ஏலத்தில் விற்பனையான இளவரசி டயானாவின் உடை; எத்தனை கோடி தெரியுமா?
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை இந்திய மதிப்பில் 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை இந்திய மதிப்பில் 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
உலகப் புகழ் பெற்ற பிரபலங்களில் வெகு சிலர் மட்டுமே தங்களது மறைவிற்கு பிறகும் மக்கள் மனங்களில் வாழ்த்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் இங்கிலாந்து இளவரசி டயானா மிகவும் முக்கியமானவர். வேல்ஸ் இளவரசர் சார்லசின் முதல் மனைவியான டயானா பாரிஸில் 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி நடந்த சாலை விபத்து ஒன்றில் காலமானார்.
டயானா மரணித்து பல ஆண்டுகள் கடந்த பின்பும், இன்றளவு இங்கிலாந்து மட்டுமின்றி பல நாட்டு மக்களின் மனங்களிலும் வாழ்த்து கொண்டிருக்கிறார். இதற்கு சான்றாக சமீபத்தில் அவரது ஆடை ஒன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
கோடிகளில் ஏலம் போன ஆடை:
இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்திருந்த ஆடை சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான 'சாத்பைஸ்' நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியுள்ளது.
இந்நிலையில், அவர் அணிந்திருந்த கவுன் $80,000 முதல் $100,000 வரை விற்பனையாகும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஐந்து மடங்கு அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
பர்பில் நிறத்திலான வெல்வெட் கவுன் இந்திய மதிப்பில் ரூ.4.9 கோடிக்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது. அவர் தனது வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே இந்த கவுனை அணிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஊதா நிற கவுன்:
1991 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ வெளியாகியுள்ள படத்தில், வேல்ஸ் இளவரசி டயானா அணிந்திருக்கும் ஊதா நிற கவுன் ஏலத்திற்கு வந்துள்ளது. கவுனின் சிறப்பு அம்சங்களாக ஸ்ட்ராப்லெஸ் மற்றும் வெல்வெட் சில்க் மெட்டீரியல் உள்ளது. இந்த ஆடையை 1989 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்துள்ளார்.
இளவரசி டயானாவின் நீண்டகால ஆடை வடிவமைப்பாளராக எடெல்ஸ்டீன் இருந்துள்ளார். 1982 முதல் 1993 வரை, எடெல்ஸ்டீல் டயானாவுக்கு ஆடைகளை வடிவமைத்தவர் இவர் ஆவார்.
இந்த ஆடை முதன் முதலில் 1997ல் ஏலத்தில் $24,150 க்கு விற்கப்பட்டது. டயானா அந்த ஆண்டு ஏலம் விட முடிவு செய்த ஆடைகளில் இதுவும் ஒன்றாகும். ஏலத்தில் கிடைத்த வருமானம் எய்ட்ஸ் நெருக்கடி அறக்கட்டளைக்கும் ராயல் மார்ஸ்டன் மருத்துவமனைக்கும் சென்றது.
தொகுப்பு: கனிமொழி
ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்த செருப்புக்கு இவ்வளவு மதிப்பா? எவ்வளவு கோடிக்கு ஏலம் போயிருக்கு பாருங்க!