Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

குறைந்த கட்டண பேமெண்ட்களுக்காக UPI Lite wallet - Paytm அறிமுகம்!

UPI லைட் வாலட் வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனர்கள் தலா ₹500 வரை உடனடி பரிவர்த்தனைகளை எந்த வித சிக்கலுமின்றி செய்யலாம்.

குறைந்த கட்டண பேமெண்ட்களுக்காக UPI Lite wallet - Paytm அறிமுகம்!

Tuesday May 14, 2024 , 2 min Read

யுபிஐ மூலம் பணம் செலுத்துதல் என்பது இப்போது அன்றாடக் கொள்முதல்களில் பெரிய பழக்கமாகியுள்ளது. சிறிய தொகை, பெரிய தொகை என்றில்லாமல் எதை வாங்கினாலும் Paytm, கூகுள் பே என்று டிஜிட்டல் வாலட்டைத்தான் மக்கள் பயன்படுத்துகின்றனர். இப்போது சிறிய கட்டணங்களைச் செலுத்துவதற்காக பேடிஎம் நிறுவனம் சிறிய டிஜிட்டல் வாலட் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பயனர்கள் தினசரி ரூ.4000 வரை சேர்த்து வைத்து சிறிய கட்டணத்தொகைகளையும் செலுத்தலாம். இதற்கு PIN தேவையில்லை என்பது கூடுதல் சவுகரியம்.

paytm

இது தொடர்பாக பேடிஎம் நிறுவனம் தனது இணையதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

UPI லைட் வாலட் வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனர்கள் தலா ₹500 வரை உடனடி பரிவர்த்தனைகளை எந்த வித சிக்கலுமின்றி செய்யலாம். மளிகை சாமான்களை வாங்குதல், வாகன ஸ்டாண்டுகளில் பணம் செலுத்துதல் அல்லது தினசரி பயணக் கட்டணங்கள் போன்ற சிறிய கட்டணங்களை அடிக்கடி கையாள்பவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பயனர்கள் இந்த லைட் வாலட்டில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரூ.2,000 வரை சேர்த்துக்கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளனர், இதன் மொத்த தினசரி சேர்ப்புத் தொகை ரூ.4000 என்பது குறிப்பிடத்தக்கது.

How Paytm Wallet makes payments easier, quicker and hassle-free

பேடிஎம் செயலியில் யுபிஐ லைட் வாலட்டை செயலாக்கம் செய்யும் வழிமுறை:

  • பேடிஎம் செயலிக்குச் சென்று ஹோம்பேஜில் உள்ள “UPI Lite Activate" என்ற ஐகானை கிளிக் செய்யவும்.

  • யுபிஐ லைட்டில் பயன்படுத்தக் கூடிய உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்வு செய்யவும்.

  • பணம் செலுத்தத் தொடங்க, UPI லைட்டில் நீங்கள் சேர்க்க விரும்பும் தொகையை உள்ளிடவும்.

  • உங்கள் UPI லைட் கணக்கை உருவாக்க MPIN-ஐ வெலிடேட் செய்யவும்.

  • உங்கள் UPI லைட் கணக்கு எளிதாக, ஒரு முறை பணம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், UPI லைட் வாலட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்த, வழக்கமாக செய்வது போல் ஏதேனும் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும் அல்லது தொடர்புகள் பட்டியலில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்யவும்.