‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஜியோ!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கான பிரத்யேக டேட்டா ப்ளானை அறிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக, வீட்டில் இருந்தே பணியாற்றும் தொழில்முறை நபர்களுக்காக, ரிலையன்ஸ் ஜியோ, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் பிரத்யேகத் திட்டத்தை அறிவித்துள்ளது.
ரூ.251 எனும் கட்டணத்தில் இந்த டேட்டா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, வாடிகையாளர்கள் தினமும், 2 GB 46 டேட்டாவை பயன்படுத்தலாம். 100 சதவீத டேட்டாவை பயன்படுத்தி முடித்த பிறகு, வாடிக்கையாளர்கள் நாள் முழுவதும், 64 kbps எனும் குறைந்த வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
இந்த பேக் 51 நாட்கள் வேலடிட்டி கொண்டிருக்கும். இதற்கான கட்டணம் ரூ.251. இந்த பேக், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு பொருந்தாது.
ஜியோ நிறுவனம் அண்மையில் குறிப்பிட்ட டேட்டா வவுச்சர் திட்டங்களை மேம்படுத்தி அறிவித்திருந்தது. அதே கட்டணத்தில், அதிக டேட்டா மற்றும் இலவச ஜியோ அல்லாத குரல் அழைப்பு நிமிடங்களை வழங்கியிருந்தது. ஜியோ வாடிக்கையாளர் தனது கணக்கில் ஆக்டிவ் திட்டம் இருந்தால், 4ஜி டேட்டா வவுச்சரை ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.
தற்போதைய மேம்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 ஆகிய பிரிபெய்டு டேட்டா வவுச்சர்கள் 800 MB, 2GB, 6GB மற்றும்12 GB அதிவேக டேட்டா கொண்டிருக்கும். இந்த வவுச்சர்கள், ஜியோ அல்லாத எண்களுக்கான குரல் அழைப்புகளையும் கொண்டிருக்கும். மேலும், 75, 200, 500 மற்றும் 1000 நிமிட டாக்டைம் கொண்டிருக்கும்.
கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்படும் நிலையில் ஜியோ நிறுவனம் இந்த டேட்டா திட்டங்களை வாடிக்கையாளர்கள் நலனுக்காக அறிவித்துள்ளது.
தொகுப்பு: சைபர்சிம்மன்