ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய 'Meta Threads' - அப்படி என்ன இருக்கு இதுல?
ட்விட்டருக்குப் போட்டியாக மார்க் ஜூக்கர்பெர்க் உருவாக்கிய மெட்டா த்ரெட்ஸ் (Meta Threads) இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டருக்குப் போட்டியாக மார்க் ஜூக்கர்பெர்க் உருவாக்கிய மெட்டா த்ரெட்ஸ் (Meta Threads) இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, தற்போது ட்விட்டருக்கு போட்டியாக 'த்ரெட்ஸ்' என்ற புதிய ஆப்பை இன்று அறிமுகப்படுத்தியது. ஐரோப்பாவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் பயனர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்று எல்லா நாடுகளிலும் அதிகாரிப்பூர்வ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
“இன்ஸ்டாகிராம் சிறப்பாக செயல்படுவதை அடுத்து, டெக்ஸ்ட், யோசனைகள் மற்றும் உங்கள் மனதில் உள்ளதைப் பற்றி விவாதிப்பதற்காக புதிய அனுபவத்தை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்...” என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து, அதில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை செய்து சர்ச்சையை உருவாக்கி வருகிறார் எலான் மஸ்க். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா த்ரெட்ஸ் என்ற ஆப்பை களமிறக்கியுள்ளார்.
மெட்டா த்ரெட்ஸ் ஆப்:
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றை கலவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்டா த்ரெட்ஸ் ஆப்பை இப்போது ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதிலும் ட்விட்டரைப் போலவே ஹேஷ்டேக்குகள், ட்ரெண்டிங் தலைப்புகள் படைப்பாளர்களுடன் இணைவதற்கான ஆப்ஷன்கள் உள்ளன.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது த்ரெட்ஸ் பதிவில்,
"விருப்பம் மற்றும் நட்பிற்கான இடத்தை உருவாக்குவதே த்ரெட்ஸின் நோக்கம்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
முதல் இரண்டு மணி நேரத்திலேயே 2 மில்லியன் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளதாக ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
"முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் பேர் ஆப்பில் பதிவு செய்துள்ளனர்,” என பதிவிட்டுள்ளார்.