டிகிரி இல்லாமல் அதிக சம்பளத்துடன் ஐடி வேலை வேண்டுமா? கூகிள் காட்டும் வழி...

தொழில்நுட்ப ஜாம்பாவனான கூகிள், ஐடி சம்மந்தமான பல கோர்ஸுகளை ஆன்லைனில் நடத்துகிறது. அதை படித்து முடித்து சான்றிதழ் வாங்கிய பலருக்கு நல்ல வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

31st Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

என்னதான் சொன்னாலும், ஐடி துறையில் நுழைந்து அதிக சம்பளம் வாங்கவேண்டும் என்பது இன்றைக்கும் பலரது கனவாக இருக்கிறது. அதுவும் தற்போது உள்ள சூழ்நிலையில், வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் பலருக்கு, கூகிள் நடத்தும் இந்த கோர்ஸ்கள் பயனுள்ளதாகவும், நல்ல ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்கவும் வழி செய்யும் என்றால் அதை முயற்சிக்கத் தானே வேண்டும்.


தொழில்நுட்ப ஜாம்பாவனான கூகிள், ஐடி சம்மந்தமான பல கோர்ஸுகளை ஆன்லைனில் நடத்துகிறது. அதை படித்து முடித்து சான்றிதழ் வாங்கிய பலருக்கு நல்ல வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. இது பெரும்பாலும் ஆன்லைன் வாயிலாக இருக்கும் படிப்புகள் தான்.

Google BERT

அதில் கூகிளின், ஐடி சான்றிதழ் படிப்பு மிகவும் பிரபலமான, அதே சமயம் நிச்சயம் வேலைவாய்ப்பை தரக்கூடியதாக இருக்கிறது. Coursera என்ற பிரபல ஆன்லைன் படிப்புத் தளத்தில் இந்த The Google IT Certificate program-க்கு பெருத்த வரவேற்பு இருக்கிறது. ஏன் தெரியுமா?

“அதிக சம்பளத்துடன், பிரபல ஐடி நிறுவனங்களில் வேலை, கல்லூரி டிகிரி தேவையில்லை. +2 முடித்த எவரும் இந்த படிப்பை முடித்து சான்றிதழ் பெறலாம். புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.”

பொதுவாகவே ஆன்லைன் படிப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ள இந்த காலத்தில், கூகிளின் இந்த கோர்ஸ் நிச்சயம் பயனுள்ளதாக பலருக்கு அமையும். கூகிளின் பல கோர்ஸ்களில் IT Support Specialist என்ற படிப்பு பிரபலமாக இருக்கிறது. இதன் சிறப்பே இதில் சேர, பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதே.


தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள எவரும் இந்த ஆன்லைன் The Google IT Certificate program-ல் சேர்ந்து, அதை வெற்றிகரமாக முடித்தால், நல்ல எதிர்காலமும், நல்ல சம்பளமும் காத்திருக்கின்றது என்கிறது கூகிள்.

இந்த கோர்சில் சேர மாதம் $49 அதாவது சுமார் ரூ.3,600 கட்டணம் செலுத்தவேண்டும். இதை முடிக்க 3 முதல் 6 மாதங்கள் ஆகும்.

கூகிளின் இந்த சான்றிதழ் படிப்பில், ஐடி துறையில் பணிபுரியத் தேவையான திறன்கள், உட்பட நெட்வொர்கிங், க்ளவுட் கம்யூட்டிங், யூஎக்ஸ் டிசைனர் போன்ற முக்கிய பிரிவுகளில் தொழில்நுட்பப் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது முற்றிலும் கூகிளின் தயாரிப்பு ஆகும்.

இன்போசிஸ், சிடிஎஸ், கூகிள் போன்ற 50 பிரபல ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பினை இந்த கோர்ஸ் மூலம் பெறமுடியும் என்று தெரிவிக்கிறது.

இதே போன்ற பல கோர்ஸ்களை கூகிள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அவை அனைத்தும் வேலைவாய்ப்பை குறி வைத்தும், இன்றைய சந்தைக்குத் தேவையான தொழில்நுட்பங்களை சார்ந்து இருக்கும் என்று தெரிகிறது.


மேலும் விவரங்களுக்கு: The Google IT Certificate program


தகவல் உதவி: கூகிள்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India