SBI ATM-இல் 10ஆயிரம் ரூபாய்க்கு மேல் இது இல்லாமல் எடுக்க முடியாது: வழிகள் இதோ!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இனி ரூ.10,000 அல்லது அதற்கு மேல் எடுக்க ஓடிபி (OTP) எனப்படும் ஒன்டைம் பாஸ்வேர்ட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள் ATM-களில் இனி ரூ.10,000 அல்லது அதற்கு மேல் எடுக்க ஓடிபி (OTP) எனப்படும் ஒன்டைம் பாஸ்வேர்ட் கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு நாடு முழுவதும் 24 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிக் கிளைகளையும் 63,906 ஏடிஎம் மையங்களையும் கொண்டுள்ளது. பணக்காரர்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் நம்பும் வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் மோசடிகளில் சிக்குவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
SBI சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் அவ்வப்போது ATM மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வங்கி ஏடிஎம்களில் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நடைபெற்று வரும் மோசடிகளை தவிர்க்கும் விதமாக புதிய கட்டுப்பாடு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
பணம் எடுக்க இனி OTP கட்டாயம்:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களை மோசடியான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்க ஒன்டைம் பாஸ்வேர்ட் (OTP) பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான சேவையை 2020ல் அறிமுகப்படுத்தியது.
ஏடிஎம் பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்தவும், பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்றவும்தான் இந்த விதிமுறையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கொண்டுவந்துள்ளது. SBI அறிவிப்பின் படி,
வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையை முடிக்க ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது OTP எண்ணை கட்டாயம் உள்ளிட வேண்டும்.
OTP என்பது கணினியால் உருவாக்கப்பட்ட நான்கு இலக்க எண்ணாகும், இது வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். ஒருமுறை மட்டுமே செல்லுபடியாகும் இந்த OTP எண் ஆனது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக பணம் எடுப்பதை உறுதிபடுத்துகிறது.
டிசம்பர் 26, 2019 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த வசதி ஜனவரி 1, 2020 முதல் அனைத்து SBI ஏடிஎம்களிலும் கொண்டு வரப்படும் என்று அறிவித்தது.
"ஏடிஎம்களில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறோம். இந்த புதிய பாதுகாப்பு முறை 2020 ஜனவரி 1 முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் பொருந்தும்," என குறிப்பிடப்பட்டிருந்தது.
விரைவில் பல வங்கிகளும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க இந்த முறையை பின்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OTP மூலம் பணத்தை எடுப்பது எப்படி:
• எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, உங்கள் டெபிட் கார்டு மற்றும் ஃபோன் இரண்டையும் உங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
• உங்கள் டெபிட் கார்டைச் செருகிய பின், ATM பின் மற்றும் திரும்பப் பெற்ற தொகையை உள்ளிட்ட உடனேயே OTP கேட்கப்படும்.
• உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் OTPயைப் பெறுவீர்கள்.
• ATM திரையில் உங்கள் மொபைலில் பெறப்பட்ட OTPயை உள்ளிடவும்.
• நீங்கள் சரியான OTP ஐ உள்ளீடு செய்தவுடன், பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைந்து, குறிப்பிட்ட தொகை ஏடிஎம் இயந்திரம் மூலம் வழங்கப்படும்.