ரூ.18,300 கோடி: முதல் நாளே அமர்க்களமாக தொடங்கிய பேடிஎம் ஐபிஓ!
ரூ.402.65 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை விற்கும் விஜய் சேகர் ஷர்மா!
இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் ஆன்லைன் பேமெண்ட் மற்றும் நிதிச் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக ஐபிஓ வெளியிட உள்ளது.
பேடிஎம் நிறுவனம் இன்று சுமார் 18,300 கோடி ரூபாய் அளவிலான ஐபிஓ-வை வெளியிட்டு வருகிறது. முதல் நாள் 18 சதவீதம் சந்தா செலுத்தப்பட்டது.
ஒதுக்கப்பட்ட 89,98,076 பங்குகளில் 43,65,420 பங்குகள் சில்லறை விற்பனைப் பகுதிக்கு சந்தா செலுத்தப்பட்டது. 4,83,89,422 விற்பனைக்கான மொத்தச் சலுகையில் 44,68,626 பங்குகள் சந்தா பெற்றுள்ளன.
பேடிஎம் ஐபிஓ ரூ.8,300 கோடி மதிப்பிலான புதிய ஈக்விட்டி பங்குகளை வழங்குவதையும், தற்போதுள்ள பங்குதாரர்களால் ரூ.10,000 கோடி அளவுக்கு விற்பனைக்கான சலுகையையும் (OFS) கொண்டுள்ளது.
ஒரு பங்குக்கு ரூ.2,149 என்ற விலையில் சந்தா செலுத்திய ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்கனவே ரூ.8,235 கோடி திரட்டியுள்ளது. குறிப்பாக பிளாக்ராக், கனடா பென்ஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு, சிங்கப்பூர் மற்றும் அபுதாபி சவ்ரின் பண்ட் ஆகிய நிறுவனங்கள் முக்கிய ஆங்கர் முதலீட்டாளராக முதலீடுகளை செய்துள்ளன.
ஐபிஓ ஒரு பங்கின் விலை ரூ.2,080 முதல் ரூ.2,150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் நவம்பர் 10-ஆம் தேதி வரை சந்தா பெற முடியும். சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு லாட் முதல் அதிகபட்சம் 15 லாட்டுகள் வரை ஏலம் எடுக்கலாம்.
அந்த வகையில், இன்று சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி 78 சதவீதமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களின் (non-institutional investors) ஒதுக்கப்பட்ட பகுதி 2 சதவீதமும் சந்தா செலுத்தப்பட்டது. மேலும் தகுதிவாய்ந்த qualified institutional buyers (QIBs) 2.63 கோடி பங்குகளில் 16.78 லட்சம் பங்குகள் ஏலம் எடுத்துள்ளனர்.
பேடிஎம் நிறுவனம் தனது 18,300 கோடி ரூபாய் ஐபிஓ-வில் 50 சதவீத பங்குகளை ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்துவருகிறது. அதேநேரம், பேடிஎம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் சீனாவின் ஆன்ட் குரூப் மற்றும் ஜப்பான் சாப்ட்பேங்க் ஆகியவை பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருந்த பெரும் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதேபோல் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா ரூ.402.65 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் மூலம் விற்கவுள்ளார்.