Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தினமும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள்: இந்த ஆப்’ல் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள்!

இந்த ஆப் மூலம் சேட் செய்து ஈசியாக இங்கிலீஷ் கற்றுக் கொள்ளுங்கள்.

தினமும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள்: இந்த ஆப்’ல் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள்!

Friday March 06, 2020 , 4 min Read

இந்தியாவில் ஆங்கிலம் என்பது மொழி மட்டுமல்ல. இதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டால் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளமுடியும் என்று ஏராளமானோர் திடமாக நம்புகின்றனர்.


கடந்த சில ஆண்டுகளாகவே மெசேஜிங் என்பது மக்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினர், சக பணியாளர்கள் போன்றோருடன் உரையாடும் விதத்தை அடிப்படையாகவே மாற்றியமைத்துள்ளது. உலகளவில் சமூக வலைதள பயனர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் என பிசினஸ் இன்சைடர் இண்டெலிஜென்ஸ் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


2018-ம் ஆண்டு முதல் வாட்ஸ் அப், வீசாட், ஃபேஸ்புக் மெசெஞ்சர், கூகுளின் ஆர்சிஎஸ், ஆப்பிளின் ஐமெசேஜ் என கிட்டத்தட்ட ஒவ்வொரு மெசேஜிங் சானலும் வாடிக்கையாளர்களையும் கடந்து வணிகங்களைச் சென்றடைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் அனைத்து அளவுகளிலும் செயல்படும் நிறுவனங்களும் நவீன மெசேஜிங் அனுபவங்களை தங்களது செயலி மற்றும் வலைதளங்களில் இணைத்துக்கொண்டுள்ளது.

இன்றைய சூழலில் ஆங்கில அறிவு என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் இந்தத் தேவையை உணர்ந்து செயல்படுகிறது. சாட்பாட் பாணியிலான அட்டர் (Utter) என்கிற மொபைல் கற்றல் செயலி அதிகரித்து வரும் டிஜிட்டல் ப்ளூ காலர் பணியாளர்களுக்கு ஆங்கில மொழித்திறனை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
1

முன்பு Sling என்றழைக்கப்பட்ட Utter 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இரண்டாண்டு கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பின்னர் இந்தத் தளம் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆதரவளிக்கும் ஸ்டார்ட் அப் ஆக்சிலரேடர் ஜியோஜென்நெக்ஸ்ட் இதற்கு வழிகாட்டியது. இந்தச் செயலி இந்தியாவில் ஆங்கிலம் பேசாத மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு அவர்களது தாய்மொழியிலேயே சாட் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் சேவையளிக்கும் இந்தச் செயலி சாட்பாட் மட்டுமின்றி நேரடியாக பயிற்சியாளர்களைக் கொண்டு உள்ளடக்கங்களை கற்றுக்கொடுக்கிறது. வணிகங்களைப் பொறுத்தவரை எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உரையாடல் வடிவில் பயிற்சியளிக்கிறது.

புனேவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் 2019 கூகுள் ப்ளே எக்சலன்ஸ் ப்ரோக்ராமில் பங்களிக்க தேர்வானது. இந்தச் செயலி ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ப்ளேஸ்டோரில் 4.2 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் கற்றுக்கொள்ள இந்தச் செயலி எந்த அளவிற்கு உதவுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தச் செயலியை நாங்கள் ஆராய்ந்தோம்.


இந்தச் செயலியைப் பயன்படுத்த போன் நம்பர் அல்லது இ-மெயில் ஐடி மூலம் லாக் இன் செய்யவேண்டும். கணக்கு தொடங்காமல் உங்களால் பயன்படுத்த முடியாது. லாக் இன் செய்த பிறகு இலக்கணம், உரையாடல், வணிக ஆங்கிலம் என உங்களுப் பிடித்த பாடங்களைத் தேர்வு செய்யலாம். பாடங்களில் பல்வேறு தலைப்புகள் இருக்கும். ஒரு தலைப்பை தேர்வு செய்த பிறகு செயலி ஒரு சாட்பாட் ஸ்கிரீனை ஓபன் செய்யும்.

சாட் இடைமுகம்

சாட் ஸ்கிரீன் மற்ற சாட் விண்டோ போன்றே காட்சியளிக்கும். இது பாரம்பரிய கற்றல் அனுபவம் போல் இருக்காது. நாங்கள் பயன்படுத்தத் தொடங்கியதும் “ஹாய்! எப்படி இருக்கிறீர்கள்?” என்கிற கேள்வியுடன் சாட் தொடங்கியது. திரையில் “நான் நன்றாக இருக்கிறேன், “நான் சிறப்பாக இருக்கிறேன்,” என இரண்டு பதில்கள் காணப்பட்டது. நாங்கள் இரண்டாவது பதிலைத் தேர்வு செய்தோம். இந்த பதில் ‘சிம்பிள் ப்ரெசெண்ட் டென்ஸ்’ என்றும் பாட் பதிலளித்தது.

சாட் பதில்கள் சுருக்கமாகவும் விரைவாகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளது. எனவே நாங்கள் ‘புரிந்தது’ என்பதை தேர்வுசெய்தோம். சாட்பாட் தொடர்ந்து சிம்பிள் ப்ரெசெண்ட் வாக்கியங்கள் குறித்து விவரித்தது. எங்களுக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது.

உங்களது பிராசசிங் நேரத்தையும் இந்த சாட்பாட் கவனித்துக் கொள்கிறது. மூன்று முறை பிங் செய்த பிறகு “மேலும் ஆராய முடியுமா?” என்கிற தேர்வு காணப்படும். உங்களுக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் இதைத் தேர்வு செய்துகொள்ளலாம். சாட்பாட் பயனர் இடைமுகம் மிகவும் எளிதாகவும் சிறப்பாகவும் உள்ளது.


தேர்வுகளும் சாட் வடிவிலேயே இருக்கும். இதில் திருத்தங்கள் செய்யும் அம்சம் இருப்பதால் பயனர் தொடர்ந்து இணைப்பில் இருந்து தொடர்புகொள்ளும் திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.

2
வாட்ஸ் அப் குரல்வழி குறிப்புகள் போன்றே ஆங்கிலம் பேசுவதற்கான பாடங்களில் குரல் வழி குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளது. குரல்வழி குறிப்புகள் இந்திய உச்சரிப்பில் இருக்கும் என்பதே இதன் சிறப்பம்சம். காபி சந்திப்பின் போதோ அலுவலகத்திலோ அல்லது விளக்கக் காட்சிகளின் போதோ என்ன பேசலாம் என்பது போன்ற நடைமுறைக்குரிய பாடங்கள் உள்ளது. சாட்டில் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

Utter பாடத்திட்டம்

தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பாடங்கள் இந்தச் செயலியில் உள்ளன. படித்தல், எழுதுதல், பேசுதல் போன்றவற்றில் நீங்கள் நிபுணத்துவம் பெறவேண்டும் என்பதே இதன் நோக்கம்.


மொழிபெயர்ப்பு, பொருள், பேச்சுப் பயிற்சி, சுய வேகத்தில் கற்றல் போன்ற அம்சங்கள் எளிதாகவும் திறம்படவும் கற்க உதவுகிறது. பயனர்கள் தங்களது தாய்மொழியில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள Utter செயலி உதவுகிறது. தற்சமயம் ஆங்கிலம், இந்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், வங்காளம், ஒடியா, அசாமிய மொழி ஆகிய மொழிகளில் நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்.


சீன மொழி, ஸ்வீடிஷ் மொழி, ஃப்ரென்சு உள்ளிட்ட அந்நிய மொழிகள் உட்பட மொழிபெயர்ப்புகளுக்கும் இந்தச் செயலி பயன்படும்.

Utter ஃப்ரீமியம் மாதிரியில் செயல்படுகிறது. சில பாடங்கள் இலவசமாக கிடைக்கும் நிலையில் சில ப்ரீமியம் பாடங்களுக்கு பயனர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். மாத சந்தாவிற்கான கட்டணம் 99 ரூபாயாகவும் ஆண்டு சந்தாவிற்கான கட்டணம் 599 ரூபாயாகவும் உள்ளது. கட்டண அடிப்படையில் வழங்கப்படும் பதிப்பில் ஒவ்வொரு பயனருக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சியளிக்கும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

கருத்து

இந்தச் செயலி மிகவும் சிறப்பாக உள்ளது. இன்றைய தலைமுறையினர் மெசேஜிங் மீது ஆர்வம் காட்டுவதால் அதைக் கொண்டு கற்பிக்கும் விதம் சிறப்பாகவே உள்ளது. அத்துடன் புகைப்படங்களும், குரல்வழி குறிப்புகளும் சாட் சார்ந்த பாடங்களும் கற்றல் முறைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

இந்தச் செயலியை நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதன் புதுமையான பயனர் இடைமுகத்திற்காக ஐந்து நட்சத்திர மதிப்பீடு வழங்குகிறோம். ஆங்கிலம் பேசும், படிக்கும், எழுதும் திறன்களை எளிதாக மேம்படுத்திக் கொள்ள இந்தச் செயலி உதவுகிறது. சாட்பாட் உடன் 10 நிமிடங்கள் சாட் செய்வது படிக்கும் உணர்வையே ஏற்படுத்துவதில்லை.

Utter பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக உள்ளது. அதிலுள்ள பயிற்சிகள், பாடதிட்டம், அகராதி, மதிப்பெண், முன்னேற்றம் போன்றவை உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். தேவைப்பட்டால் ஆங்கில மொழி நிபுணர்கள் உங்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பார்கள்.


உங்களுக்கு சாட்டிங் பிடிக்குமானால், ஆங்கிலம் கற்க விரும்புகிறீர்கள் என்றால் இந்தச் செயலியை நீங்கள் கட்டாயம் பயன்படுத்தலாம்.


ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷினி | தமிழில்: ஸ்ரீவித்யா