IMF இந்தியா அடுத்த நிர்வாக இயக்குநராக கே.வி.சுப்பிரமணியன் நியமனம்!
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் நிர்வாக இயக்குநராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.வி.சுப்ரமணியனின் பதவிக்காலம் நவம்பரில் தொடங்கி மூன்று ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும், இதற்கு முந்தைய நிர்வாக இயக்குனராக சுர்ஜித் எஸ் பல்லா இருந்தார்.

IMF நிர்வாக இயக்குநராக கே.வி.சுப்பிரமணியன் நியமனம்
சுர்ஜித் பல்லா 2019ல் IMF இன் குழுவில் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான சுபீர் கோகர்னுக்குப் ஜூலையில் குறுகிய நோய்க்குப் பின் இறந்ததை அடுத்து, சுர்ஜித் பதவி ஏற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம் அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பேராசிரியர் (நிதி), மற்றும் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குனர் (இந்தியா) பதவிக்கு 01.11.2022 மூன்று வருட காலத்திற்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, (எது முந்தையதோ) பதவி வகிப்பார்," என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கே.வி.சுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டு 3 ஆண்டு பதவிக்காலத்திற்குப் பிறகு தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். மீண்டும் கல்வித்துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக அப்போது அவர் அறிவித்திருந்தார்.
ஐஎஸ்பி ஹைதராபாத் பேராசிரியரான சுப்ரமணியனை அரசாங்கம் டிசம்பர் 2018 இல் CEA ஆக நியமித்தது. அவர் அரவிந்த் சுப்ரமணியனுக்குப் பிறகு பதவியேற்றார்.
கே.வி.சுப்ரமணியன் சிகாகோ பல்கலைக்கழக பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நிதிப் பொருளாதாரத்தில் எம்பிஏ மற்றும் தத்துவவியல் முனைவர் (பிஎச்டி) பட்டம் பெற்றவர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் மேற்பார்வையில் அவர் தனது பிஎச்டி முடித்தார். அவர் ஐஐடி, கான்பூரில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவர் ஆவார்.