'நாம் இனி மற்றவர்களின் நகலை உருவாக்கப் போவதில்லை; இனி நாம் தான் அந்த நிஜம்’ - யுவர்ஸ்டோரி ஷ்ரத்தா சர்மா!
கடந்த 10 மாதங்களில், 34 யூனிகார்ன் நிறுவனங்களை பட்டியலில் இணைத்துள்ளதோடு, 1100 க்கும் மேற்பட்ட ஒப்பங்களில் 26 பில்லியன் டாலருக்கும் மேல் நிதி திரட்டிய நிலையில் இந்தியாவின் தருணம் வந்து விட்டது.
“இந்தியாவுக்கான உபெர் அல்லது இந்தியாவுக்கான ஏர்பிஎன்பி நிறுவனத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...”
இந்திய ஸ்டார்ட் அப் பரப்பை பின் தொடர்பவர் என்றால், இது போன்ற வாசகத்தை, ஸ்டார்ட் அப் முன்னெடுப்புகள், முதலீட்டாளிட்டாளர் கோரிக்கை மற்றும் யுவர்ஸ்டோரி டெக் 30 காட்சிவிளக்கங்களின் போது நீங்கள் கேட்டிருக்கலாம்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ஐடியாக்களை விளக்கிக் கூற அல்லது, தங்கள் வர்த்தக மாதிரியை புரிய வைக்க, சிலிக்கான வேலி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அல்லது சீனா ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உதாரணமாக சொல்லப்படுவது வழக்கம்.
ஆனால், இன்று கடந்த 10 மாதங்களில், 34 யூனிகார்ன் நிறுவனங்களை பட்டியலில் இணைத்துள்ளதோடு, 1100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் 26 பில்லியன் டாலருக்கும் மேல் நிதி திரட்டிய நிலையில் இந்தியாவின் தருணம் வந்து விட்டது.
நாம் இனியும், ஏதோ ஒன்றின் அல்லது எங்கோ இருக்கும் ஒன்றின் X-ஸை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. இப்போது நாம் தான் X.
சொல்லப்போனால் அண்மையில் லத்தீன் அமெரிக்க நிறுவனர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, அவர் எங்கள் பகுதிக்கான பைஜூசை உருவாக்க வேண்டும் என கூறியதை கேட்டு பூரிப்படைந்தேன்.
இவை ஒன்றும் விதிவிலக்கான நிகழ்வுகள் அல்ல. இந்தியாவுக்குள் கூட, உள்ளடங்கிய பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் எங்கள் பகுதிக்கான ஸ்விக்கி அல்லது ஓலாவை உருவாக்குவோம் என்கின்றன.
சிலிக்கான வேலியை குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும், இதை இந்திய ஸ்டார்ட் அப்'களின் லட்சிய உணர்வின் அடையாளம் என்பேன். இந்த ஆண்டு நாங்கள் வெளியிட்டுள்ள டெக் 30 பட்டியலை பார்க்கும் போது நான் சொல்வதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இந்த பட்டியல் இந்திய நிறுவனர்களின் புதுமையாக்கத்தின் அகலத்தை உணர்த்துவதாகk கருதுகிறோம்.
கடந்த 9 மாதங்களில் திரட்டப்பட்டுள்ள சாதனை அளவிலான முதலீடு, உலகலாவிய பெருந்தொற்று உள்ளிட்ட எந்த தடையும் தங்களை சோர்வடைய வைக்க இந்திய ஸ்டார்ட் அப்'கள் தயாராக இல்லை என்பற்கான சான்றாக அமைகிறது.
அதோடு, இந்தப் படை தனது சாதனைகளை நினைத்து நின்றுவிடவில்லை. எதிர்காலத்தை நோக்கியபடி, அடுத்து என்ன எனக் கேட்டுக்கொள்கிறோம். இதைவிட இன்னும் சிறப்பாக எப்படி செயல்பட முடியும்? நிகரில்லா வெற்றிக்காக இந்தச் சூழலை தயாராக்க எதிர்காலத் தேவைக்கேற்ப என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கிறோம்.
நாம் பெரிய அளவில் கனவு காண்பதில்லை அல்லது மேற்கு நிகரான தரம், திறமை அல்லது இலட்சியம் கொண்டிருப்பதில்லை என முன்னர் கூறப்பட்டு வந்தது. ஆனால், நம்முடைய ஸ்டார்ட் அப்கள் இப்படி சொல்வது தவறு என உணர்த்தி, இந்தியாவை இனியும் கழித்துக்கட்ட முடியாது என உணர்த்தியுள்ளன.
நம்முடைய கதை இப்போது தான் துவங்கியுள்ளது...
இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் இன்னொரு சிறந்த ஆண்டு மற்றும், நம்முடைய வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சூழலின் அடையாளமாக, டெக் 50 பட்டியலாக உருவாகியுள்ள, நம்முடைய அடுத்த 30 பட்டியலை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் யூனிகார்ன் தருணத்திற்காகக் காத்திருக்கும் இந்த ஸ்டார்ட் அப்களிடம், நீங்கள் இந்தியாவின் என்ன நிறுவனம் மற்றும் எதை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்க விரும்புகிறேன்.
இந்த கேள்விக்கான பதில் நீங்கள் செய்ய இருப்பதில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். உலகின் மீதும் தாக்கம் செலுத்தும்.
நாம் செயல்படுத்துவோம்...!
ஷ்ரத்தா சர்மா