லாபம் கொழிக்கும் சந்தன மரம் வளர்ப்பு விவசாயம்!
ஒரு சந்தன மரத்திலிருந்து சுமார் 40 கிலோ வரை கட்டைகள் கிடைக்கும். இந்த மரம் ஆரம்பத்திலேயே காப்பீடு செய்யப்படுகிறது. சந்தன மரம் ஐந்து டிகிரி முதல் ஐம்பது டிகிரி செல்ஷியஸ் வரையிலும் உள்ள வெப்பநிலையில் வளரக்கூடியதாகும்.
நம் நாட்டில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நடைமுறைகளை மாற்றி வருகின்றனர். இனி வரும் காலங்களில் விவசாயத்தின் அடையாளமே முழுமையாக மாறிவிடும் என்றே தோன்றுகிறது. குஜராத் மற்றும் பஞ்சாப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சந்தன மர வளர்ப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். இதன் மூலம் ஒரு விவசாயி 10 மில்லியன் ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளார்.
தற்போது விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றி வருவாய் ஈட்டி வருகின்றனர். குஜராத்தைப் போன்றே பஞ்சாபிலும் சந்தன மரம் சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிக்கும் முயற்சியில் வேளாண் துறை ஈடுபட்டுள்ளது. அங்குள்ள விவசாயிகளும் சந்தனத்தை பயிரிட்டு வருகின்றனர்.
சந்தன மரம் அதிகபட்சமாக முப்பது ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரத்தின் வாசனை மிகுந்த தண்டு பகுதியானது சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் உருவாகத் துவங்குகிறது. மூன்று முதல் நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்யலாம். இதற்கு அதிக அவகாசம் தேவைப்பட்டபோதும் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் மிகவும் அதிகமானதாகும்.
இந்த மரம் கிலோ ஒன்றிற்கு 12,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை கிலோவிற்கு மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
ஒரு சந்தன மரத்திலிருந்து சுமார் 40 கிலோ வரை கட்டைகள் கிடைக்கும். இந்த மரம் ஆரம்பத்திலேயே காப்பீடு செய்யப்படுகிறது. சந்தன மரம் ஐந்து டிகிரி முதல் ஐம்பது டிகிரி செல்ஷியஸ் வரையிலும் உள்ள வெப்பநிலையில் வளரக்கூடியதாகும். இத்தகைய சூழலில் குஜராத்தைப் போன்றே பஞ்சாப் மண்ணும் வானிலையும் சந்தன மரம் வளர்வதற்கு உகந்ததாகவே காணப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் பரூச் என்கிற பகுதியின் அல்வா என்கிற கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான அல்பேஷ் முதல் முறையாக சந்தன மரத்தை வளர்க்கத் தீர்மானித்தார். இந்த கிராமம் சூரத்திலிருந்து சுமார் எழுபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அல்பேஷ் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புடைய தனது நிலத்தை அடமானம் வைத்து சந்தன மர வளர்ப்பில் ஈடுபட்டார். சந்தன மரங்களை பதினைந்து ஆண்டுகளில் விற்பனை செய்தால் ஐம்பது மடங்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். இருப்பினும் அனைத்தும் எளிதாக இருந்துவிடவில்லை.
அந்த சமயத்தில் குஜராத் அரசாங்கம் சந்தனத்தை பயிர் செய்வதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. இருப்பினும் புதிய வானிலையிலும் புதிய சூழலிலும் சந்தன மரத்தை வளர்க்கும் ஆபத்தான முயற்சியை பல விவசாயிகள் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் அல்பேஷ் இதை துணிந்து ஏற்றுக்கொண்டு தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் ஆயிரம் சந்தன மரங்களை நட்டார்.
ஆரம்பத்தில் பயிர் நஷ்டத்தை சந்தித்தது. அதன் பிறகு மாநிலத்தின் வேளாண் ஆராய்ச்சி கழகம் மூலம் சந்தன மரம் வளர்ப்பு குறித்து அதிகம் தெரிந்துகொண்டு அனுபவம் பெற்றார். நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய நிலை இருக்கும் என்பதை உணர்ந்தாலும் மற்ற விவசாயிகள் போன்று இவர் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. சந்தன மரம் வளர்ப்பைத் தொடர்வது என்று தீர்மானித்தார். குஜராத் அரசாங்கம் சந்தன மரம் வளர்ப்பை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது அதன் விற்பனையிலும் ஏற்றுமதியிலும் விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டியது.
அல்பேஷ் தனது மரங்களை விற்பனை செய்து 1.5 கோடி ரூபாய் ஈட்டினார். அல்பேஷின் இந்த முயற்சியை மாநில அரசாங்கம் பாராட்டி கௌரவித்தது.
பஞ்சாபின் மண்ணும் வானிலையும் சந்தன மரம் வளர்ப்பதற்கு உகந்ததாகவே காணப்படுகிறது. எனவே இங்குள்ள வனத்துறை சந்தன மரங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுவதற்கான திட்டங்களை உருவாக்கத் துவங்கியது. அத்துடன் ரோப்பர், லூதியானா, ஹோஷியாபூர், பாதிண்டா ஆகிய பகுதிகளிலும் மரங்கள் நடப்பட்டது. கலூடியில் நடப்பட்ட சந்தன மரங்கள் இருபது ஆண்டுகள் பழையானது.
வனத்துறை இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்யும். விவசாயிகள் சந்தன மரங்கள் வளர்ப்பில் ஈடுபட ஊக்குவிப்பதற்காகவும் மரங்கள் நடப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பஞ்சாபின் சோமாரா பகுதிக்கு அருகில் சந்தன மரத்தை வளர்த்து வரும் அருண் குர்மி கர்நாடகாவில் உள்ள Institute of Wood Science and Technology மூலமாக சந்தன மரம் வளர்ப்பு சார்ந்த பயிற்சி பெற்றதாக குறிப்பிடுகிறார். இவர் கடந்த ஆண்டு சந்தன மரங்களுக்கான நர்சரியைத் துவங்கியுள்ளார். தற்போது விவசாயிகள் பயிர் செய்வதற்காக சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
சந்தன மரத்தை வளர்ப்பதன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறமுடியும். இது நீண்ட கால முதலீடாகும். சந்தன மரம் விற்பனைக்கு தயாரானதும் சிறப்பாக லாபம் தருவதால் விவசாயிகள் பல தலைமுறைகள் தற்சார்புடன் இருக்கமுடியும். அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவன திட்டங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் அதிக லாபம் தரக்கூடியதாகும்.
சந்தன மரம் வளர்ப்பில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒன்றரை கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும். சந்தன மரக்கட்டை ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நர்சரியில் இருந்து சந்தன மரக்கன்றுகளை வாங்கியோ அல்லது விதைகளை விதைத்தோ சந்தன மரம் வளர்க்கலாம். சந்தன மரம் செம்மண்ணில் நன்றாக வளரும். இந்த மரம் பாறையான பகுதிகள், சுண்ணாம்பு கலந்த மண் போன்றவற்றிலும் தாக்குப்பிடிக்கக்கூடியதாகும்.
ஏப்ரல் மற்றும் மே மாதம் நிலம் பயிரிட தயார்படுத்தப்படுகிறது. அதற்கு முன்பு நிலம் இரண்டு அல்லது மூன்று முறை உழப்படும். ஒவ்வொரு மரக்கன்று வரிசைக்கும் இடையே முப்பது முதல் நாற்பது செ.மீ இடைவெளி விடவேண்டும். பருவமழைக்காலத்தில் இவை வேகமாக வளரும். ஆனால் கோடைக்காலத்தில் நீர்பாசனம் அவசியம். தண்ணீரை சேமிக்க சொட்டு நீர் பாசன முறை பின்பற்றப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக நானூறு மரங்கள் நடலாம்.
சந்தன மரக்கன்று நாற்பது முதல் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த மரக்கன்றுகளை நட்ட பிறகு அவற்றை பாதுகாக்க வேலி அமைக்கவேண்டியது அவசியம். இதற்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் செலவிட நேரும். மேலும் இவை திருடு போகும் அபாயம் இருப்பதால் காப்பீடு செய்யப்படுவதும் அவசியமாகிறது.
தகவல் உதவி: Downtoearth