காலடி தடம் பதித்ததன் விளைவாக தென்னிந்தியாவில் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக பிரபலமடைந்திருக்கிறது.

1999ல் 30 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக செயல்படத் தொடங்கிய kauvery hospitals தற்போது சென்னை, திருச்சி, பெங்களூரு, சேலம், ஓசூர், திருநெல்வேலி என 6 நகரங்களில் 2000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை குழுமமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இதய சிகிச்சை, புற்றுநோயியல், நரம்பியல், சிறுநீரக அறிவியல், எலும்பியல், உறுப்பு மாற்று சிகிச்சைகள் போன்றவற்றில் உயர் தர சிகிச்சைகளை இந்த மருத்துவமனைகளின் நெட்வொர்க் வழங்குகிறது.

காவேரி மருத்துவமனை சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் ரேடியல் சாலையில் உள்ள படுக்கை வசதியுடன், தற்போது சென்னை வடபழனியின் 200+ படுக்கை வசதியை கொண்ட ஃபோர்டிஸ் மருத்துவமனையை கைப்பற்றுவதன் மூலம் 750+ படுக்கை வசதி கொண்ட சென்னையின் இரண்டாவது பெரிய மருத்துவமனை குழுமமாக உயர்ந்துள்ளது.

இது அடுத்த 18 மாதங்களில் 1000+படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக காவேரி விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையின் முக்கிய அடியாகும்.

fortis

"காவேரி மருத்துவமனை தங்களுடைய விரிவாக்கப் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது, 2025க்குள் ஒவ்வொரு நகரத்திலும் ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றுவதே இலக்கு. இதே போன்று தென் இந்தியாவில் கூடுதலாக 7 நகரங்களில் மருத்துவமனைகளைத் தொடங்கி மொத்தம் 15 நகரங்களில் மருத்துவமனைகளை இயக்கவும், 3000+ படுக்கை வசதிகளுடனான மருத்துவமனையான பின்னர் அடுத்த 3 ஆண்டுகளில் ஐபிஓ எனப்படும் நிறுவனப் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. வடபழனி போர்டிஸ் மருத்துவமனையினை கைப்பற்றுவதன் மூலம் காவேரி மருத்துவமனை சென்னையில் இரண்டாவது பெரிய சங்கிலித் தொடர் மருத்துவமனை குழுமம் ஆகியுள்ளது."

தற்போதைய சந்தையில் இருக்கும் முதன்மைப் பொறுப்பை தக்கவைத்து தொடர் வளர்ச்சி காண வேண்டும் என்கிற இலக்குடன் தொடர்ந்து காவேரி மருத்துவமனை செயல்படும், என்று காவேரி மருத்துவமனைகள் குழுவின் தலைவரும் நிறுவனருமான டாக்டர். சந்திரகுமார் தெரிவித்துள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சென்னையில் 3 மருத்துவமனைகள் 5 நகரங்களில் 9 கூடுதலான மருத்துவமனைகள் என்று தமிழ்நாடு மற்றும் பெங்களூரில் நாங்கள் எங்களுடைய இருப்பை உறுதியாக வைத்துள்ளோம். புதிதாக வடபழனி Fortis Healthcare மருத்துவமனையை வாங்கியுள்ளது நகரின் எல்லா பகுதிகளில் இருக்கும் மக்களையும் அதிக அளவில் எங்களின் சேவை சென்றடைய வழிவகுக்கும். எங்களுடைய விரிவாக்கப் பணியின் தொடர்ச்சியாக இந்த நிதியாண்டிலேயே திருச்சி மற்றும் பெங்களூரில் மேலும் 2 மருத்துவமனைகளை திறக்க உள்ளோம். மருத்துவ விதிகளுக்கு உட்பட்டு உயர் தரத்திலான மருத்துவ சேவையைத் தொடர்ந்து முதல் தரத்தில் நாங்கள் வழங்குவோம்,” என்று, காவேரி மருத்துவமனைகள் குழும நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர். எஸ். மணிவண்ணன் தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பு கூறுகிறது.