போலிச் செய்திகளைக் கண்டுபிடித்து சரி செய்ய பிடிஐ உடன் Meta கூட்டுறவு!
தொழில்நுட்பத்தில் பெரிய சமூக ஊடகமான மெட்டா பிடிஐ செய்தி நிறுவனத்துடன் கூட்டுறவு ஒப்பந்தம் மேற்கொண்டு தங்கள் பக்கங்களில் வரும் தகவல்கள், உள்ளடக்கங்கள் மற்றும் கருத்துக்களின் உண்மையைத் தன்மையை சோதனை செய்ய முடிவெடுத்துள்ளது.
தொழில்நுட்பத்தில் பெரிய சமூக ஊடகமான மெட்டா பிடிஐ செய்தி நிறுவனத்துடன் கூட்டுறவு ஒப்பந்தம் மேற்கொண்டு தங்கள் பக்கங்களில் வரும் தகவல்கள், உள்ளடக்கங்கள் மற்றும் கருத்துக்களின் உண்மையைத் தன்மையை சோதனை செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்த கூட்டாண்மை மூலம், செய்தி நிறுவனம், அதன் ஆசிரியர்கள் குழுவில் ஒரு பிரத்யேக உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை அமைத்துள்ளது, மெட்டா தளங்களில் தவறான தகவல்களுக்கான உள்ளடக்கத்தைக் கண்டறிந்து மதிப்பீடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்று மின் ஊடகங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருவதையடுத்து தவறான தகவல்களையும் பொய்களையும் புனைச்சுருட்டுகளையும் அறிவுக்குதவாத குப்பைத் தகவல்களையும், உண்மையற்ற தவறான தரவுகளையும் செய்திகளையும் வழங்குவதாகத் தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மெட்டாவின் இந்த முன் முயற்சி பொய்யர்களுக்கும் புனைச்சுருட்டாளர்களுக்கும் ஒரு பெரிய செக் வைப்பதாக அமையும்.
இந்த முன்முயற்சியின் கீழ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலாகும் விஷயங்களின் தன்மைகளை அடையாளம் கண்டு, மதிப்பாய்வு செய்து, மதிப்பீடு செய்வதன் மூலம் தவறான தகவல்களை எதிர்த்துப் போராட, சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு நெட்வொர்க் (IFCN) சான்றளிக்கப்பட்ட சுயாதீன மூன்றாம் தரப்பு உண்மைச் சரிபார்ப்பாளர்களான பிடிஐயுடன் மெட்டா கூட்டாண்மை மேற்கொண்டுள்ளது.
60க்கும் மேற்பட்ட மொழிகளில் வைரலாகும் தவறான தகவல்களை மதிப்பாய்வு செய்ய உலகளவில் 100 கூட்டாளிகளுடன் ஒரு சுயாதீன உண்மை அறியும் வலைப்பின்னலை நிறுவியுள்ளது.
“பிடிஐ உடனான இந்த கூட்டாண்மை மூலம், நாங்கள் இப்போது இந்தியாவில் 12 உண்மைச் சரிபார்ப்புக் கூட்டாளிகளைக் கொண்டுள்ளோம், இது உலகளவில் மெட்டா முழுவதிலும் உள்ள மூன்றாம் தரப்பு உண்மைச் சரிபார்ப்புக் கூட்டாளிகளைக் கொண்ட ஒன்றாக மாறியுள்ளது. ஆங்கிலம் உட்பட இந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பஞ்சாபி, அஸ்ஸாமி, மணிப்பூரி/மெய்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், காஷ்மீரி, போஜ்புரி, ஒரியா மற்றும் நேபாளி உள்ளிட்ட எங்களின் தற்போதைய உண்மைச் சரிபார்ப்புக் கூட்டாளிகள் மூலம் எங்கள் இந்திய மொழி கவரேஜ் 16 ஆக உள்ளது,” என்று நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உண்மைச் சரிபார்ப்பவர் மெட்டாவில் பதிவிடப்பட்ட உள்ளடக்கங்கள், தகவல்களைத் தவறான, மாற்றப்பட்ட அல்லது பகுதியளவு தவறானதாகக் கண்டறியும் போதெல்லாம், அதன் பரவலைக் கட்டுப்படுத்த மெட்டா அதன் வீச்செல்லையைக் குறைத்து விடும்.
தகவல்கள், தரவுகள், உள்ளடக்கங்கள், கருத்துக்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கபட்ட பிறகு பயனாளர்களுக்கு தவறு சுட்டிக்காட்டப்பட்டு இதோடு உண்மை சரிபார்ப்பவரின் சரியான தகவல்களும் பயனாளர்களிடம் இணைக்கும் எச்சரிக்கை லேபிள்களும் தெரிவிக்கப்படும், அதாவது, மூலப்பதிவரின் உரிமை கோரலுக்கான கூடுதல் தகவல்களை இது வழங்குகிறது.
சமீபத்தில், மிஸ் இன்பர்மேஷன் கம்பாட் அலையன்ஸ் (எம்சிஏ) மற்றும் மெட்டா ஆகியவை வாட்ஸ்அப்பில் உண்மைச் சரிபார்ப்புக்கான சிறப்பு ஹெல்ப்லைனைத் தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்தன. பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் பயனர்களை தவறாக வழிநடத்தக்கூடிய டீப்ஃபேக் வீடியோக்கள் தவறாக வழிநடத்தும் சிக்கலைத் தீர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.