இந்தியாவிலேயே முதன் முறையாக அரிதான ரத்த வகை கொண்ட நபர் கண்டுபிடிப்பு!
இந்தியாவிலேயே முதன் முறையாக EMM நெகட்டிவ் இரத்தக் குழு கொண்ட குஜராத் நபரை மருந்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உலகிலேயே 10வது நபராக இதய நோயாளியான குஜராத்தைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு இந்த வித்தியாசமான ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக EMM நெகட்டிவ் இரத்தக் குழு கொண்ட குஜராத் நபரை மருந்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உலகிலேயே 10வது நபராக இதய நோயாளியான குஜராத்தைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு இந்த வித்தியாசமான ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது.
4 வகையான ரத்த வகைகள்:
பொதுவாக மனித இரத்தத்தில் A, B, AB, மற்றும் O ஆகிய 4 வகையான ரத்த வகைகள் உள்ளன.
மனித உடலில் நான்கு வகையான இரத்தக் குழுக்கள் உள்ளன, அவை பொதுவாக A, B, O, Rh மற்றும் Duffy போன்ற 42 வகையான அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. "இஎம்எம்" (EMM) நெகட்டிவ் என்ற அந்த ரத்த வகையை மற்ற நான்கு இரத்த வகைகளான ஏ, பி, ஓ, அல்லது ஏபி உடன் வகைப்படுத்த முடியாது.
இருப்பினும், உலகளவில் 9 பேருக்கு மட்டுமே அவர்களின் இரத்தத்தில் அதிக ஆன்டிஜென்களைக் கொண்ட இஎம்எம் (EMM) ரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை ரத்தத்தைக் கொண்டவர்களால், யாருக்கும் ரத்த தானம் செய்யவோ அல்லது யாரிடமிருந்தும் ரத்தத்தை தானமாக பெறவோ முடியாது.
இந்தியாவிலேயே முதன் முறை:
குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவருக்கு இஎம்எம் ரத்த மாதிரி கண்டறியப்பட்டுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த 65 வயது இருதய நோயாளி, அறுவை சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்குத் தேவையான ரத்தத்தை சேகரிப்பதற்காக பரிசோதனை செய்த போது, இஎம்எம் ரத்த வகையைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டதாக சூரத்தில் உள்ள சமர்பன் ரத்த தான மையத்தின் மருத்துவர் சன்முக் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மாதிரி:
முதலில் முதியவரின் ரத்த மாதிரிகள் அகமதாபாத்தில் உள்ள பிரதான ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது ரத்த வகையை கண்டுபிடிக்க முடியாததால் சூரத்தில் உள்ள இரத்த தான மையத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன.
அங்கு அவரது மாதிரியை பரிசோதித்த குழுவினர் எந்த குழுவிற்கும் பொருந்தாததால், அதைத் தொடர்ந்து முதியவரின் இரத்த மாதிரிகள் மற்றும் அவரது உறவினர்களின் மாதிரிகளுடன் சோதிப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
"முதியவரின் இரத்த வகை இந்தியாவின் முதல் மற்றும் உலகின் பத்தாவது அரிதான இரத்தக் குழுவாக இருப்பது கண்டறியப்பட்டது,” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதியவரின் ரத்த மாதிரியில் இஎம்எம் இல்லாததால், சர்வதேச இரத்த மாற்று சங்கம், இவரது ரத்த வகையை இஎம்எம் நெகட்டீவ் என வகைப்படுத்தியுள்ளது.
'இந்தியாவின் இரத்த மனிதர்' - 58 வயதில் 174 முறை ரத்தம் கொடுத்த ஷபீரின் சாதனையும் வேதனையும்!