ஒரே நாளில் ரூ.342 கோடி சம்பாதித்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா; டைட்டன், பிசி ஜுவல்லரி பங்குகள் விலை உயர்வு!
2022 - 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சில பொருட்களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. சில பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி அறிவிப்பை தொடர்ந்து பல பொருட்களின் விலை குறையவும், அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட்டிற்கு பின் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட தாக்கத்தால் பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 342 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார்.
2022 - 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சில பொருட்களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. சில பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி அறிவிப்பை தொடர்ந்து பல பொருட்களின் விலை குறையவும், அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெட்டி எடுத்து பளபளப்பாக மாற்றப்படும் வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் மீதான சுங்க வரி 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வரி விகிதமானது 7.5 சதவீதமாக உள்ளது. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இமிடேஷன் நகைக்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை அடுத்து பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ரத்தின கற்கள், கவரிங் நகைகள், ஃப்ரோசன் மஸ்ஸல்ஸ், ஃப்ரோசன் ஸ்குவிட்ஸ், பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தில் ஆல்கஹால், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ், பெட்ரோலிய தயாரிப்புகளுக்கான ரசாயன பொருட்கள், ஸ்டீல் ஸ்கிராப்கள் மற்றும் அசிட்டிக் அமிலம் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய உள்ளது.
டைட்டன் நிறுவன பங்குகள்:
மத்திய பட்ஜெட்டில் வைரங்கள் மீதான வரிச்சலுகை குறித்த அறிவிப்பை தொடர்ந்து, முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன. பிப்ரவரி 1ம் தேதி மதியம் 1:15 மணியளவில் ஒரு பங்குக்கு 2,358.95 ரூபாயாக ஆக குறைந்ததை நிலையில், பட்ஜெட்டிற்கு பிந்தைய டைட்டன் நிறுவனப் பங்குகள் ரேஸில் முந்த ஆரம்பித்தன. ஒரு பங்கின் விலை 2,436.05 ஆக முடிந்தது.
பட்ஜெட்டால் பலனடைந்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா:
டைடன் நிறுவனத்தின் பங்கு விலையில் பட்ஜெட்டிற்கு பிந்தைய ஏற்றம் காரணமாக பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் நிகர மதிப்பு ரூ.342 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டைட்டன் நிறுவனத்தின் அக்டோபர் முதல் டிசம்பர் 2021 காலாண்டுக்கான பங்குதாரர் பட்டியலின் படி, ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா ஆகியோர் பங்குகளை வைத்துள்ளனர். ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 3,57,10,395 டைட்டன் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளார், இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 4.02 சதவீதம் ஆகும்.
அவரது மனைவியான ரேகா ஜூன்ஜூன்வாலா 95,40,575 டைட்டன் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளார். இது நிறுவனத்தில் 1.07 சதவீத பங்குகள் ஆகும். டாடா குழுமத்தின் முதன்மையான நிறுவனமான டைட்டன் நிறுவனத்தின் 4,52,50,970 நிறுவனப் பங்குகள் அதாவது 5.09 சதவீத பங்குகள் ராகேஷ் ஜூன்ஜூன் வாலாவிடம் இருப்பது குறிப்பிட்டத்தக்கது.
பட்ஜெட்டிற்கு பிந்தைய டைடன் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ரூ.75.75 ஆக நிறைவடைந்தது. எனவே, ஜுன்ஜுன்வாலா சுமார் ரூ.342 கோடி (₹75.75 x 45250970) சம்பாதித்துள்ளார்.
பிசி ஜுவல்லர்:
பிசி ஜுவல்லர் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து 26.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 27 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 26.10 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 32.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 19.90 ரூபாயாகும். இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கின் விலையும் 5 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு மேலாகவும், 20 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றன.