காஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது!
சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதை பெறுபவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் நெசவாளி கீதா இடம்பெற்றுள்ளார்.
சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதை பெறுபவர்களில், தமிழகத்தைs சேர்ந்த பெண் நெசவாளி கீதா இடம்பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து இந்த விருதை பெறும் ஒரே பெண் நெசவாளி என்ற சிறப்பையும் அவர் பெறுகிறார்.
மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை, ஆண்டுதோறும் சிறந்த கைத்தறி நெசவாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2014 ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
2017ம் ஆண்டில் இந்த விருதை பெற இந்திய அளவில் 11 நெசவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் நெசவாளி கீதா என்பவரும் இடம்பெற்றுள்ளார்.
பொதுவாக பட்டு சேலைகள், உடல் மற்றும் கரை பகுதியில் ஒரே இழையில் நெய்யப்படும். கோர்வை ரக பட்டு சேலைகளில், உடல் பகுதி மற்றும் கரை பகுதிக்கு தனி இழை பயன்படுத்தப்படும். 4 நாடாக்கள் கொண்டு நெய்யப்படும் இந்த வகை சேலைகள் அதிக வேலைப்பாடு கொண்டவை. இந்த வகை சேலைகள் மிகவும் அரிதாகவே கிடைக்கும். இவற்றை உருவாக்குவதும் கடினமானது.
மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்ட இந்த வகை சேலையை உருவாக்கியதற்காக, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த கீதா விருது பெற தேர்வாகியுள்ளார். திருவள்ளூர் பட்டு கைத்தறி சங்க உறுப்பினரான கீதா, தமிழகத்தில் இருந்து இந்த விருதை பெற தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே பெண் நெசவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரை தொகுப்பு: சைபர் சிம்மன்