5.5 பில்லியன் சொத்து மதிப்பு; ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளம் பணக்காரரான நிகில் காமத்!
ஜீரோதாவின் இணை நிறுவனரான நிகில் காமத், 37 வயதிலேயே இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Zerodha-2வின் இணை நிறுவனரான நிகில் காமத், 37 வயதிலேயே இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஃபோர்ப்ஸ் சமீபத்தில் உலகளவில் 100 பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவின் இளைய கோடீஸ்வரராக Zerodha-யின் இணை நிறுவனர் நிகில் காமத் இடம்பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானி, கெளதம் அதானி மற்றும் ஷிவ் நாடார் போன்ற புகழ்பெற்ற நபர்களுடன் 40வது இடத்தில் இடம் பிடித்துள்ளார். வெறும் 37 வயதில், நிகில் காமத் ’இந்தியாவின் இளைய கோடீஸ்வரர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
யார் இந்த நிகில் காமத்?
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் என்ற பட்டத்தை நிகில் காமத் பெற்றிருந்தாலும், வெற்றி மற்றும் தொழில்முனைவுக்கான அவரது பயணம் சவால்கள் நிறைந்தது.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நிகில் காமத்திற்கு படிப்பை விட தொழில் மீதே அதிக கவனம் இருந்தது. இதனால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கூட எழுதாத நிகில், கால் சென்டர் ஒன்றில் மாதத்திற்கு 8000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார். அந்த பணத்தில் இருந்து சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டத்தொடங்கினார்.
சுமார் ஓராண்டிற்கு இதையே முயற்சித்து பங்குச்சந்தை பற்றி நன்றாக அறிந்து கொண்டார். அதன் பின்னர், தனது தந்தை மற்றும் கால்சென்டர் மேலாளர் கொடுத்த பணத்தில் இருந்து சகோதரருடன் சேர்ந்து காமத் அசோசியேட்ஸைத் தொடங்கினார்.
இதனையடுத்து, நிறைய பேர் அவரது நிறுவனம் மூலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முன்வந்ததை அடுத்து, 2010ம் ஆண்டு ஜீரோதா நிறுவனம் தொடங்கப்பட்டது. வெறும் மூன்று வருடத்திலேயே இந்நிறுவனம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் கணிசமான நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
ஜீரோதா நிறுவன மதிப்பு:
ஃபோர்ப்ஸ் பட்டியலின் படி, நிதின் மற்றும் நிகில் காமத் சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.5 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்திய மதிப்பில் இது இந்திய மதிப்பில் ரூ.45,700 கோடி ஆகும். மேலும், ஜீரோடாவின் மொத்த சந்தை மூலதனம் ரூ.30,000 கோடியைத் தாண்டியுள்ளது. 2010ம் ஆண்டு ஜீரோதா என்ற ஃபின்டெக் நிறுவனத்தை நிறுவினர்.
இந்த வார தொடக்கத்தில், ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் சகோதர்கள் நிதின் மற்றும் நிகில் காமத் இருவரும் பங்கேற்றனர்.
நிதின் காமத் ரூ.35,300 கோடி சொத்து மதிப்புடன் 42வது இடத்திலும், நிகில் காமத் முறையே ரூ.23,100 கோடி மதிப்புடன் 81வது இடத்திலும் உள்ளனர்.
இதற்கிடையில், Zerodha 2022-23 நிதியாண்டில் (FY23) ரூ. 6,875 கோடி வருவாய் மற்றும் ரூ.2,907 கோடி லாபம் ஈட்டியுள்ளது, இது வருவாய் மற்றும் லாபத்தில் முறையே 38.5 சதவீதம் மற்றும் 39 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
True Beacon மற்றும் Gruhas இன் இணை நிறுவனரான நிகில் காமத், கடந்த அக்டோபர் 11ம் தேதி, தனது LinkedIn கணக்கு மூலம் "WTF ஃபண்ட்" என்ற நிதி திரட்டலை அறிவித்தார். இது வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு ஃபேஷன், அழகு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 52 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள்; அதானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அம்பானி!