Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

முதலீடு 10 லட்சம், 3 ஆண்டில்; ரூ.1.85 கோடி வருமானம்...

2016ல் இரண்டு கல்லூரி மாணவர்கள் இணைந்து சொந்த நிதியில் துவக்கிய மில்க்ஷேக் நிறுவனம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.85 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்தது எப்படி?

முதலீடு 10 லட்சம், 3 ஆண்டில்; ரூ.1.85 கோடி வருமானம்...

Friday January 10, 2020 , 3 min Read

உணவின் மீதான அவர்கள் ஈடுபாடு, குறிப்பாக செழுமையான, கிரீம் நிறைந்த மில்க்‌ஷேக் மீதான காதல், இரண்டு கல்லூரி நண்பர்களை உணவு மற்றும் பானம் துறையில் புதிய நிறுவனத்தைத் துவக்க வைத்தது.


பொறியில கல்லூரியில் படித்த போது சந்தித்துக் கொண்ட, ஒரே அறை நண்பர்களான, நிஷாந்த் திரிபாதி மற்றும் அனில் பரேமல், கல்லூரி கேண்டீன் மில்க்‌ஷேக்கின் நினைவுகளையே, ’ஷேக் இட் ஆப்’ (Shake It Off) எனும் ஸ்டார்ட் அப்பாக துவக்கினர்.  

மில்க்‌ஷேக்

இது 2008 ல் நிகழ்ந்தது என்கிறார் நிஷாந்த்.

“கல்லூரியில் கிடைக்கும் மில்க்‌ஷேக்கின் தரம் குறித்து அனில் எப்போதும் புலம்பிக் கொண்டிருப்பார். அது பற்றி என்ன செய்யப்போகிறார் என நினைத்துக் கொள்வேன். 2015ல், அவரை சந்திக்க துபாய் சென்ற போது, அங்கே இருந்த மில்கஷேக் கடைகள் சிலவற்றுக்கு விஜயம் செய்த போது இதற்கான பதில் கிடைத்தது,’ என்கிறார் நிஷாந்த்.  

கல்லூரியில் சுவைத்திருந்த சர்க்கரை, சிரப் கலந்த மில்க் ஷேக்குடன் ஒப்பிட்ட போது, துபாயில் கிடைத்த மில்க்‌ஷேக் நல்ல நறுமணத்துடன், புத்துணர்ச்சி தரும் வகையில் இருந்தது. நிஷாந்த், அனில் இருவருக்கும் ஏற்கனவே ஸ்டார்ட் அப் கனவு இருந்ததால், மில்க்‌ஷேக் அதற்கு இன்னும் வலு சேர்த்தது.  இருவரும் இணைந்து, 2016ல் முதல் கட்ட முதலீடான பத்து லட்சத்தை கொண்டு Shake It Off, மில்க்‌ஷேக் பிராண்டை துவக்கினர்.

ஒரு விற்பனை மையத்துடன் துவங்கியது, பெங்களுரூ, சென்னை மற்றும் தில்லியில் கிளவுட் கிச்சன்கள் மற்றும் 9 விற்பனை நிலையங்களாக வளர்ந்து, 50,000க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது.

டெய்லர் ஸ்விப்ட் உதவி

Shake It Off உற்சாகமான, இளமைத் துடிப்பு மிக்க பிராண்டாக இருந்தது. நிஷாந்த் மற்றும் அனில், இந்திய மில்க்‌ஷேக் சந்தை பற்றி நன்கறிந்திருந்தனர். இந்த சந்தை அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு 25 சதவீத வளர்ச்சி பெறக் கூடியதாக இருக்கிறது.


இந்த சந்தையில், எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய பெயர் மிகப்பெரிய பலமாக அமையும். அத்தகைய பெயரை தேடிக்கொண்டிருந்த போது, அமெரிக்க பாப் பாடகியின், ’Shake It Off’ பாடல் வெளியாகி பிரபலமானது, உதவியாக அமைந்தது.

 “உற்சாகமான, கவர்ந்திழுக்கக் கூடிய பெயரை விரும்பினோம். ஷேக்கலாட் எனும் பெயரை தீர்மானித்திருந்த போது, டெய்லர் ஸ்விப்ட் ஷேக் இட் ஆப் என பாடுவது அனில் காதுகளில் கேட்டது,” என்கிறார் நிஷாந்த்.

ஆனால் பெயர் மட்டும் அல்ல, அவர்களின் பானமும், இலக்கு வாடிக்கையாளர்களான இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு மாறியிருக்கிறது.

#thickshake அனுபவத்தை அளிக்கக் கூடிய ஒரு மெனுவை கவனமாக தேர்வு செய்தோம் என்று நிறுவனர்கள் சொல்கின்றனர். சான்ட்விச் மற்றும் பர்கர் எனத்துவங்கி பின்னர் இந்தியர்களுக்கு ஏற்ற உணவுகளாக மெனு அமைந்தது. அதே நேரத்தில், புதிய ஷேக்குகளையும் உருவக்கினர்.

எங்கள் ஷேக்குகள் ரூ.79ல் துவங்குகின்றன, ஸ்னாக்குகள் ரூ.69ல் துவங்குகின்றன,” என்று கூறும் நிறுவனர்கள் தங்களது சேவையின் முக்கிய அம்சம் பற்றிய தகவலையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

அமைதியான, வண்ணமயமான பின்னணியில், கடந்த காலத்தை நினைவு படுத்தும் போர்ட்கேம்களை கொண்ட இடமாக தங்கள் விற்பனை மையயங்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சிறந்த மெனு

ஸ்னிகா ஸ்னிகா, வென்னிலா ஸ்கை, கிட்டி கேட் உள்ளிட்ட தேர்வுகள் மெனுவில் இடம்பெற்றுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களின் ஆரோக்கிய தேர்வையும் மனதில் கொண்டு மெனு அமைந்துள்ளது. பெரி யோகர்ட் ஷேக், வே புரட்டீன் ஷேக் ஆகியவை ஆரோக்கியத்தில் நாட்டம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

மில்க்‌ஷேக்

நிறுவனர்கள் அனைவருக்கும் உகந்த மெனு மற்றும் சிறந்த #thiccshake அனுபவத்தை உருவாக்குதில் கவனம் செலுத்தினர். இதன் காரணமாகவே, உணவுத் துறையில் புதிய கருத்தாக்கமாக இருந்தாலும், இதன் வர்த்தகம் முதல் மூன்று ஆண்டுகளில் நல்ல வரவேற்பைப் பெற்று 2019 நிதியாண்டில் ரூ.185 லட்சத்தை எட்டியுள்ளது.


 அதுமட்டும் அல்ல நிறுவன குழுவும் வளர்ந்துள்ளது. துவக்கத்தில் 2 ஊழியர்கள் என்ற நிலையில் இருந்து தற்போது 40 ஊழியர்கள் எனும் நிலையை அடைந்துள்ளது.

“இயற்கையான முறையில் வளர்ந்திருக்கிறோம்” என்று கூறும் நிறுவனர்கள், தற்போது வாடிக்கையாளர் பரப்பு 50,000 ஆக இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டில் 3,00,000 வாடிக்கையாளர்களை பெற திட்டமிட்டிருப்பதகாவும் கூறுகின்றனர்.

Shake It Off அளிக்கும் அனுபவம், மினி கபே, கிஸோக், கிளவுட் கிட்சன் மாடல் ஆகியவற்றை கொண்டுள்ளது.  

மில்க்‌ஷேக் சந்தை

இந்திய மில்க்‌ஷேக் சந்தையில், திக் ஷேக் பேக்டரி, மேக்கர்ஸ் ஆப் மில்க்‌ஷேக், டெம்ப்டீஸ், ப்ரோசன் பாட்டில் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஷேக் இட் ஆப் போட்டியிடுகிறது. போட்டி மிகுந்த சந்தையில் நுழைந்து வளர்ச்சி பெறுவது என்பது எளிதல்ல. அதிலும் நிறுவனர்களுக்கு இந்தத் துறையில் அனுபவம் இல்லாத போது இது இன்னும் சிக்கலானது.


ஆனால், நிசாந்த் மற்றும் அனில், இந்த சவாலை திறம்பட எதிர்கொண்டுள்ளனர்.

“எந்த பின்னணியும் இல்லாமல் உணவு மற்றும் பானம் துறையில் நுழைந்த நிலையில், ஒவ்வொரு நாளும் கற்றல் அனுபவமாக இருக்கிறது,” என்கின்றனர்.  

இந்த கற்றல் அனுபவத்தில், துணிச்சலான முடிவுகளை எடுப்பதும், சொற்பமான வளத்தை திறம்பட பயன்படுத்திக்கொள்வதும், அடங்கியிருக்கிறது. உதாரணமாக, துவக்க நாட்களில் ரொக்கத்திற்கு தடுமாறியபோது, நிறுவனர்கள் கல்லூரி நிகழ்வுகள் மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் பிராண்டை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


சரியான நேரம் மற்றும் வளர்ச்சி விகிதம் இரண்டுமே இப்போது முக்கியம் என்பதால் நிறுவனர்கள், விரிவாக்கத்திற்கு பிரான்சைஸ் வழியை நாடியுள்ளனர். Shake it Off, 2022 வாக்கில் 100 விற்பனை நிலையங்கள் எனும் இலக்கை அடைய 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.


ஆங்கிலத்தில்: சுத்ரிஷ்னா கோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்