Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

குடும்ப ரெஸ்டாரண்ட் வணிகத்தில் புதிய சுவைகளை கூட்டி பிசினசை மேம்படுத்திய காவ்யா கிருஷ்ணமூர்த்தி!

புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்தது, இந்தப் பயணத்தில் சந்தித்த சவால்கள், கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் கிடைத்த கற்றல் அனுபவம் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை ஹெர்ஸ்டோரி உரையாடலில் பகிர்ந்துகொண்டார் Veekes & Company நிர்வாக இயக்குநர் காவ்யா கிருஷ்ணமூர்த்தி.

குடும்ப ரெஸ்டாரண்ட் வணிகத்தில் புதிய சுவைகளை கூட்டி பிசினசை மேம்படுத்திய காவ்யா கிருஷ்ணமூர்த்தி!

Tuesday October 18, 2022 , 4 min Read

காவ்யா கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் ரெஸ்டாரண்ட் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். காவ்யா வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டபோது பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.

பல்வேறு எஸ்கேயூ-க்களையும் பிராடக்டுகளையும் அறிமுகப்படுத்தினார். இவரது குடும்பத்தினர் Veekes and Thomas என்கிற பெயரின்கீழ் பல்வேறு கிளைகள் கொண்ட பட்ஜெட் காண்டினெண்டல் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தனர்.

மணிப்பால் பல்கலைக்கழகத்தில் சமையல் கலையில் பட்டப்படிப்பு முடித்த பிறகு, JW Marriott Marquis செஃப் வேலைக்காக துபாய் சென்றார் காவ்யா. நாட்டின் மிகச்சிறந்த செஃப்களுடன் பணியாற்றும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது. இதனால் பிரென்சு மற்றும் பெரு நாட்டு உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.

சர்வதேச சமையல் போட்டிகளில் ஐக்கிய அரபு நாடுகள் சார்பாக பங்கேற்றிருக்கிறார். Cilantro Pesto, Pepper Alfredo Pasta Sauces, Aglio Olio Dry Toss என பல்வேறு பிராடக்ட்ஸை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறார்.

kavya krishnamurthy

காவ்யா கிருஷ்ணமூர்த்தி - நிர்வாக இயக்குநர், Veekes & Company

புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்தது, இந்தப் பயணத்தில் சந்தித்த சவால்கள், கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் கிடைத்த கற்றல் அனுபவம் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார் Veekes & Company நிர்வாக இயக்குநர் காவ்யா கிருஷ்ணமூர்த்தி.

Veekes & Company நிறுவனத்திற்கான எஸ்கேயூ-க்களை எப்படி உருவாக்கினீர்கள்?

காவ்யா கிருஷ்ணமூர்த்தி: உணவு தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வருகிறேன். உணவு சார்ந்த அறிவியல், சமையல் கலை ஆகியவற்றின் கலவையுடன் எங்கள் தயாரிப்பு சுவை மிகுந்ததாக இருக்கிறது. வணிக மேம்பாடு மற்றும் விற்பனை பிரிவை நான் மேற்பார்வையிட்டு வந்தேன்.

மிகப்பெரிய கற்றல் அனுபவம் எனக்குக் கிடைக்கிறது. பேக்கேஜிங், லாஜிஸ்டிக்ஸ், குழு நிர்வாகம் போன்றவற்றைக் கையாள்வது சவாலானது. அத்துடன் வெண்டார்கள், சப்ளையர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோரும் இணைந்து பணியாற்றுவதும் சவாலான விஷயமாக இருந்து வருகிறது.

2021ம் ஆண்டு தொடக்கத்தில் யூகே-வில் மேன்செஸ்டர் மெட்ரோபொலிடன் கல்வி நிறுவனத்தில் உணவு அறிவியல் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க முடிவு செய்தேன். இப்போதும் யூகே-வில்தான் இருக்கிறேன்.

சொந்தமாக கார்ப்பரேட் அட்வைசரி பிராக்டீஸில் ஈடுபட்டு வரும் என் அப்பா வணிகத்தை நிர்வகித்து வருகிறார். நான் தொலைவிலிருந்து சில குறிப்பிட்ட அம்சங்களை நிர்வகித்து வருகிறேன்.

இந்தப் பிரிவில் செயல்படுவதற்கான காரணம் என்ன? உங்கள் முயற்சி எந்தப் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது?

காவ்யா கிருஷ்ணமூர்த்தி: 2009ம் ஆண்டு என் அப்பா Veekes & Thomas என்கிற பெயரில் பட்ஜெட் காண்டினெண்டல் ரெஸ்டாரண்டுகளைத் தொடங்கினார். எங்கள் ரெஸ்டாரண்ட் உணவின் சுவை மக்களிடையே பிரபலமானது. ஆரம்பகால சுவையை இன்றளவும் பலர் நினைவில் வைத்துள்ளனர். ஒரு டிஷ்ஷின் விலை 180 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மையப்படுத்தப்பட்ட சமையலறை, தரப்படுத்தப்பட்ட மிக்ஸ் என ஒவ்வொன்றாக ஆராய்ந்தோம்.

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு வணிகத்தில் ஈடுபடவும் முடிவு செய்தோம். ரெஸ்டாரண்டில் வழங்கிய அதே சாஸ், சூப் ஆகியவற்றை வீட்டிலோ விரைவு சேவை வழங்கும் ரெஸ்டாரண்டிலோ தயாரிக்கும் வகையில் குறைந்த விலையில் வழங்கத் தீர்மானித்தோம்.
veekes

எங்களது சர்வதேச சுவைகள்:

சூப்: Mulligatawny, French Onion, Minestrone

பாஸ்தா சாஸ்: Pepper alfredo, Cilantro pesto, Tomato Primavera, Masala de inde, Aglio olio

அடுத்து சமையல் வேலையில் இருக்கும் சிரமங்களைக் குறைக்க விரும்பினோம்.

மசாலா அரைப்பது, புளியை ஊறவைப்பது, பருப்பை வேகவைப்பது என ஒரு டிஷ் தயாரிக்க எத்தனையோ செயல்முறைகளைக் கடந்து வரவேண்டியிருப்பதால் இதை எளிமையாக்க விரும்பினோம். எங்கள் தென்னிந்திய வகைகளைக் கொண்டு 10 நிமிஷத்தில் சமைக்கமுடியும்.

2-மினிட் சவுத் இந்தியன் தயாரிப்பு: சாம்பார், ரசம், மோர்குழம்பு போன்ற உணவு வகைகளை வெறும் 2 நிமிடங்களில் சமைத்துவிடலாம்.

மூலப்பொருட்கள் வாங்குவது, தயாரிப்புப் பணிகள் என உங்கள் வணிகத்தின் செயல்முறையைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.

காவ்யா கிருஷ்ணமூர்த்தி: முதலில் தயாரிப்புகளை என் கிச்சனில் தயாரிக்கிறோம். அதன் பிறகு அந்த ரெசிபி எங்கள் அறிவுறுத்தலின்படி, இந்தியாவின் முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன. முதலீட்டை கருத்தில் கொண்டு இந்த முறையைப் பின்பற்றுகிறோம். இதனால் துரிதமாக வளர்ச்சியடைய முடிகிறது. அதுமட்டுமின்றி, உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்க முடிகிறது.

என் சகோதரர் ஆத்ரேயா எங்கள் தயாரிப்புகளின் பேக்கேஜிங் டிசைன் பணிகளை கவனித்துக்கொள்கிறார். அவர் ஒரு கிராஃபிக் டிசைனர். அவர் டிசைன் செய்த பிறகு தெற்கு பெங்களூருவில் உள்ள உள்ளூர் நிறுவனம் மொத்தமகாத் தயாரித்துக் கொடுக்கிறது.

நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன? அவற்றை எப்படி எதிர்கொண்டீர்கள்?

காவ்யா கிருஷ்ணமூர்த்தி: எத்தனையோ நிறுவனங்கள் விசி-க்களிடம் நிதி பெற்று பெரியளவில் செயல்படும் நிலையில் எங்கள் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள சில்லறை வர்த்தகர்களையும் விநியோகஸ்தர்களையும் சம்மதிக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

veekes instant mix
எங்களுக்கு நன்றாக பழக்கப்பட்ட ஸ்டோர் உரிமையாளர்களை முதலில் அணுகினோம். இவர்கள் இன்றளவும் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். இவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மூலம் அணுகுவதைக் காட்டிலும் நேரடியாக ஸ்டோர்களை அணுகியது எங்களுக்கு பலனளித்தது.

25 நகரங்களில் Big Basket, Nilgiris, Delfinos. Dorabjees, Pazhamudhir, Magsons, The Organic World என 150-க்கும் அதிகமான அவுட்லெட்களில் எங்கள் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்களிலும் கிடைக்கின்றன.

தொடங்கப்பட்டு ஓராண்டிற்கு பிறகே எங்களால் எங்கள் தயாரிப்பு குறித்து பெருமைப்பட முடிந்தது; நம்பிக்கையும் பிறந்தது. இந்த தாமதத்திற்கு ஒருவகையில் பெருந்தொற்றும் காரணம் என்று சொல்லலாம். எப்படியோ கடைசியாக கடந்த ஆண்டு எங்கள் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்த முடிந்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறோம்.

பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் எப்படியிருந்தன? அவற்றை எப்படி சமாளித்தீர்கள்?

காவ்யா கிருஷ்ணமூர்த்தி: பெருந்தொற்று ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மக்கள் வெளியில் சென்று சாப்பிட முடியாததால் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் நாங்கள் வழங்கிய தயாரிப்புகளை மின்வணிக தளங்கள் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டார்கள். அமேசானில் எங்கள் தயாரிப்புகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.

எங்கள் நிர்வாக செயல்பாடுகளை சீரமைக்க பெருந்தொற்று உதவியது என்றே சொல்லலாம். எங்கள் ரீடெயில் பார்ட்னர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள்.

எங்கள் தயாரிப்புகள் 60 ரூபாய், 99 ரூபாய் என இருவேறு எம்ஆர்பி கொண்டுள்ளன. ஒரு நபருக்கு 40 ரூபாய் செலவிட்டு 4 நிமிடங்களில் தயாரிக்கும் வகையில் பாஸ்தா மற்றும் சூப் மீல்ஸ் உருவாக்கினோம். அதேபோல் 100 ரூபாய் செலவில் அனைத்து மூலப்பொருட்களுடன் 4 நிமிடங்களில் தயாரிக்கும் வகையில் தென்னிந்திய மீல்ஸ் உருவாக்கினோம்.

தற்போது 120 யூனிட்களில் 125 ஸ்டோர்களுடன் செயல்பட்டு வருகிறோம். ஏராளமான போட்டிகளுக்கு மத்தியில் ஒரு மாதத்திற்கு ஒரு ஸ்டோர் மூலம் 3000 ரூபாய் வரையில் விற்பனை செய்கிறோம்.

எங்கள் ரீடெயிலர்களுடன் குறைந்தபட்ச ஆர்டர் அளவு அடிப்படையில் நாங்கள் செயல்படுவதில்லை. ஒவ்வொரு கவுண்டரில் இருந்தும் வாரந்தோறும் ஆர்டர்கள் கிடைக்கின்றன. செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லாமல், மெதுவாக அதேசமயம் நிலையாக முன்னேறி வருகிறோம்.

உங்கள் வருங்கால திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

காவ்யா கிருஷ்ணமூர்த்தி: நுகர்வோரத் தக்கவைத்துக்கொள்ள ஆர்&டி-யில் சிறப்பு கவனம், சிறு பேட்ச்களாக தயாரிப்பது போன்றவை முக்கியம். இதை செயல்படுத்தும் வகையில் 2023-ம் ஆண்டு ஒரு சிறிய தொழிற்சாலையை அமைக்க விரும்புகிறோம்.

பெருந்தொற்று காரணமாக ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டன. இப்படிப்பட்ட சூழலிலும் நாங்கள் நிலையாக வளர்ச்சியடைந்து எங்கள் வருவாயை அதிகரித்து வருகிறோம்.

வட அமெரிக்கா, யூகே மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளைச் சென்றடைவது, விநியோகம் மூலமாக விரிவுபடுத்துவது என எங்களுக்கு உரிய வேகத்தில் வளர்ந்து வருகிறோம்.

தனியார் ஈக்விட்டி சீட் பங்கு முதலீடு தொடர்பாக சில பிரபல நிறுவனங்கள் எங்களைத் தொடர்பு கொண்டன. பங்கு முதலீடு மூலம் எங்கள் வணிகத்தை 5000-க்கும் மேற்பட்ட அவுட்லெட்களாக விரிவாக்கம் செய்யலாம் என இந்தியாவின் மிகப்பெரிய விநியோக மையங்களில் ஒன்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஆரம்பகட்டத்திலேயே இருக்கின்றன.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா