Reliance Q3 results: மூன்றாம் காலாண்டில் ரூ.17,000 கோடி நிகர லாபம் ஈட்டிய ரிலையன்ஸ்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த Q3 இல் ரிலையன்ஸ் ரூ. 17,265 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த Q3 இல் ரிலையன்ஸ் ரூ. 17,265 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிகர லாபம் 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 9.3 சதவீதம் உயர்ந்து ரூ.17,265 கோடியாக உள்ளது. இந்த காலாண்டில் குழும நிறுவனங்களின் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,27,970 கோடியாக பதிவாகியுள்ளது.
நிகர லாபம்:
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2023-24 நிதியாண்டிற்கான Q3 (அக்டோபர்-டிசம்பர்) முடிவுகளை அறிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், வருவாய் 3.2 சதவீதம் அதிகரித்து ரூ.2,40,532 கோடியிலிருந்து ரூ.2,48,160 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த Q3 இல், நிறுவனத்தின் EBITDA 16.7 சதவிகிதம் வளர்ந்தது. இந்த வளர்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் பங்கு அதிகம். நிறுவனத்தின் தேய்மானம் 26.7 சதவீதம் அதிகரித்து ரூ.12,903 கோடியாக உள்ளது. அதிக கடன் பாக்கிகள் மற்றும் வட்டி விகிதங்கள் காரணமாக நிதி செலவுகள் 11.3 சதவீதம் அதிகரித்து ரூ.5,789 கோடியாக உள்ளது.
மூலதன செலவு:
2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த மூலதனச் செலவு ரூ.30,102 கோடியை எட்டியுள்ளது. நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க் அறிமுகம், சில்லறை உள்கட்டமைப்பு விரிவாக்கம், புதிய ஆற்றல் வணிகத்தில் முதலீடு போன்றவற்றின் காரணமாக மூலதனச் செலவு அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ Q3 முடிவுகள்:
ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் 2023-24 நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 11.6 சதவீதம் அதிகரித்து ரூ.5,445 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் 3 சதவீதம் அதிகரித்து ரூ.5,208 கோடியாக உள்ளது. செயல்பாடுகள் மூலம் ஜியோவின் வருவாய் 11.3 சதவீதம் அதிகரித்து ரூ.24,892 கோடியிலிருந்து ரூ.27,697 கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி நெட்வொர்க்கில் வரம்பற்ற டேட்டாவை வழங்குவதன் மூலம் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதன் மூலம் ஜியோ ARPU 2 சதவீதம் அதிகரித்து ரூ.181.7 ஆக இருந்தது.
பிற நிறுவனங்களின் முடிவுகள்:
அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமும் மூன்றாம் காலாண்டு முடிவுகளை அறிவித்தது.
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.74,373 கோடி. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 23.8 சதவீதம் வளர்ச்சி காண்டுள்ளது. மளிகை, ஃபேஷன், லைஃப்ஸ்டைல் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதன் நிகர லாபமும் 32 சதவீதம் அதிகரித்து ரூ. 3165 கோடியாக உள்ளது.