பெருமூளை வாத நோய் பாதிப்பு இருந்தும் சிவில் சர்வீஸில் தேர்ச்சி பெற்ற கேரளப் பெண்ணின் கதை!
பெருமூளை வாத நோய் (cerebral palsy) மற்ற நோய்கள் போல் அல்ல. இது உடல் இயக்கத்தையே முடக்கி தசை நார் இயக்கங்களையே முடக்கிப்போடும் ஒரு விதமான கொடூரமான நோய். இத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஏ.கே.சரிகா சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
பெருமூளை வாத நோய் (cerebral palsy) சாதாரண மற்ற நோய்கள் போல் அல்ல. இது உடல் இயக்கத்தையே முடக்கி தசை நார் இயக்கங்களையே முடக்கிப்போடும் ஒரு விதமான கொடூரமான நோய். இத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஏ.கே.சரிகா சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
இவரது பெருமூளை வாத நோயால் இவரது வலது கை செயலிழந்துள்ளது, மோட்டார் பொருத்தப்பட்ட தன் சக்கர நாற்காலியை தன் இடது கையால் இயக்கிய சரிகா, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் தன் இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றார்.
922-ம் ரேங்க் எடுத்தார். முதலில் இவர் தேர்ச்சி பெற்றது இவருக்கே சந்தோஷ அதிர்ச்சியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
“தேர்ச்சி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை,” என்கிறார் சரிகா.
பட்டப்படிப்பு முடித்த பிறகே சிவில் சர்வீசஸ் தேர்வில் கவனம் செலுத்தினார் சரிகா. தன் குடும்பத்தினர், ஆசிரியர்கள் உதவியினால்தான் தன்னால் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது என்றார். தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அவர் கூறும்போது, “என் பெற்றோர் எனக்கு பெரிய ஆதரவளித்தனர்,” என்றார்.
இது போன்ற உடற்கோளாறுகள், உடல் திறன் குறைபாடு உள்ள மற்றவர்களுக்கு சரிகாவின் உத்வேக செய்தி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர், தி அல்கெமிஸ்ட் புகழ் பாவ்லோ கொயீலோ கூறியதுதான் என்கிறார்.
பாவ்லோ கொயீலோ இப்படித்தான் கூறினார்: “உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நீங்கள் நினைத்ததை அடைய சதி செய்தாவது உங்களுக்கு உதவும்.”
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் என்ற பெண்மணியைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார், ஜெசிகா காக்ஸ் உரிமம் பெற்ற விமானி ஆக வேண்டும் என்று கனவு கண்டார் அதைச் சாதித்துக் காட்டினார், என்றார்.
மேலும், அவர் சிவில் சர்வீசஸ் தேர்வின் பல்வேறு கட்டங்களையும் அதன் கடினப்பாடுகளையும் விவரித்தார். அனைத்துமே கடினமான கட்டங்கள் என்கிறார் சரிகா. முதன்மை தேர்வு கோழிக்கோட்டிலேயே நடந்ததால் சிரமமில்லை. ஆனால், பிரதான தேர்வுகளுக்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருந்தது. உடல் இயக்கம் முடக்கப்பட்ட நிலையில் எப்படி செல்வது? எனவே திருவனந்தபுரத்திற்கே சென்று அங்கு வாடகை வீடு எடுத்துத் தங்கி தேர்வுக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார் சரிகா.
கத்தாரில் பணியாற்றிய என் தந்தை இதற்காகவென்றே அங்கிருந்து வந்தார். இவரது வலது கை பயன்படுத்தக் கூடிய நிலை இல்லாததால் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி வாங்கி எழுத்தர் ஒருவரை நியமித்து அவர் மூலம் தேர்வை எழுதினார்.
பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு டெல்லிக்கு நேர்காணலுக்குச் சென்றார், அங்கு அவர் கேரளா ஹவுஸில் தங்கினார். நேர்காணல் சுமுகமாக நடந்தது, 5 பேர் கொண்ட குழு தன்னை நேர் காணல் செய்ததை விவரித்ட சரிகா,
“என்னுடைய சுயவிவர விண்ணப்பத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. என்னைப்பற்றி கோழிக்கோடு பற்றி விசாரித்தார்கள். நடப்பு விவகாரங்கள் பற்றி கொஞ்சம்தான் கேட்டனர்,” என்றார் சரிகா.
தகவல் உதவி: என்.டி.டிவி
‘ஐஏஎஸ் அதிகாரியான மளிகைக் கடைக்காரர் மகள்’ - ஸ்வேதா அகர்வால் யுபிஎஸ்சி தேர்வில் வென்றது எப்படி?