Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

லாக்டவுன் 4: புதிய தளர்வுகள் என்ன? தொடரும் கட்டுப்பாடுகள் எவை?

தமிழகத்தில் ஊரடங்கு மே 31ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வழிமுறைகள் மற்றும் தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

லாக்டவுன் 4: புதிய தளர்வுகள் என்ன? தொடரும் கட்டுப்பாடுகள் எவை?

Sunday May 17, 2020 , 3 min Read

மத்திய அரசு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 முதல் அமல்படுத்தியது தொடர்ந்து தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியது. மேலும் மத்திய அரசு இந்த ஊரட்டங்கினை 17 மே வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்ததை பின்பற்றி தமிழக அரசும் இதை நடைமுறைப் படுத்தியது.


கடந்த மே 13ம் தேதி அன்று நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 33 சதவிகிதம் பணியாளர்கள் அளவை 50% வரை உயர்த்தியும் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள SEZ, EOU & Export units- 50 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

lockdown 4

மே 13ம் தேதி அன்று நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களின் காணொளி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்கள் குழு உடன் மே 14 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ்,

ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வழிமுறைகள் மற்றும் தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்

  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் ஏதுமில்லை.


  • நீலகிரி கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.


  • தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போதுள்ள நடைமுறைகளின் படி எந்தவிதமான தடைகளும் இன்றி ஊரடங்கு முழுமையாகk கடைபிடிக்கப்படும்.


  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.


  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.


புதிய தளர்வுகள்

ஊரடங்கு படிப்படியாக விளக்குவதற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் படி கீழ்கண்ட தளர்வுகள் தற்போது அறிவிக்கப்படுகிறது.


கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.


  • அந்தந்த மாவட்டங்களுக்கு போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் Tn-epass (இ-பாஸ்) இல்லாமல் இயங்க தளர்வு அளிக்கப்படுகிறது.


  • மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் சென்றுவர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


  • ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர Tn-epass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.


  • அரசுப் பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இனோவா போன்ற பெரிய வகை கார்களில் மூன்று நபர்களும், சிறிய கார்களில் இரண்டு நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.


  • மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் Tn-epass இல்லாமல் வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் அத்தியாவசியப் பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம், போன்ற பணி நிமித்தமாக பயணம் செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.


  • தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


  • சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பகுதிகளில் தற்போது உள்ள தளர்வு படி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100% பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவிகித பணியாளர்களும், அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கு குறைவாக இருக்கும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்கள், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்கள் உள்ள தொழிற்சாலைகளில் 50% பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


  • ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசியப் பராமரிப்பு பணிகளுக்கு மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவது அனுமதி.


  • 12-ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது.


  • தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்குத் தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையர் இடமும் அனுமதி பெற வேண்டும்.


தகவல்: டிஐபிஆர்